உலகின் முன்னணி சிப் தயாரிப்பு நிறுவனங்களான டிஎஸ்எம்சி (TSMC) மற்றும் சாம்சங் எலக்ட்ரானிக்ஸ் ஆகியவை ஐக்கிய அரபு அமீரகத்தில் மிகப்பெரிய அளவிலான சிப் தயாரிப்பு ஆலைகளை கொண்டு வர இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது .
தி வால் ஸ்டிரீட் ஜர்னல் இது தொடர்பாக வெளியிட்டுள்ள செய்தி அடிப்படையில் டிஎஸ்எம்சி எனப்படும் தைவான் செமி கண்டக்டர் உற்பத்தி நிறுவனமும், சாம்சங் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனமும் ஐக்கிய அரபு அமீரகத்தில் 100 பில்லியன் டாலருக்கும் அதிகமான மதிப்பு கொண்ட மிகப்பெரிய சிப் தயாரிப்பு ஆலையை நிறுவு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது . இது தொடர்பாக டிஎஸ்எம்சி நிறுவனத்தின் மூத்த அதிகாரிகள் அண்மையில் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு சென்று ஆலை அமைப்பதற்கான இடங்களை பார்வையிட்டதாக தெரிகிறது.

தைவானில் இருப்பதை போன்ற அதிநவீன வசதிகள் கொண்ட மிகப்பெரிய செமி கண்டக்டர் ஆலையை ஐக்கிய அரபு அமீரகத்தில் நிறுவுவதற்கு டிஎஸ்எம்சி நிறுவனம் ஆர்வம் காட்டுவதாக தெரிகிறது. அண்மையில் கூட டிஎஸ்எம்சி நிறுவனம் ராய்ட்டர்ஸ் நிறுவனத்திடம் கூடிய விரைவில் மிகப்பெரிய ஒரு முதலீடு திட்டத்தை அறிவிக்கப் போவதாக தெரிவித்திருந்தது.
எனவே இது ஐக்கிய அரபு அமீரகத்தில் அமைய இருக்கும் ஆலை குறித்த அறிவிப்பாக தான் இருக்கும் என சொல்லப்படுகிறது. தைவானை விடுத்து வெளிநாடுகளில் தங்களுடைய நிறுவனத்தை மேம்படுத்துவதில் தற்போது கவனம் செலுத்துவதாக டிஎஸ்எம்சி நிறுவனம் கூறுகிறது.
அதேபோல தென்கொரியாவை சேர்ந்த முன்னணி எலக்ட்ரானிக்ஸ் நிறுவனமான சாம்சங் ஸ்மார்ட் ஃபோன்கள் மற்றும் தொலைக்காட்சிகளுக்கு தேவையான மெமரி சிப்புகளை தயாரித்து வருகிறது. இந்த நிறுவனமும் கூடிய விரைவில் ஐக்கிய அரபு அமீரகத்தில் சிப் தயாரிப்பு ஆலைகளை நிறுவ திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.
சாம்சங் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் அண்மையில் தங்களுடைய மூத்த அதிகாரிகளை ஐக்கிய அரபு அமீரகத்திற்கு அனுப்பி அங்கே ஆலை நிறுவுவதற்கான சாத்திய கூறுகள் குறித்து ஆய்வு நடத்தியுள்ளது. இருந்தாலும் இந்த ஆலோசனைகள் ஆரம்ப கட்டத்தில் தான் இருக்கின்றன என தெரிய வருகிறது.
இந்த ஆலோசனையின் படி பார்க்கும்போது செமி கண்டக்டர் ஆலைகளை அமைப்பதற்கான நிதிகளை ஐக்கிய அரபு அமீரக அரசே வழங்கும் என்றும் அபுதாபியை அடிப்படையாகக் கொண்ட முபாதலா (Mubadala) என்ற முதலீட்டு நிறுவனம் இதில் முக்கிய பங்கு வகிக்கும் என்றும் சொல்லப்படுகிறது.
More From GoodReturns

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

பதவி நீக்கம் செய்யப்படுகிறாரா டிரம்ப்? ஈரான் போரால் டிரம்புக்கு ஏற்பட்டுள்ள புது பிரச்சினை!!

அமெரிக்காவுக்கு சத்தமேயில்லாமல் செக் வைத்த ஈரான்: டாலர் ஆதிக்கத்தை முடக்க சீனா வகுத்த வியூகம்!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!

முதலிடத்தில் விஜய், இரண்டாமிடத்தில் ஸ்டாலின் – அப்போ எடப்பாடி பழனிசாமி , சீமான்?



Click it and Unblock the Notifications