துருக்கியில் மாதாந்திர சம்பளம் பெறும் ஊழியர்களுக்கு ஒரு அதிரடியான அறிவிப்பினை அந்நாட்டு ஜனாதிபதி தெரிவித்துள்ளார். இதன் மூலம் மாதாந்திர சம்பளம் பெறும் ஊழியர்கள் அதிக பலன்களை பெறுவார்கள்.
அப்படி என்னதான் அறிவிப்பினை கொடுத்துள்ளது. இதனால் ஊழியர்களுக்கு என்ன பலன்? நிறுவனங்களுக்கு என்ன பாதிப்பு? வாருங்கள் பார்க்கலாம்.
சம்பளம் அதிகரிக்கும்
2023ல் இருந்து துருக்கி அதன் ஊழியர்களின் மாதாந்திர அடிப்படை சம்பளத்தை 8506.80 லிரா (455 டாலராக) ஆக அதிகரிக்க திட்டமிட்டுள்ளது. இது ஜூலை மாதத்தில் நிர்ணயிக்கப்பட்ட அளவில் இருந்து 55% அதிகரிக்கும் என்றும், ஒதே ஜனவரியில் இருந்து 100% அதிகரிப்பு இருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தேவைப்பட்டால் மீண்டும் அதிகரிக்கும்
இது குறித்து செய்தியாளர் கூட்டத்தில் பேசிய அதிபர் தயிப் எர்டோகன், தேவைப்பட்டால் குறைந்தபட்ச சம்பளம் ஆண்டு முழுவதும் மீண்டும் உயர்த்தப்படலாம். சமீபத்திய மாதங்களில் பணவீக்கம் என்பது 85-க்கு மேல் உயர்ந்தது. ஆனால் இது சிறிது குறையத் தொடங்கியுள்ளது.
ஒப்பந்தத்தினை
எர்டோகன் நிறுவனங்களும், ஊழியர்கள் சங்கங்களும் ஒரு ஓப்பந்தத்தினை எட்ட முடியவில்லை என்றும், எண்ணிக்கையை தீர்மானிக்க அரசே களமிறங்கியதாகவும் கூறியுள்ளார். இது குறித்து ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்ற அறிவிப்பில் ஊழியர் சங்கப் பிரநிதிகள் கலந்து கொள்ளவில்லை என்றும் கூறியுள்ளார்.
குறைந்தபட்ச சமபளம் எவ்வளவு?
துருக்கிய ஆடை உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் ரமலான் கயாவின் கருத்துப்படி, குறைந்தபட்ச அதிகரிப்பு என்பது துருக்கி நிறுவனங்கள் மத்தியில் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
சமீபத்திய உயர்வுக்கு பிறகு நிறுவனங்களுக்கான குறைந்தபட்ச சம்பள செலவு இப்போது, 11, 758 லிரா (630 டாலராக ) உள்ளது. சமீபத்திய உயர்வுக்கு முன்பு இது 410 டாலர்களாக இருந்தது. எனவே இந்த செலவு அதிகரிப்பால் விலைவாசியும் அதிகரிக்கலாம் என எதிர்பர்க்கப்படுகிறது.
பணி நீக்கம் அதிகரிக்கலாம்
துருக்கியில் அதிகரித்து வரும் செலவினங்களுக்கு மத்தியில் நிறுவனங்கள் அந்த செலவு அதிகரிப்பினை, விற்பனையில் அதிகரிக்கலாம். இதனால் வாடிக்கையாளர்கள் துருக்கி நிறுவனங்களை விட்டு வெளியேறலாம்.
பங்களாதேஷ், வியட்நாம், இந்தியா மற்றும் கம்போடியா போன்ற போட்டியாளர்களுடன், போட்டியிட நிறுவனங்களுக்கான வாய்ப்பு குறையும். நாங்கள் வாடிக்கையாளர்களை இழக்கலாம். இதனால் வேலை இழப்பு அதிகரிக்கும். பணி நீக்கம் அதிகரிக்கலாம். ஜவுளித்துறையில் மட்டும் இது 10% இருக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இது சரியான முடிவா?
துருக்கி அரசின் இந்த அதிரடியான அறிவிப்பானது ஊழியர்கள் மத்தியில் சந்தோஷத்தினை கொடுத்தாலும், இது நீண்டகால நோக்கில் செயல்பாட்டுக்கு கொண்டு வர முடியுமா? இதனால் நிறுவனங்களின் எதிர்காலம் என்னவாகும்? உற்பத்தி செய்யப்படும் பொருட்களின் விலை என்னவாகும். இது மேற்கொண்டு பணவீக்கத்தினை தூண்டலாமே என்ற அச்சமும் எழுந்துள்ளது.
உலக நாடுகள் ஆச்சர்யம்
உலக நாடுகள் பலவும் சரிவினைக் கண்டு வரும் நிலையில், பற்பல நிறுவனங்களும் பணி நீக்கம் செய்து வருகின்றன. பல நிறுவனங்கள் சம்பளமில்லா விடுமுறை, சம்பளம் குறைப்பு என பிரச்சனைகள் நிலவி வருகின்றன. ஆனால் இந்த காலகட்டத்தில் துருக்கியின் இந்த அறிவிப்பு உலக நாடுகளை தங்கள் பக்கம் திரும்ப வைத்துள்ளது. இந்தியாவிலும் இப்படி ஒரு வாய்ப்பு வந்தால் நன்றாக இருக்கும் இல்லையா?


Click it and Unblock the Notifications