ஒரு மீனின் விலை 1.3 மில்லியன் டாலர்கள் அதாவது சுமார் 11 கோடி ரூபாய் என்றால் நம்புவீர்களா? இது ஒரு கட்டுக்கதை என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால், அதுதான் உண்மை. ஆம், ஜப்பானின் தலைநகரான டோக்கியோவில் இதுதான் நடந்தது. ஒவ்வொரு ஆண்டும் டோக்கியோவில் மீன் ஏலம் நடத்தப்படுகிறது. கடந்த ஐந்து ஆண்டுகளாக ஓனோடெரா என்ற குழு அதிக ஏலத்தில் இந்த மீனை வாங்கி வருகிறது. இம்முறையும் இக்குழுவினர் மீன் வாங்கி சாதனை படைத்துள்ளனர்.
இந்த மீன் புளூஃபின் டுனா ஆகும். அதன் எடை 276 கிலோ. இதை டோக்கியோவின் பிரபலமான சுஷி உணவகம் 1.3 மில்லியன் டாலர்களுக்கு ஏலம் எடுத்தது. இதன்படி ஒரு கிலோ மீனின் விலை சுமார் 4 இலட்சம் ரூபாயாகும்.

அறிக்கைகளின்படி, ஏலத்திற்குப் பிறகு, முதல் டுனா நல்ல அதிர்ஷ்டத்தைக் கொண்டுவரும் ஒன்று என்று ஏலத்திற்குப் பிறகு ஓனோடெரா அதிகாரி ஷின்ஜி நாகோ செய்தியாளர்களிடம் கூறினார். மக்கள் இதை சாப்பிட்டு ஒரு அற்புதமான ஆண்டைப் பெற வேண்டும் என்பதே எங்கள் விருப்பம் என்று கூறியுள்ளார்.
புளூஃபின் டுனாவின் சிறப்பு:புளூஃபின் டுனா நீண்ட ஆயுளுக்கும் பெயர் பெற்றது. சுமார் 40 வருடங்கள் வாழும் இந்த மீன் கடலின் ஆழத்திற்கு சென்று வேட்டையாடக்கூடியது. இந்த மீன் அதன் பெரிய அளவு மற்றும் அரிதாக இருப்பதால் மட்டும் விலை உயர்ந்ததாக இல்லை. மனித உடலுக்கு எண்ணற்ற நன்மைகளை இந்த மீன் வழங்குகிறது. எனவேதான் அதை கோடி மதிப்புள்ள மீனாக மிகவும் விலை உயர்ந்து காணப்படுகிறது.
பல கோடி ரூபாய் விலைக்கு காரணம்: புளூஃபின் டுனாவின் விலைக்கு மிகப்பெரிய காரணம் அதன் தேவை மற்றும் டிமாண்ட் தான். இந்த மீன் உலகின் பெரிய மற்றும் பிரபலமான உணவகங்களில் வழங்கப்படுகிறது. எனவே அதன் அதிக தேவை காரணமாக அதன் விலையை அதிகப்படியாக உயர்த்த காரணமாகிறது. இது தவிர, இந்த மீன் எங்கு கிடைக்கிறது, அதிலிருந்து எப்படி நமக்கு கிடைக்கிறது என்பது வரை இதன் விலையை நிர்ணயிப்பதில் ஒரு பெரிய காரணம். எனவேதான் ஜப்பானின் சுகாரு ஜலசந்தியில் அமைந்துள்ள ஓமாவின் புளூஃபின் டுனா மிகவும் விலை உயர்ந்ததாகக் கருதப்படுகிறது.
கருப்பு தங்கம் டுனா மீன்: ப்ளூஃபின் டுனா அதன் விலை மற்றும் அரிதான தன்மை காரணமாக கருப்பு தங்கம் என்று அழைக்கப்படுகிறது. இது கடலின் ஆழம் தொடர்பான கதை மட்டுமல்ல, குறைவான விநியோகமும் அதிக தேவையும் விலைமதிப்பற்றதாக ஆக்குகிறது.
விற்கப்பட்ட புளூஃபின் டுனா மீன், தோராயமாக ஒரு மோட்டார் பைக்கின் அளவு இருக்கும். ஜப்பானில் நடைபெற்ற வருடாந்திர மதிப்புமிக்க புத்தாண்டு ஏலத்தில் இதுவரை செலுத்தப்பட்ட இரண்டாவது அதிக விலையாகும். டோக்கியோ மீன் சந்தையில் அதிக விலைக்கு ஏலம் எடுத்த நபர் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஒரு டுனா மீனுக்கு $1.3 மில்லியன் செலுத்தியதாகக் கூறினார். இது வருடாந்திர மதிப்புமிக்க புத்தாண்டு ஏலத்தில் செலுத்தப்பட்ட இரண்டாவது அதிகபட்ச விலையாகும்.இதன் எடை 276 கிலோகிராம் (608 பவுண்டுகள்) ஆகும்.
டோக்கியோவின் பிரதான மீன் சந்தையில் 1999 ஆம் ஆண்டில் தரவு சேகரிக்கத் தொடங்கியதிலிருந்து இந்த ஆண்டின் தொடக்க ஏலத்தில் செலுத்தப்பட்ட இரண்டாவது அதிக விலை இதுவாகும். அதிக விலைக்கு தற்போது வாங்கிய ஓனோடெரா குழுமம் இப்போது ஐந்து ஆண்டுகளாக தொடர்ந்து அதிக விலையை கொடுத்து வருகின்றனர். கடந்த ஆண்டு டாப் டுனாவிற்கு 114 மில்லியன் யென் செலுத்தியது. ஆனால் 2019 ஆம் ஆண்டில் 278 கிலோகிராம் புளூஃபினுக்கு 333.6 மில்லியன் யென் ஏலத்தில் எடுக்கப்பட்டது.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

ஈரான் விவகாரத்தில் புதிய குண்டை தூக்கி போட்ட டிரம்ப்!! என்னென்ன சொல்றாரு பாருங்க!!



Click it and Unblock the Notifications