முதலீட்டு சந்தையில் ஒவ்வொரு காலத்திலும் ஒவ்வொன்று ஆதிக்கம் செலுத்தும், அந்த வகையில் சில வருடங்களுக்கு முன்பு தங்கம், டாலர், பங்குச்சந்தை காட்டிலும் கிரிப்டோகரன்சி பெரிய அளவில் அதிக்கம் செலுத்தி வந்தது. இதேவேளையில் கிரிப்டோ சார்ந்து பல விதிமான மோசடிகளும் நடந்து வந்தது, இப்படியிருக்கையில் தான் இந்திய அரசு கிரிப்டோ மீதான முதலீட்டை கடுப்படுத்த கடுமையான வரி மற்றும் விதிமுறைகளை விதித்தது.
இந்த நிலையில் அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்ற பிறகு, அமெரிக்க அரசு கிரிப்டோகரன்சி மீதான தனது முந்தைய எதிர்ப்பு நிலையை மாற்றி, கிரிப்டோவுக்கு மிகப்பெரிய ஆதரவாளராக மாறியுள்ளது. இது மட்டும் அல்லாமல் அமெரிக்காவில், டிரம்ப் அரது பிட்காயின் உட்பட இதர பிற கிரிப்டோகரன்சிகளை வாங்கி அரசின் சொத்து இருப்பாக உருவாக்கவும், கிரிப்டோ-வுக்கு ஆதரவாக சட்டங்களும் திட்டமிடப்பட்டு வருகின்றன. அமெரிக்க அரசின் இந்த நிலைப்பாடு உலகளாவிய கிரிப்டோ சந்தை முதலீட்டாளர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் இந்த நிலைப்பாட்டுக்கு பின்பு உலகளாவிய கிரிப்டோகரன்சி மாற்றங்களை உன்னிப்பாக கவனித்து வருவதாக ஆர்பிஐ ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா தெரிவித்துள்ளார். மத்திய அரசின் ஒப்புதலுடன், விரைவில் கிரிப்டோகரன்சி குறித்த ஒரு கொள்கை ஆவணம் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆர்பிஐ கவர்னர் சஞ்சய் மல்ஹோத்ரா, பிஜேபி நாடாளுமன்ற உறுப்பினர் பாரத்ருஹரி மஹ்தாப் தலைமையிலான நாடாளுமன்ற நிதி நிலைக்குழுவில், 'இந்தியாவின் மாறிவரும் பொருளாதாரத்தில் ஆர்பிஐயின் பரிணாம பங்கு' என்ற தலைப்பில் உரையாற்றினார். இந்த கூட்டத்தில், கிரிப்டோகரன்சி குறித்த ஆவணம் தயாரிக்கப்பட்டு வருவதாகவும், இது இன்னும் ஆரம்ப கட்டத்தில் உள்ளதாகவும் மல்ஹோத்ரா தெரிவித்தார்.
கிரிப்டோகரன்சி மூலம் பணமோசடி மற்றும் தீவிரவாதத்திற்கு நிதியுதவி என தவறாக பயன்படுத்தப்படுவதற்கு வாய்ப்புள்ளதாக ஆர்பிஐ முன்பே எச்சரித்திருந்தது. இந்த சூழ்நிலையில் ஆர்பிஐ கவர்னர் சஞ்சய் மல்ஹோத்ரா நாடாளுமன்ற நிலைக்குழுவில் உள்நாட்டு டிஜிட்டல் பரிவர்த்தனைகளில் UPI தளம் திறம்பட செயல்படுவதால், கிரிப்டோகரன்சிகளின் தேவை இல்லை என்று அவர் குறிப்பிட்டதாக எக்னாமிக் டைம்ஸ் பத்திரிக்கை தெரிவித்துள்ளது.

ரிசர்வ் வங்கியின் இந்த நிலைப்பாடு, இந்தியாவின் கிரிப்டோ முதலீட்டு சந்தையில் எச்சரிக்கையான அணுகுமுறையை தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவில் கிரிப்டோகரன்சி உள்ளிட்ட அனைத்து விதிமான விர்ச்சுவல் கரன்சி முதலீட்டின் வாயிலாக கிடைக்கும் வருமானத்திற்கு 30 சதவீதம் வரி விதிக்கப்படுகிறது. இதோடு 4 சதவீதம் சர்சார்ஜ் மற்றும் செஸ் உள்ளது.
உலகளாவிய அளவில், கிரிப்டோகரன்சி சந்தை, டொனால்ட் டிரம்பின் சமீபத்திய அறிவிப்புகளால் புதிய உற்சாகத்தை பெற்றுள்ளது என்றால் மிகையில்லை. பிட்காயின் 118,856.47 டாலர் என்ற புதிய உச்சத்தை இன்றைய வர்த்தகத்தில் எட்டப்பட்டு உள்ளது.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!



Click it and Unblock the Notifications