ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் இருக்கும் புனித திருத்தலமான திருப்பதி வெங்கடாஜலபதி கோவிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டு தயாரிப்பில் பயன்படுத்தப்படும் நெய்-ல் விலங்கு கொழுப்பு இருப்பது கண்டறியப்பட்ட நிலையில் நாடு முழுவதும் மக்கள் மத்தியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது மட்டும் அல்லாமல், ஆந்திர மாநிலத்தில் பெரும் அரசியல் சர்ச்சையை கிளப்பியிருக்கிறது.
தினமும் குறைந்தது 60,000க்கும் மேற்பட்ட பக்தர்களை ஈர்க்கும் திருப்பதி வெங்கடாஜலபதி கோவிலில், இந்த சர்ச்சைக்கு பின்பும் பக்தர்கள் எண்ணிக்கையும், லட்டு பிரசாதத்தின் விற்பனையும் பாதிக்கவில்லை என TTD நிர்வாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

திருப்பதி வெங்கடாஜலபதி கோயிலை நிர்வாகம் செய்யும் TTD அமைப்பு வெளியிட்டுள்ள தகவல்படி, கடந்த நான்கு நாட்களில் 14 லட்சத்திற்கும் அதிகமான திருப்பதி லட்டுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. செப்டம்பர் 19 அன்று மொத்தம் 3.59 லட்சம் லட்டுகள், செப்டம்பர் 20 அன்று 3.17 லட்சம், செப்டம்பர் 21 அன்று 3.67 லட்சம் மற்றும் செப்டம்பர் 22 அன்று 3.60 லட்சம் லட்டுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. விற்பனை புள்ளி வரவுகள் தினசரி சராசரியான 3.50 லட்சம் லட்டுகளுக்கு இணையாக உள்ளது என்பதை உறுதி செய்துள்ளது.
திருப்பதி ஸ்ரீ வெங்கடேஸ்வரர் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டு மிகவும் பிரபலமானது, இதன் சுவையும், தனித்துவமும் மக்கள் மத்தியில் அதிகப்படியான டிமாண்டை உருவாக்கியுள்ளது. முன்பு டிக்கெட்டுக்கு மட்டுமே லட்டு அளிக்கப்பட்டு வந்த நிலையில் மக்கள் மத்தியிலான டிமாண்ட்-ஐ கருத்தில் கொண்டு தனிப்பட்ட முறையிலும் விற்பனை செய்யத் துவங்கியது.
கடந்த சில வருடங்களாகத் திருப்பதியில் ஒரு லட்டு 50 ரூபாய் வீதம் விற்பனை செய்யப்படுகிறது. இதனால் மக்கள் தங்களுடைய டிக்கெட்டுக்கு கிடைக்கும் லட்டு எண்ணிக்கையைத் தாண்டி அதிகப்படியாகக் காசு கொடுத்து வாங்கி வருவது வழக்கமாகியுள்ளது. இத்தகைய லட்டு விற்பனையின் மூலம் TTD நிர்வாகம் வருடத்திற்கு 500 கோடி ரூபாய் வரையில் வருமானம் ஈட்டுவதாக தெரிவித்துள்ளது.
திருப்பதி தேவஸ்தானத்தில் வழங்கப்படும் லட்டு பிரசாதத்தைத் தயாரிக்கப் பயன்படுத்தப்பட்ட நெய்யில் பன்றி கொழுப்பு, மீன் எண்ணெய் இருப்பதாக ஆய்வில் தெரிய வந்த சர்ச்சைக்கு பின்பும் திருப்பதி லட்டுகள் விற்பனை தொடர்ந்து அதிகமாக இருப்பதால், கோயில் நிர்வாகம் அவற்றின் தயாரிப்பு மற்றும் விநியோகத்தை அதிகரித்துள்ளது. இது பக்தர்களின் தேவையைப் பூர்த்தி செய்வதோடு, கோயிலின் வருவாயும் அதிகரிக்கும் முயற்சியில் தீவிரம் காட்டியுள்ளது.
திருப்பதி தேவஸ்தானத்தைப் பொருத்தவரை 1715 ஆம் ஆண்டிலிருந்து லட்டு பிரசாதமாக வழங்கப்பட்டு வருகிறது. பொடு என அழைக்கப்படும் இடத்தில் தான் இந்த லட்டு தயாரிக்கப்படுகிறது. திருப்பதி தேவஸ்தானம் சார்பில் 3 லட்சம் லட்டு தயாரிக்கப்பட்டு பக்தர்களுக்கு வழங்கப்படுகிறது. ஒவ்வொரு லட்டும் 175 கிராம் எடை கொண்டதாக இருக்கிறது.
திருமலை திருப்பதி தேவஸ்தானம் (TTD) ஆண்டுதோறும் உயர்தர நெய் வாங்க சுமார் ரூ. 250 கோடி செலவிடுகிறது. சராசரியாக, ஆண்டுக்கு 12-13 கோடி லட்டுகள் விற்பனை செய்யப்படுகின்றன. TTD ஆண்டுதோறும் லட்டு விற்பனையிலிருந்து ரூ. 500 கோடி வருவாய் ஈட்டுகிறது.
இந்த புள்ளிவரவுகள், திருப்பதி லட்டுகள் TTD-க்கு குறிப்பிடத்தக்க வருவாய் ஆதாரமாக உள்ளன என்பதைத் தெளிவாகக் காட்டுகின்றன. லட்டு விற்பனையிலிருந்து கிடைக்கும் வருவாய், கோயிலின் பராமரிப்பு, பக்தர்களுக்கான சேவைகள் மற்றும் பிற திட்டங்களுக்கு நிதியளிக்கப் பயன்படுத்தப்படுகிறது. TTD, லட்டுகளின் தரம் மற்றும் விற்பனையை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.
More From GoodReturns

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை: மதுரையில் அதிரடி சரிவு! மார்ச் 23, 2026 நிலவரம் மற்றும் எதிர்கால கணிப்புகள் வெளியானது

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

எங்க கிட்ட பேச்சே கிடையாது..!! டிரம்ப் மூக்கை உடைக்கும் அளவுக்கு பதில் கொடுத்த ஈரான்..!



Click it and Unblock the Notifications