திருப்பதி: திருப்பதி தேவஸ்தானத்தில் வழங்கப்படும் லட்டு பிரசாதத்தை தயாரிக்க பயன்படுத்தப்பட்ட நெய்யில் பன்றி கொழுப்பு, மீன் எண்ணெய் இருப்பதாக ஆய்வில் தெரிய வந்திருக்கிறது. இந்நிலையில் திருப்பதியில் ஒரு நாளைக்கு எவ்வளவு லட்டு தயாரிக்கப்பட்டு பிரசாதமாக வழங்கப்படுகிறது என்பது குறித்து நாம் விரிவாக தெரிந்து கொள்ளலாம்.
திருப்பதி என்றாலே அங்கே பிரசாதமாக வழங்கப்படும் லட்டு தான் நம் அனைவரின் நினைவுக்கும் வரும். ஏனெனில் இங்கே வழங்கப்படும் லட்டு தனித்துவமான ருசியை கொண்டிருக்கும். எனவே உலக அளவில் இந்த பிரசாதத்திற்கு ரசிகர்கள் இருக்கிறார்கள். திருப்பதி தேவஸ்தானத்தை பொருத்தவரை 1715 ஆம் ஆண்டிலிருந்து லட்டு பிரசாதமாக வழங்கப்பட்டு வருகிறது. பொடு என அழைக்கப்படும் இடத்தில் தான் இந்த லட்டு தயாரிக்கப்படுகிறது.

நாள்தோறும் திருப்பதி தேவஸ்தானம் சார்பில் 3 லட்சம் லட்டு தயாரிக்கப்பட்டு பக்தர்களுக்கு வழங்கப்படுகிறது. மகா பிரசாதம் என இது அறியப்படுகிறது. திருப்பதி லட்டுக்கும் மக்களுக்கும் இடையிலான உணர்வுபூர்வமான தொடர்பு மிக அதிகம் திருப்பதி. தேவஸ்தானத்தில் லட்டு தயாரிக்கும் முறை என்பது வரலாற்றிலேயே ஆறு முறை மட்டும்தான் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.
முதலில் பூந்தி வெள்ளப்பாகு ஆகியவற்றை கொண்டு தான் திருப்பதி தேவஸ்தானத்தில் லட்டு தயாரிக்கப்பட்டு விநியோகம் செய்யப்பட்டது. பின்னர் இதில் முந்திரி, பாதாம், திராட்சை உள்ளிட்டவை சேர்த்து தயாரிக்கப்பட்டது.
நாள்தோறும் திருப்பதி தேவஸ்தானம் சார்பில் 3 லட்சம் லட்டுகள் தயாரிக்கப்பட்டு பக்தர்களுக்கு வழங்கப்படுகிறது. இது பண்டிகை மற்றும் விடுமுறை காலத்தில் அதிகரிக்கும். திருப்பதி தேவஸ்தானம் லட்டு விற்பனையில் மட்டும் ஆண்டுக்கு 500 கோடி வருமானமாக பெறுகிறது.
கிட்டத்தட்ட 300 ஆண்டுகளாக இங்கே லட்டு பிரசாதமாக வழங்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு லட்டும் 175 கிராம் எடை கொண்டதாக இருக்கிறது. திருப்பதி தேவஸ்தானத்திலேயே அமைக்கப்பட்டுள்ள ஆய்வகத்தில் அனைத்து தர பரிசோதனைகளும் செய்யப்பட்ட பிறகு தான் விற்பனைக்கு வருகிறது.
இந்த நிலையில் தான் கடந்த ஜூலை மாதம் திருப்பதி தேவஸ்தான ஆய்வகம் நடத்திய ஆய்வில் ஏஆர் டைரி ஃபுட்ஸ் என்ற நிறுவனம் வழங்கிய நெய் தரம் குறைந்ததாக இருப்பது கண்டறியப்பட்டது. இதனிடையே தற்போது திருப்பதி தேவஸ்தானத்தில் தரமான லட்டு தயாரிக்கப்படுவதை உறுதி செய்வதற்கு நடவடிக்கை எடுத்து வருவதாக தேவஸ்தான நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு முன்பு நெய் ஒரு கிலோ நெய் 320 ரூபாய் என்ற அளவில் வாங்கப்பட்டு வந்த நிலையில் அந்த ஒப்பந்ததாரரை தடை செய்துவிட்டு தற்போது கர்நாடக ஃபெடரேஷனிடம் இருந்து ஒரு கிலோ நெய் 475 ரூபாய் என கொள்முதல் செய்வதாக தேவஸ்தான நிர்வாகம் அறிவித்துள்ளது. பக்தர்களுக்கு வழங்கப்படும் லட்டு தரமான முறையில் தயாரிக்கப்படுவதை உறுதி செய்வதற்காக மூத்த ஐஏஎஸ் அதிகாரி சியாலா ராவ் என்பவரை அரசு நியமனம் செய்துள்ளது.
Story written by: Devika
More From GoodReturns

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!



Click it and Unblock the Notifications