மூன்றாம் உலக போருக்கு வித்திடுகிறதா இஸ்ரேல்.. உண்மையை உடைத்த டக்கர் கார்ல்சன்.. ஈரானுக்கு ஆபத்தா..?

ஈரான் மீது பெரும் தாக்குதலை நடத்த அமெரிக்கா - இஸ்ரேல் தீவிரமாகத் திட்டமிட்டு வரும் வேளையில், புதிதாகத் துவங்க இருக்கும் போரில் அமெரிக்காவின் ஒற்றை இலக்காக இருக்கப்போவது Pickaxe மலை தான் எனத் தெரிவித்துள்ளார் டக்கர் கார்ல்சன்.

ஈரான் நீண்ட காலமாக தரைதளத்தில் இருந்து 300 மீட்டருக்கு கீழ் யூரேனியம் செறிவூட்டல் தளம் வைத்திருப்பதாகவும், தற்போது Pickaxe மலைக்குக் கீழ் இருக்கும் இத்தளத்தில் செறிவூட்டும் பணிகள் வேகமாகி வருவதாக இஸ்ரேல் தொடர்ந்து தெரிவித்து வருகிறது.

மூன்றாம் உலக போருக்கு வித்திடுகிறதா இஸ்ரேல்.. உண்மையை உடைத்த டக்கர் கார்ல்சன்.. ஈரானுக்கு ஆபத்தா..?

இந்த நிலையில் இத்தளத்தைத் தாக்குவதற்கு அமெரிக்கா அணு ஆயுதத்தைப் பயன்படுத்தக்கூடும் என டக்கர் கார்ல்சன் தெரிவித்துள்ளார். இந்த திட்டத்திற்குப் பின்னால் இருப்பதும், தொடர்ந்து டிரம்ப்-ஐ இத்தளத்தின் மீது தாக்குதல் நடத்த வலியுறுத்தி வருவதும் இஸ்ரேல் எனவும் தெரிவித்துள்ளார் டக்கர் கார்ல்சன்.

மேலும் தனது பதிவில் அமெரிக்கா அணு ஆயுதத்தைப் பயன்படுத்தினால் உலக நாடுகளும் அணு ஆயுதத்தை பயன்படுத்த ஊக்குவிப்பதாக மாறிவிடும். இதன் மூலம் ஆணு ஆயுதம் கொண்ட அனைத்து நாடுகளும் போரில் இறங்கத் திட்டமிடும் எனவும் எச்சரித்துள்ளார் டக்கர் கார்ல்சன்.

இவரின் நீண்ட டிவிட்டர் பதிவில் உலகில் பல நாடுகள் அணு ஆயுதம் கொண்டு இருந்தாலும், அமெரிக்காவைத் தவிர எந்த நாடும் போரில் அணு ஆயுதத்தை இதுவரையில் பயன்படுத்தியது இல்லை.

ஜப்பான் ஹிரோஷிமா, நாகசாகியில் நடத்தப்பட்ட மோசமான பாதிப்புக்குப் பின்பு அணு ஆயுதம் பயன்படுத்துவது மொத்தமாகத் தடை செய்தது. இந்த நிலையில் டிரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசு இஸ்ரேலின் அறிவுரை கேட்டு அணு ஆயுதத்தைப் பயன்படுத்தினால் புதிய பூகம்பம் வெடிக்கும்.

ஏற்கனவே ரஷ்யா வெளிப்படையாகத் தெரிவித்துள்ளது, அமெரிக்கா ஈரான் மீது அணு ஆயுதத்தைப் பயன்படுத்தினால் நாங்கள் உக்ரைன் மீது ஆணு ஆயுத தாக்குதலை மேற்கொள்வோம் என தெரிவித்துள்ளது.

இதேபோல் வடகொரியா தென் கொரியா என பல நாடுகள் அடுத்தடுத்து அணு ஆயுத தாக்குதலை மேற்கொள்ளும். ஈரான் மீது அமெரிக்காவின் முதல் அணு ஆயுத தாக்குதல் என்பது 3ஆம் உலக போரின் துவக்கப்புள்ளியாக இருக்கும். ஆனால் அந்த போர் குறுகிய காலத்தில் முடியும், இதேபோல் இது இறுதியாகவும் இருக்கும் என தெரிவித்தார் டக்கர் கார்ல்சன்.

இதேவேளையில் டிரம்ப் தலைமையிலான அரசு நிர்வாகம் இந்த வருடம் பிப்ரவரி மாதம் முதல் கொண்டு வந்த பல்வேறு மாற்றங்கள் மூலம் அணு ஆயுதத்தை பயன்படுத்துவதை எளிதாக்கியுள்ளது. இந்த மாற்றங்கள் குறித்து எதிர் கட்சிகளோ அல்லது கொள்கை வகுப்பாளர்களோ எவ்விதமான எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+