இந்திய பெண்கள் மத்தியில் பல வருடங்களாக அதிக மதிப்பையும், நம்பிக்கையை பெற்றிருக்கும் Tupperware, இந்தியாவில் பிளாஸ்டிக் பொருட்களின் தரத்தை உயர்த்தியது மட்டும் அல்லாமல் பிராண்டெட் பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்டை அதிகரிக்க முக்கியமான காரணம் இந்த அமெரிக்க நிறுவனம் தான். இதனாலேயே Tupperware நிறுவனத்தின் டப்பாக்களுக்கு இந்திய பெண்கள் மத்தியில் பெரும் வரவேற்பு உள்ளது.
1946 ஆம் ஆண்டு வேதியல் நிபுணர் Earl Tupper என்பவர் உருவாக்கிய Tupperware Brands தரமான மற்றும் மீண்டும் மீண்டும் பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களை தயாரிப்பதிலும், விற்பனையிலும் கொடிக்கட்டி பறந்து வந்த நிலையில் போட்டி அதிகரிப்பு, வர்த்தகம் பாதிப்பு என பல காரணங்கள் மத்தியில் வர்த்தகத்தை தொடர முடியுமா என தெரியவில்லை என இந்நிறுவனம் அறிவித்தது. இதை தொடர்ந்து Tupperware Brands பங்கு மதிப்பு 48 சதவீதம் வரையில் சரிந்தது.

Tupperware பொருட்கள் என்றாலே உணவு பொருட்களுக்கும், மீதமான உணவுகள் சேமிப்பிக்கும் Food Grade பிளாஸ்டிக். இது அமெரிக்க வீடுகளில் முக்கிய பிராண்டாக இருந்த வேளையில் தற்போது வர்த்தகம் குறைந்துள்ளது மட்டும் பிரச்சனை இல்லை, வேறு துறையில் இறங்குவதும், அதன் வெற்றி வாய்ப்புகள் குறித்தும் நம்பிக்கை இல்லாமல் உள்ளது தான் தற்போது முக்கிய பிரச்சனையாக உள்ளது.
கொரோனா தொற்று பாதிப்பு இருந்த 2020 ஆம் ஆண்டு 3வது காலாண்டில் மக்கள் அனைவரும் வீட்டிலேயே இருந்த காரணத்தாலும், வீட்டிலேயே சமைத்து சாப்பிட்ட காரணத்தாலும் இந்நிறுவனத்தின் வர்த்தகம் அதிகரித்து வருமானம் 4 மடங்கு உயர்ந்தது. ஆனால் தற்போது மக்கள் வெளியில் சாப்பிட துவங்கியதாலும், வீட்டில் சமைத்து மீதமுள்ள உணவுகளின் அளவு என்பது மிகவும் குறைவு. இதனால் டப்பரவேர் வர்த்தகம் குறைந்தள்ளது.
மேலும் ஈகாமர்ஸ் வளர்ச்சி பெரிய சுமையாக இருக்கும் வேளையில், Tupperware நிறுவனத்தின் நேரடி விற்பனை பெரிய அளவில் குறைந்தள்ளது. Tupperware சுமார் 70 நாடுகளில் 30 லட்சம் விற்பனையாளர்களை வைத்துள்ளது. இதேவேளையில் சீனா, இந்தியா, வியட்நாம் என உலகின் பல நாடுகளில் போட்டிக்கு பல நிறுவனங்கள் வந்துள்ளதால் ஆசிய சந்தையில் அதிகப்படியான வர்த்தகத்தை இழந்துள்ளது.
இந்த நிலையில் Tupperware நிறுவனம் எப்போது வேண்டுமானாலும் வர்த்தகம் இல்லாமல் மூடப்படலாம், இதனால் 77 ஆண்டு பழமையான Tupperware-க்கு வீழ்ச்சி அதிகாரப்பூர்வமாக துவங்கியுள்ளது.
More From GoodReturns

ஈரான் போர் நீடிப்பதால் மனம் மாறிய அமெரிக்கா!! திடீரென இந்தியாவுக்கு சலுகை!!

ஈரான் - அமெரிக்கா போர்.. நடுவில் சிக்கிக்கொண்டு தவிக்கும் ஜப்பான்.. பெரும் சீரழிவின் ஆரம்ப புள்ளி இதுதானா..?

வெளியான ரகசியம்.. ஈரான் மீதான போர்.. டிரம்ப் சொன்னது பொய்யா..? Pentagon-ல் நடந்தது என்ன..?

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!



Click it and Unblock the Notifications