மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர் காரணமாக சர்வதேச கச்சா எண்ணெய் சந்தையில் பெரும் பதற்றம் நிலவுகிறது. அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரானுக்கு எதிரான தாக்குதல்களை நடத்தியதால், கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு சப்ளை வளைகுடா நாடுகளில் இருந்து வெளியேற முடியாமல் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.
கடந்த சில வாரங்களில் மட்டும் சர்வதேச கச்சா எண்ணெய் விலை சுமார் 40 சதவீதம் அதிகரித்துள்ளது. இதனால் உலக நாடுகளில் எரிபொருள் விலை உயர்வு, பொருளாதார பாதிப்பு போன்ற பிரச்சினைகள் எழுந்துள்ளன. ஹார்முஸ் ஜலசந்தி போக்குவரத்து பாதை ஈரான் கட்டுப்பாட்டிற்குள் வந்துள்ளதால், கச்சா எண்ணெய் விநியோகம் குறைந்துள்ளது.

இந்த நிலையில் அமெரிக்கா யாரும் எதிர்பார்க்காத ஒரு நடவடிக்கையை எடுத்துள்ளது. அமெரிக்க ட்ரெஷரி துறை (Treasury Department) வியாழக்கிழமை ஒரு தற்காலிக உத்தரவை வெளியிட்டுள்ளது. இந்த ஒரு உத்தரவால் கச்சா எண்ணெய் விலை குறைவது மட்டும் அல்லாமல் டிரம்ப் மனநிலையில் ஏற்பட்டுள்ள மாற்றம் உலக நாடுகளுக்கு வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்கா இன்று வெளியிட்டுள்ள புதிய அறிவிப்பின் படி, ரஷ்யாவின் கச்சா எண்ணெய்யை உலக நாடுகளில் விற்பனை செய்ய ஈரான் ராணுவத்துடன் தொடர்புடைய கப்பல்கள் மற்றும் நிறுவனங்களை அனுமதி அளிக்க உள்ளதாக அறிவித்துள்ளது. ஈரான் தொடர்பான கப்பல்கள் சர்வதேச கடலில் இயங்க கூடாது என அமெரிக்கா ஏற்கனவே தடை விதித்திருக்கும் நிலையில் இப்புதிய தளர்வு ரஷ்யாவுக்கும் ஈரானுக்கும் குட்நியூஸாக விளங்குகிறது.
ஈரான் ராணுவம் மற்றும் ஈரான் நிறுவனங்களுடன் தொடர்புடைய இந்த கப்பல்கள் 'கோஸ்ட் ஃப்ளீட்' (ghost fleet) என்று அழைக்கப்படும் ரகசிய கப்பலாகும். இந்த கப்பல்கள் ஏற்கனவே மறைமுகமாக ரஷ்யா, வெனிசுலா போன்ற நாடுகளின் கச்சா எண்ணெய் மற்றும் பொருட்களை சட்டவிரோதமாக கொண்டு செல்கிறது.
இந்த நிலையில் உக்ரைன் மீதான ரஷ்ய போருக்கு பிறகு விதிக்கப்பட்ட தடைகளை தற்காலிகமாக தளர்த்தி, ஈரான் கப்பல்கள் மூலம் ரஷ்ய எண்ணெயை திறந்த சந்தையில் விற்க அமெரிக்கா அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கையின் முக்கிய நோக்கமே சர்வதேச கச்சா எண்ணெய் விலையை குறைப்பதுதான். உலக நாடுகள் தங்கள் முக்கிய சேமிப்பில் இருக்கும் எண்ணெயை பயன்பாட்டுக்கு கொண்டு வந்தும் விலை குறைக்க முடியாத காரணத்தால் ஈரான் கப்பல் மற்றும் ரஷ்ய கச்சா எண்ணெய் மீதான தளர்வுகள் அறிவித்துள்ளது டிரம்ப் அரசு.
அமெரிக்க ஏற்கனவே ரஷ்ய கச்சா எண்ணெய் ஏற்றுமதியை ஏப்ரல் 11 வரை தடையின்றி விற்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இது குறுகிய கால தளர்வு என அமெரிக்க ட்ரெஷரி செயலர் ஸ்காட் பெசென்ட் தெரிவித்துள்ளார்.
More From GoodReturns

பெட்ரோல் விலை லிட்டர் ரூ.119, டீசல் விலை லிட்டர் ரூ.192: உண்மையை போட்டுடைத்த அரசு..!!

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

ஈரான் போரை மையமாக வைத்து புதிய தொழில்: கோடிகளை அள்ளும் டிரம்ப் மகன்கள்!! வெளிச்சத்துக்கு வந்த உண்மை!!

ஈரானுடன் ஒப்பந்தம் ஏற்படாமலேயே போரை முடிக்க போகிறாரா டிரம்ப்? என்ன சொல்லி இருக்காரு பாருங்க!!

அமெரிக்க வானில் வட்டமிட்ட Dooms Day விமானம்!! டிரம்ப் ஈரானுக்கு விதித்த கெடு நெருங்குவதால் பதற்றம்!!

ஈரான் போர்: டிரம்ப் நிர்வாகத்திலேயே ஒரு கருப்பு ஆடு? செய்தியாளர்களிடம் உண்மையை போட்டுடைத்த டிரம்ப்

ஈரான் போர்: மூக்கறுபட்ட பாகிஸ்தான்..!! அப்போ டிரம்ப் சொன்னது என்ன ஆச்சு?

இண்டர்நெட் முதல் சமையல் எண்ணெய் வரை: ஈரான் போரால் அடுத்தடுத்து கிளம்பும் பூதம்!!

ஈரான் கற்காலத்திற்கு செல்லும்; அமெரிக்காவின் அடுத்தகட்ட போர் திட்டங்களை வெளியிட்ட டிரம்ப்!!

திடீரென பெட்ரோல், டீசல் விலையை உயர்த்திய Shell நிறுவனம்..!! வாகன ஓட்டிகளே கவனம்..!!

சிலிண்டர் விலை: 3 மாதங்களில் இல்லாத விலை உயர்வு..!! எண்ணெய் நிறுவனங்களின் அறிவிப்பால் அதிர்ச்சி..!!



Click it and Unblock the Notifications