திருப்பதி ஏழுமலையான் கோயில் நாடு முழுவதும் பிரசித்தி பெற்ற கோயிலாக இருக்கிறது. நாள்தோறும் இங்கே ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஏழுமலையானை தரிசிப்பதற்காக வருகை தந்த வண்ணம் இருக்கிறார்கள். இதன் காரணமாக ஒவ்வொரு நாளும் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும்.
குறிப்பாக தமிழகத்திலிருந்து நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருப்பதி ஏழுமலையானை தரிசிப்பதற்காக குடும்பம் குடும்பமாக செல்கின்றனர். இவ்வாறு திருப்பதி கோயிலில் சாமி தரிசனத்திற்காக செல்பவர்கள் மணிக்கணக்கில் காத்திருக்க வேண்டிய நிலை இருக்கிறது. சில சமயங்களில் 24 மணி நேரத்தை கடந்தும் கூட காத்திருந்து பக்தர்கள் ஏழுமலையானை தரிசித்து வருவதை நம்மால் காண முடிகிறது.

திருப்பதிக்கு வருகை தர கூடிய பக்தர்களுக்கு ஸ்ரீவாணி தரிசன டிக்கெட்டுகள் வழங்கப்படுகின்றன. ஆன்லைன் அட்வான்ஸ் புக்கிங்கில் 500 டிக்கெட்டுகள், நேரடியாக கோயிலில் உள்ள கவுண்ட்டர்களில் 300 டிக்கெட்டுகள் நாள் தோறும் தரிசனத்துக்காக வழங்கப்படுகின்றன. இது தவிர திருப்பதி விமான நிலையத்தில் உள்ள தேவாலய நிர்வாக கவுண்ட்டர்களில் 200 டிக்கெட்கள் விற்பனை செய்யப்படுகின்றன.
இதில் கோயில் வளாகத்தில் உள்ள கவுண்ட்டர்களில் ஸ்ரீவாணி தரிசன டிக்கெட் பெறுவதற்கு முந்தைய நாளை மாலையில் இருந்து காலை 6 மணிக்கு கவுண்ட்டர் திறக்கும் வரை பக்தர்கள் காத்திருப்பார்கள். இவ்வாறு பக்தர்கள் நீண்ட நேரம் காத்திருந்து சிரமங்களை எதிர்கொள்வதை தடுக்கும் வகையில் திருப்பதி திருமலை தேவஸ்தான நிர்வாகம் ஒரு பிரத்தியேக அறிவிப்பினை வெளியிட்டு இருக்கிறது.
ஸ்ரீவாணி தரிசன டிக்கெட் முறையில் மாற்றத்தை கொண்டு வந்திருக்கிறது. ஜனவரி 9ஆம் தேதியிலிருந்து ஸ்ரீவாணி தரிசன டிக்கெட் ஆன்லைனில் மட்டுமே கிடைக்கும் என தெரிவித்திருக்கிறது . அதாவது பக்தர்கள் இனி நேரடியாக வந்து கவுண்ட்டர்களில் இந்த டிக்கெட்டுகளை பெற முடியாது, ஆன்லைன் வாயிலாக மட்டுமே முன்பதிவு செய்து கொண்டு சாமி தரிசனம் செய்யலாம் என தெரிவித்திருக்கிறது. ஜனவரி 9ஆம் தேதியிலிருந்து பிப்ரவரி 9 ஆம் தேதி வரை என ஒரு மாத காலத்திற்கு திருப்பதி திருமலை தேவஸ்தானம் சோதனை அடிப்படையில் இதனை செயல்படுத்தி பார்க்க இருக்கிறது.
இது வெற்றி பெறும் பட்சத்தில் முழுவதுமாகவே ஸ்ரீவாணி தரிசன டிக்கெட் ஆன்லைன் முன்பதிவுக்கே மாற்றிவிடலாம் என முடிவு செய்திருக்கிறதாம். எனவே இனி ஒவ்வொரு நாளும் காலை 9 மணி அளவில் அன்றைய நாளுக்கான ஸ்ரீவாணி தரிசன டிக்கெட்டுகள் ஆன்லைனில் முன்பதிவு தொடங்கும் . பிற்பகல் 2 மணி வரை இந்த டிக்கெட் முன்பதிவு இருக்கும் என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
இவ்வாறு காலை 9 மணியிலிருந்து மதியம் 2 மணிக்குள் ஸ்ரீவாணி தரிசன டிக்கெட்டுகளை ஆன்லைனில் முன்பதிவு செய்து பெறக்கூடிய பக்தர்கள் அன்றைய நாள் மாலை 4 மணிக்கு வந்து தரிசனம் செய்து கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. நான்கு பேர் கொண்ட உறுப்பினர்கள் ஒரு குடும்பமாக கருதி புக்கிங் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
ஆன்லைன் டிக்கெட் பதிவினை தவறாக பயன்படுத்துவதை தடுப்பதற்காக ஆதார் சரி பார்ப்பு மற்றும் மொபைல் எண் சரிபார்ப்பு கட்டாயம். அதாவது ஸ்ரீவாணி டிக்கெட்டுகளை புக் செய்யும் போது ஆதார் எண்ணை குறிப்பிட்டு அத்துடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணுக்கு ஓடிபி வரும் அதனை உள்ளிட்டால் தான் டிக்கெட் கிடைக்கும்.
முதலில் வருபவர்களுக்கே முன்னுரிமை என்ற அடிப்படையில் டிக்கெட்டுகள் வழங்கப்படும் என தேவஸ்தான நிர்வாகம் தெரிவித்திருக்கிறது . எனவே மக்கள் இந்த டிக்கெட் வாங்குவதற்காகவே நீண்ட நேரம் காத்திருக்க கூடிய சூழல் இனி இருக்காது என திருமலை திருப்பதி தேவஸ்தான நிர்வாகம் தெரிவித்திருக்கிறது. ஏற்கனவே ஆன்லைனில் கிடைக்கும் 500 ஸ்ரீவாணி தரிசன டிக்கெட்டுகளோடு இந்த 300 டிக்கெட்டுகள் என மொத்தம் 800 டிக்கெட்டுகளுன் ஆன்லைனில் மட்டுமே புக் செய்யப்படும்.
திருப்பதி விமான நிலைய கவுண்ட்டரில் கிடைக்கும் 200 டிக்கெட்டுகளில் எந்த மாற்றமும் இல்லை. எனவே பக்தர்கள் கோயிலுக்கு சென்று ஸ்ரீவாணி டிக்கெட்டுகளை கவுண்ட்டரில் வாங்கி கொள்ளலாம் என நினைத்து வர முடியாது, ஏனெனில் இனி கோயில் கவுண்ட்டரில் ஸ்ரீவாணி தரிசன டிக்கெட்டுகள் கிடையாது.எனவே திருப்பதி திருமலைக்கு செல்லக்கூடிய பக்தர்கள் இந்த விஷயத்தை கவனத்தில் கொள்ள வேண்டும் இல்லை என்றால் அங்கு சென்று ஏமாற்றம் அடைவீர்கள்.
More From GoodReturns

அட்சய திருதியை நாளில் தங்கம் விலை எப்படி இருக்கும்? நகை வாங்குவோர் கவனிக்க வேண்டியது என்ன?

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

காருண்யா KR-749 முடிவுகள் வெளியானது : ரூ.1 கோடி வென்றது யார்?

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

ரூ.10 கோடியை ரூ.100 கோடியாக மாற்றிய நடிகை மீனா..!! செம ஐடியாவா இருக்கே..!!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!

போனது போகட்டும்!! நாளை தமிழ் புத்தாண்டு நாளில் இதை எல்லாம் தொடங்குங்க வாழ்க்கை செமயா மாறும்!!



Click it and Unblock the Notifications