அமெரிக்க அதிபராக பதவியேற்றிருக்கும் டொனால்டு ட்ரம்ப், அமெரிக்காவுடன் வர்த்தகம் செய்யும் அனைத்து நாடுகளுக்கும் ரெசிபிராக்கல் வரி விதிப்பை அறிமுகம் செய்துள்ளார். அதாவது ஒரு நாடு அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு அதிக வரி விதித்தால், அதற்கு ஈடாக அமெரிக்காவும் அதே போல வரிவிதிப்பு செயல்முறையை கையில் எடுக்கும். இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடனான சந்திப்புக்கு சற்று நேரத்திற்கு முன்பு இந்த முடிவெடுக்கப்பட்டது. அதோடு ட்ரம்ப்பின் இந்த முடிவு நியாயமான வர்த்தக ஒப்பந்தங்களுக்கு வழிவகுக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
Reciprocal Tariffs அறிமுகப்படுத்தப்பட்டால் என்ன நடக்கும்?: அமெரிக்க அதிபரின் இந்த புதிய வர்த்தக கொள்கை இந்தியாவையும் பாதிக்கும் வாய்ப்புள்ளது. உதாரணமாக இந்தியா அமெரிக்காவிற்கு பல்வேறு பொருட்களை ஏற்றுமதி செய்கிறது. அதில் உணவுப் பொருட்கள், காய்கறிகள், ஆடைகள், மின் உபகரணங்கள், ரத்தின கற்கள், நகைகள், மருந்துகள், கார்கள், இரும்பு மற்றும் ஸ்டீல் போன்ற பல பொருட்கள் அடங்கும்.

அமெரிக்கா இந்தப் பொருட்களுக்கு அதிக வரி விதித்தால் இந்திய பொருட்களின் விலை அமெரிக்கா சந்தைகளில் அதிகரிக்கும். இதனால் அமெரிக்க வாசிகள் இந்திய பொருட்களை விட்டு வேறு விலை குறைந்த பொருட்கள் அல்லது வேறு நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களை வாங்குவதற்கு வாய்ப்புள்ளது. இதன் காரணமாக இந்திய ஏற்றுமதியாளர்களின் விற்பனை வீழ்ச்சி ஏற்படும். அதோடு விற்பனை குறைந்தால் இந்திய உற்பத்தியாளர்களுக்கு வருவாய் குறையலாம். இதனால் இந்திய நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களும் பாதிக்கப்படும் வாய்ப்புள்ளது.
அமெரிக்கா இந்தியாவை குறி வைக்கிறதா?: அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யப்படும் இந்திய பொருட்களுக்கு அதிக வரி விதிப்பு இருப்பதாக கூறப்படுகிறது. அதாவது இந்தியா, அமெரிக்க பொருட்களுக்கு விதிக்கும் வரியை விட.. அமெரிக்கா இந்திய பொருட்களுக்கு குறைவான வரியே விதிக்கிறது.
உதாரணமாக இந்தியா அமெரிக்க பொருட்களுக்கு 9.5% வரி விதிக்கிறது. அதே சமயம் அமெரிக்கா இந்திய பொருட்களுக்கு வெறும் 3 சதவீதம் மட்டுமே வரி விதிக்கிறது. இது போன்ற வர்த்தகம் நியாயமற்றது என்று அதிபர் ட்ரம்ப் கூறியுள்ளார். எனவே இந்தியா தனது வரியை குறைக்க வேண்டும் அல்லது அதற்கு பதிலாக அமெரிக்காவிற்கு அதிக வரியை செலுத்த வேண்டும் என்று இந்த புதிய Reciprocal Tariff முறையை அதிபர் ட்ரம்ப் கையில் எடுத்துள்ளார்.
இந்தியா என்ன செய்யப் போகிறது?: 30-க்கும் மேற்பட்ட அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யப்படும் பொருட்கள் மீதான வரியை குறைப்பது குறித்தும், எரிசக்தி பொருட்களின் இறக்குமதி வரியை அதிகரிப்பது குறித்தும் இந்தியா பரிசீலித்து வருகிறது. இருப்பினும் அமெரிக்காவுடனான வர்த்தக உறவுகள் சிக்கலாக இருப்பதால் அதிக வரி நடைமுறையில் இருந்தால் இந்தியாவில் வணிகங்கர்கள் சிரமப்படும் வாய்ப்பும் நிலவி வருகிறது.
நிறுவனங்களுக்கு டிரம்பின் முக்கிய தகவல்: இந்த வரிமுறைக்கு எதிராக ட்ரம்ப் ஒரு மாற்று வழியையும் பரிந்துரைத்துள்ளார். அதாவது இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்வதற்கு பதிலாக நிறுவனங்கள் அமெரிக்காவில் தங்கள் தொழிற்சாலைகளை உருவாக்கிக் கொள்ளலாம். அப்படி உருவாக்கினால் நீங்கள் எந்த வரியும் செலுத்த தேவையில்லை என்றும் கூறியுள்ளார். இது போன்ற விஷயம் அமெரிக்காவில் வேலை வாய்ப்புகளை அதிகரிக்கும் என்று ட்ரம்ப் நம்புகிறார்.
இந்த Reciprocal Tariff முறை விரைவில் அமலுக்கு வரவுள்ளது. இது இந்திய பொருளாதாரத்தில் கணிசமான பாதிப்பை ஏற்படுத்தலாம். இந்தியாவில் ஏற்றுமதி குறைந்தால் தொழில்கள் வணிகங்கள் பாதிக்கப்படலாம் அதே நேரம் அமெரிக்காவில் உள்ள அன்றாட நுகர்வோர் இந்திய பொருட்களுக்கு அதிக விலை கொடுக்க வேண்டி இருக்கும் நிலையும் உள்ளது. தற்போது அமெரிக்க இந்திய வர்த்தக உறவுக்கு ஒரு சவாலான சூழல்தான் நிலவுகிறது.
More From GoodReturns

ஆனந்த் ஸ்ரீனிவாசன்: படிச்சு படிச்சு சொன்னேன்.. யாரும் கேட்ல 'Big Drop'.. வெள்ளி அதோ கதி..!!

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!



Click it and Unblock the Notifications