தமிழ்நாடு அரசு பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாட அறிவித்துள்ள பரிசு தொகை மக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தபடி, அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.3,000 பொங்கல் பரிசும், மகளிர் உரிமைத் திட்டத்தின் கீழ் ரூ.1,000 மாதாந்திர உதவியும் ஜனவரி மாதம் கிடைக்கும்.
இதனால் மொத்தம் ரூ.4,000 தொகை லட்சக்கணக்கான குடும்பங்களுக்கு செல்கிறது. இந்த சிறிய தொகையை செலவு செய்யாமல் சரியாக திட்டமிட்டு முதலீடு செய்தால், எதிர்காலத்தில் பெரும் சேமிப்பாக மாற்றலாம் என்று நிதி நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர். பல்வேறு சேமிப்பு திட்டங்கள் இதற்கு உதவும்.

சேமிப்பு வங்கி திட்டங்கள்
ரூ.4,000ஐ பாதுகாப்பான இடத்தில் வைக்க விரும்புபவர்கள் அஞ்சல் அலுவலக சேமிப்பு, வங்கி வைப்பு நிதி (FD) அல்லது ரெக்கரிங் டெபாசிட் (RD) தேர்வு செய்யலாம்.
தற்போது வங்கி வைப்பு நிதியில் 5 ஆண்டுகளுக்கு 7 முதல் 7.5 சதவீதம் வட்டி கிடைக்கிறது. ரூ.4,000 போட்டால் 5 ஆண்டுகளில் ரூ.6,000க்கு மேல் ஆகும்.
ரெக்கரிங் டெபாசிட்டில் மாதம் ரூ.333 போட்டாலும் போதும், 5 ஆண்டுகளில் நல்ல தொகை சேரும். பொது வருங்கால வைப்பு நிதி (PPF) திட்டத்தில் 7.1 சதவீத வரி இல்லா வட்டி கிடைக்கிறது, ஆனால் 15 ஆண்டு லாக்-இன் உள்ளது. இவை மூலதனத்தை பாதுகாத்து நிலையான வருமானம் தரும். பொங்கல் பரிசு ஆண்டுதோறும் மாறலாம் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு
கொஞ்சம் ரிஸ்க் எடுக்க தயாரானவர்கள் மியூச்சுவல் ஃபண்ட் தேர்வு செய்யலாம். ரூ.4,000ஐ ஒரே தொகையாக போட விரும்பினால் ஃப்ளெக்ஸி கேப் அல்லது ஸ்மால் கேப் ஃபண்ட் சிறந்தது. க்ரோ, ஜீரோதா காயின் போன்ற ஆப்புகள் வழியாக ரூ.100 முதல் தொடங்கலாம்.
கடந்த 10 ஆண்டுகளில் இவை 12 முதல் 18 சதவீதம் வருமானம் தந்துள்ளன. 7 முதல் 10 ஆண்டுகளில் ரூ.12,000 முதல் ரூ.20,000 ஆக வளரலாம். ரிஸ்க் இருந்தாலும் நீண்ட காலத்தில் பணவீக்கத்தை எதிர்கொள்ள உதவும். முதலுக்கு பெரிய இழப்பு வாய்ப்பு குறைவு.
பங்குச் சந்தை மற்றும் தங்கம்
அதிக ரிஸ்க் எடுக்க தயாரானவர்கள் பங்குச் சந்தையில் நல்ல நிறுவன பங்குகளை வாங்கலாம். க்ரோ, ஜீரோதா போன்ற ஆப்புகள் வழியாக ரூ.4,000ஐ பிரித்து முதலீடு செய்யலாம். தங்கத்தில் ETF அல்லது காயின் வாங்கலாம். கடந்த 5 ஆண்டுகளில் தங்கம் ஆண்டுக்கு 12 சதவீதம் உயர்ந்துள்ளது. ரூ.4,000இல் 1 கிராம் தங்க நாணயம் பாதுகாப்பும் லாபமும் தரும்.
இன்சூரன்ஸ் திட்டங்கள்
பொதுத்துறை வங்கிகள் மற்றும் தபால் துறை சாமானிய மக்களுக்கு உதவும் திட்டங்களை வழங்குகின்றன. இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி (IPPB) தனிநபர் விபத்து காப்பீடு அளிக்கிறது. 18 முதல் 65 வயது வரை சேரலாம். ரூ.5 லட்சம் காப்பீட்டுக்கு ஆண்டு பிரீமியம் ரூ.355, ரூ.10 லட்சத்துக்கு ரூ.555, ரூ.15 லட்சத்துக்கு ரூ.755. இது ஒரு ஆண்டுக்கு மட்டுமே.
சின்ன கல்லு பெத்த லாபம்
ரூ.4,000ஐ செலவு செய்யாமல் ரூ.2,000ஐ FD அல்லது RDயில், ரூ.2,000ஐ மியூச்சுவல் ஃபண்ட் SIPயில் போடலாம். இது ஆபத்தை சமநிலைப்படுத்தும். மகளிர் உரிமைத் தொகை மாதம் ரூ.1,000 கிடைப்பதால், அதை RD அல்லது SIPயில் போட்டால் ஆண்டுக்கு ரூ.12,000 சேமிப்பாக மாறும்.


Click it and Unblock the Notifications