இந்தியாவின் பணக்கார கடவுளான திருப்பதி ஏழுமலையான் மீது எல்லோரும் அளவில் அடங்கா பக்தியை கொண்டு உள்ளனர், ஏழை எளிய மக்கள் முதல் முகேஷ் அம்பானி, தோனி, அஜித் குமார் என அனைத்து தரப்பினரும் வருடத்திற்கு ஒரு முறையாவது திருப்பதிக்கு சென்றுவிட்டு வருகின்றனர்.
அதிலும் குறிப்பாக முகேஷ் அம்பானி புதிதாக பிஸ்னஸ் துவங்கும் போதும், குடும்பத்தில் முக்கிய முடிவுகளை எடுக்கும் போதும் தவறாமல் திருப்பதிக்கு வருவது வழக்கமாக கொண்டு உள்ளார். இந்த நிலையில் திருப்பதி ஏழுமலையான்-ஐ தரிசிக்க ஒவ்வொரு முறையும் ஆந்திர பிரதேசம் செல்லும் கட்டாயம் இருப்பதால் TTD புதிய திட்டத்தை கையில் எடுத்துள்ளது.

திருமலை திருப்பதி தேவஸ்தானம் (TTD) அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் திருப்பதி கோவில் போலவே புதிய கோயில்களை கட்டுவதற்கான திட்டங்களை வகுத்துள்ளது. இந்த மாத தொடக்கத்தில், ஜம்மு-வின் சிவாலிக் காடுகளில் 62 ஏக்கர் நிலப்பரப்பில் திருப்பதி ஏழுமலையான் கோவில் கட்டப்பட்டு பக்தர்களின் திரிசனத்திற்கு திறக்கப்பட்டது.
ஜம்முவில் கட்டப்பட்ட ஸ்ரீ வெங்கடேஸ்வர ஸ்வாமி கோயில் மக்கள் மத்தியில் பெரிய அளவிலான வரவேற்பை பெற்று உள்ளது. இதை தொடர்ந்து திருமலை திருப்பதி தேவஸ்தானம் தனது திட்டத்தை வேகப்படுத்தியுள்ளது. தற்போது, குஜராத் மற்றும் சத்தீஸ்கரில் ஏழுமலையான் கோவிலின் கட்டமைப்பை பிரதிபலிக்கும் வகையில் இக்கோவில்கள் கட்டப்பட உள்ளது என TTD வாரியம் தெரிவித்துள்ளது.
பீகாரில் திருப்பதி எழுமலையான் கோவிலை கட்ட நிதிஷ்குமார் அரசுடன் திருமலை திருப்பதி தேவஸ்தானம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. மேலும் நவி மும்பையில் திருப்பதி எழுமலையான் கோவிலை கட்ட மகாராஷ்டிரா அரசு 10 ஏக்கர் நிலத்தை ஒதுக்கீடு செய்துள்ளது, இதை தொடர்ந்து TTD இக்கோவில் கட்டுமானத்திற்காக சுமார் 70 கோடி ரூபாயை ஒத்துக்கீடு செய்துள்ளது.
விவேக் காமெடி போல் ஒரேயொரு லட்டுக்கு கொட்டோ கொட்டுனு கொட்டுது துட்டு, திருப்பதி எழுமலையான் கோவில் பணக்கார கடவுள் என்பது அனைவருக்கும் தெரிந்தாலும் திருமலை திருப்பதி தேவஸ்தானம் தனது நிதி மேலாண்மையை மிகவும் சிறப்பாக செய்கிறது என்றால் மிகையில்லை.
திருமலை திருப்பதி தேவஸ்தானம் மக்களுக்கான சேவை முதல் நிதி ஆதாரங்களை சிறப்பாக கையாளுகிறது என்பதற்கு இந்தியாவில் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் திருப்பதி கோவில் போலவே புதிய கோயில்களை கட்டுவதற்கான திட்டத்தை தீட்டியது.


Click it and Unblock the Notifications