அமெரிக்க அதிபரான டொனால்ட் டிரம்ப் கடந்த 5 நாட்களில் அடுத்ததடுத்து ஷாக் கொடுக்கும் அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். ஒருப்பக்கம் அமெரிக்கா - சீனா மத்தியிலான வர்த்தக பேச்சுவார்த்தை சுமுகமாக முடிந்த நிலையில், கடந்த வாரம் அமெரிக்க பாதுக்காப்பு துறைக்கு அணுஆயுத சோதனையை துவக்க உத்தரவிட்டுள்ளார்.
அமெரிக்கா சுமார் 33 வருடத்திற்கு பின்பு அணுஆயுத சோதனையை துவங்க உள்ளதாக டிரம்ப் தெரிவித்த நிலையில், இதற்கான காரணத்தையும் தெரிவித்து பகீர் கிளப்பியுள்ளார்.

உலக நாடுகளில் தற்போது இந்தியாவின் அண்டை நாடான பாகிஸ்தான், ரஷ்யா, சீனா, வட கொரியா போன்ற நாடுகள் அணு ஆயுத சோதனைகளை செய்கின்றன என்று டொனால்ட் டிரம்ப் செய்தியாளர்களிடம் தெரிவித்து பகீர் கிளம்பினார். இதுதான் அமெரிக்காவின் அணு சோதனைகளை மீண்டும் தொடங்க வேண்டியதன் கட்டாயத்தை காட்டுகிறது.
இந்தியா - பாகிஸ்தான் மத்தியில் தொடர்ந்து பதற்றமான சூழ்நிலை நிலவி வரும் வேளையில், டிரம்ப்-ன் அறிவிப்பின் படி பாகிஸ்தான் நாட்டின் இந்த அணுஆயுத சோதனை இந்தியா எச்சரிக்கையுடன் எதிர்கொள்ள வேண்டிய விஷயமாக மாறியுள்ளது. இந்தியாவிடம் நீண்ட தூரம் கடந்து சென்று தாக்கும் ஏவுகணைகள் முதல் அணுஆயுதங்களும் இருக்கும் வேளையில் பாகிஸ்தான் உடன் எந்த நேரத்திலும் எதிர்த்து போரிட பலத்துடன் உள்ளது.
டொனால்டு டிரம்ப் CBS நியூஸ்-ன் '60 மினிட்ஸ்' நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு பேசுகையில், ரஷ்யா, சீனா, வட கொரியா, பாகிஸ்தான் போன்ற நாடுகள் அணு சோதனைகளை செய்கின்றன என்று கூறி, மக்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தினார். ஏற்கனவே வர்த்தக போர் என்ற பூதம் இருக்கும் நிலையில், தற்போது புதிதாக ஒரு பூதம் கிளம்பியுள்ளது.
உலகில் தற்போது பல நாடுகள் தங்களுடைய எல்லை பகுதிகளிலும், பாலைவன பகுதிகளிலும், கடல் பகுதிகளிலும் அணுஆயுதங்களை சோதனை நடத்தி வருகிறது. ஆனால் அந்த நாடுகளும், அந்த நாட்டு ஊடகங்களும் அதைப் பற்றி பேசுவதில்லை என கடுமையாக விமர்சனம் செய்தார் டிரம்ப்.
மேலும் டிரம்ப் பேசுகையில், அமெரிக்காவிடம் " உலகில் அனைத்து நாடுகளை காட்டிலும் அதிக அணு ஆயுதங்கள் உள்ளன, உலகை 150 முறை வெடிக்க செய்யும் அளவுக்கு அணு ஆயுதங்கள் உள்ளன" என்று டிரம்ப் சிரித்துக்கொண்டே தெரிவித்தார்.
ரஷ்யாவும் பல அணு ஆயுதங்கள் கொண்டுள்ளது, சீனாவும் தனது அணுஆயுத எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. நியூக்ளியர் தாக்குதல் குறித்த அச்சத்தை குறைக்கும் விதமாக டொனால்டு டிரம்ப் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் மற்றும் சீன அதிபர் ஜி ஜின்பிங்குடன் அணு ஆயுதங்களை பயன்பாட்டில் இருந்து அகற்றுவது குறித்தும், சோதனை செய்வதை நிறுத்துவதை குறித்து பேசியதாகவும் தெரிவித்தார்.
அணு ஆயுதங்களை அகற்றுவது மிகப்பெரிய விஷயம், இதேவேளையில் உலக நாடுகள் அணு ஆயுத சோதனையை மீண்டும் தொடங்கிய காரணத்தால் மட்டுமே அமெரிக்கா மீண்டும் தனது சோதனையை துவங்க உள்ளதாகவும், தற்போதையை நிலையில் இதுதான் ஏற்றதாக இருக்கும் என்று அவர் கூறினார். இந்த உரையாடல்கள், உலக அணு பாதுகாப்பு குறித்த அச்சத்தை அதிகரித்துள்ளது.
டொனால்டு டிரம்ப் ஏர் ஃபோர்ஸ் ஒன் விமானத்தில் ஏறும் முன், அணு சோதனைகளை 30 ஆண்டுகளுக்குப் பிறகு அமெரிக்கா துவங்க உள்ளது, இது அமெரிக்காவின் போக்கை மாற்றும் முக்கியமான விஷயமாகும். ரஷ்யாவின் அணு திறன் கொண்ட அமைப்புகளின் சமீபத்திய சோதனைகள் தான் உலக நாடுதளை இச்சோதனைகளை துவக்க முக்கிய காரணமாக உள்ளது என தெரிவித்தார்.


Click it and Unblock the Notifications