திருப்பதியில் வழங்கப்படும் அன்னபிரசாதம் மெனுவில் சில மாற்றங்களை செய்ய திருப்பதி தேவஸ்தானம் (TTD) முடிவு செய்துள்ளது. அன்ன பிரசாதம் மெனுவில் புதிய உணவு வகைகளை சேர்க்கவும், விஐபி தரிசனத்தை முறைப்படுத்தவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட உள்ளன. திருமலையில் உள்ள வெங்கமாம்பா அன்ன பிரசாத விநியோக கூடத்தில் வெங்கடேஸ்வர சுவாமி பக்தர்களுக்காக புதிய மசால் வடைகளை அறிமுகப்படுத்த திருப்பதி தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது. வெங்காயம் பயன்படுத்தாமல் தயாரிக்கப்பட்ட மசால் வடைகளை ஏற்கனவே 5000 பக்தர்களுக்கு TTD வழங்கியுள்ளது.
பக்தர்களிடமிருந்து நல்ல வரவேற்பு கிடைத்ததால், இந்த மாதம் 6-ஆம் தேதி முதல் முழுமையாக அமல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், திருமலையில் குடிநீர் விநியோகத்திற்காக கண்ணாடி பாட்டில்களுக்கு பதிலாக புதிய டெட்ரா பாக்கெட்டுகளை அறிமுகப்படுத்த டிடிடி திட்டமிட்டுள்ளது. இந்த திட்டம் விரைவில் நடைமுறைக்கு வரும்.

சுவாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களுக்கு அன்ன பிரசாதம் வழங்கப்படுவது அனைவரும் அறிந்ததே. இதில் ரசம், மோர், சாம்பார் போன்ற மெனு இடம்பெற்றிருக்கும். இது தவிர இரவு உணவு உணவாக இருந்தால் சப்பாத்தி, கற்கண்டு சாதம் போன்றவை வழங்கப்படும். இந்நிலையில் சமீபத்தில் திருப்பதி தேவஸ்தானம் மசால்வடையை மெனுவில் சேர்க்க முடிவு செய்துள்ளது.
திருமலை திருப்பதியில் "பிரேக் தரிசனம்" என்ற ஒரு சிறப்பு தரிசனம் இருக்கிறது. இது விஐபி-க்கள், அரசியல் தலைவர்கள், நன்கொடையாளர்கள் போன்ற முக்கியமான நபர்களுக்கு வழங்கப்படும். பொது மக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்காமல், இந்த தரிசனத்தின் மூலம் சீக்கிரமாக சுவாமி தரிசனம் செய்யலாம்.
சமீபத்தில் தெலுங்கானா மாநில அரசியல் தலைவர்கள் கொடுக்கும் பரிந்துரை கடிதங்களுக்கு ஏற்ப பிரேக் தரிசனம் வழங்க ஆந்திர அரசு ஒப்புதல் வழங்கியது. இதனைத் தொடர்ந்து இந்த தரிசனத்தை கேட்பவர்களின் எண்ணிக்கை அதிகமாக தொடங்கியது. ஆந்திராவில் இருந்த நிறைய அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் பிரேக் தரிசனம் கேட்கும் காரணத்தினால் ஒரு நாளைக்கு 7,000 முதல் 7,500 தரிசனங்கள் வரை வழங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
எண்ணிக்கை அதிகரிப்பதால் பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்ய அதிக நேரம் ஆகிறது. இதனால் டிடிடி அதிகாரிகள் இவ்வளவு பரிந்துரை கடிதங்களையும் எப்படி சமாளிப்பது? யாருக்கு முன்னுரிமை கொடுப்பது? என்று தெரியாமல் புலம்பி வருகின்றனர்.
அதோடு ஒரு நாளைக்கு பல ஊர்களில் இருந்தும் திருப்பதி கோவிலுக்கு பக்தர்கள் வருகை தந்து கொண்டே இருக்கின்றனர். இதனால் பெரும்பாலான நாட்களில் திருப்பதியில் கூட்டம் இருக்கத்தான் செய்கிறது. தெலுங்கானாவில் பரிந்துரை கடிதங்களோடு வரும் பக்தர்கள் தங்கள் கடிதங்களுக்கு முன்னுரிமை அளிக்காதது குறித்து தங்கள் கோபத்தையும் வெளிப்படுத்தி வருகின்றனர். எனவே இந்த மாதம் 8-ஆம் தேதி நடைபெறும் வாரிய கூட்டத்தில் டிடிடி, பிரேக் தரிசனம் குறித்து முக்கிய முடிவுகள் எடுக்க வாய்ப்புள்ளது.
More From GoodReturns

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!



Click it and Unblock the Notifications