பெரும்பாலான மக்களுக்கு தொழில் தொடங்கும் எண்ணம் ஏற்படுகையில், ஒரு படி பின்வாங்குகின்றனர். என்னதான் லாபம் மக்களுக்கு மகிழ்ச்சியை தந்தாலும், நஷ்டம் ஏற்படுமோ என்ற எண்ணம் அவர்களை பின்வாங்க வைக்கிறது. அதனால்தான் உங்களுக்கு ஆர்வமுள்ள வணிகங்களில் முதலீடு செய்வது நல்லது என்று சொல்லப்படுகிறது. சமைப்பதில் ஆர்வம் உள்ளவர்கள் டிபன், மதிய உணவு போன்ற தொழிலைத் தொடங்குவது ஒரு சிறந்த வழியாக இருக்கும். டிபன் தொழிலைத் தொடங்க குறைந்தபட்ச முன் முதலீடு தேவைப்படுகிறது, ஆனால் திறமையாக செயல்பட்டால் எதிர்பார்க்கும் வருமானத்தை எளிதில் பெறலாம்.
வீடுகளை விட்டு வெகு தொலைவில் தங்கி வேலை பார்ப்பவர்கள் மற்றும் மாணவர்களுக்கு நல்ல காலை உணவைத் தயார் செய்து வழங்குவதன் மூலம் உங்களுடைய வாடிக்கையாளர்களாக மாற்றலாம்.

வீட்டை விட்டு வெளியில் வந்து விடுதிகளில், தங்கி இருக்கும் மாணவர்களுக்கு வீட்டில் சமைக்கும் உணவுகளைச் சாப்பிட வேண்டும் என்ற எண்ணம் அடிக்கடி வருவதுண்டு. இதனை உங்கள் தொழிலுக்கு சாதகமாக, நீங்கள் மாற்றிக் கொள்ளலாம். வீட்டு முறையில் காலை உணவை தயார் செய்து வழங்கும்போது மாணவர்களும், வேலைக்கு செல்லும் நபர்களும் உங்களுடைய உணவை விரும்பி வாங்குவார்கள்.
நீங்கள் வீட்டில் டிபன் தொழிலைத் தொடங்க போகிறீர்கள் என்றால், சமைப்பதற்கு, மொத்த ஆர்டர்களைப் பேக்கிங் செய்வதற்கு போதுமான இடம் இருக்க வேண்டும். ஒரு வழக்கமான இந்திய வீட்டின் சமையலறையில் 20 முதல் 30 பேருக்கு உணவு தயாரித்து பரிமாற முடியும். அதே உங்கள் வாடிக்கையாளர்கள் 40 பேருக்கு மேல் அதிகமானால் நீங்கள் ஒரு கடையை வாடகைக்கு எடுக்க வேண்டி இருக்கலாம்.
சந்தைப்படுத்தல்: டிபன் தொழிலை மார்க்கெட்டிங் செய்வதற்கு வாய் வார்த்தைகளையே நம்ப வேண்டும். உங்களிடம் வந்து சாப்பிட்டவர்கள் மற்றவர்களிடம் சென்று நல்ல கருத்தை தெரிவித்தால் உங்களுக்கு வாடிக்கையாளர்கள் தானாகவே அதிகரிக்கும். அதற்கு நீங்கள் சுவையுள்ள உணவுகளை வரும் வாடிக்கையாளர்களுக்கு வழங்க வேண்டும். சுவை மட்டுமல்லாமல், சுகாதாரமும் முக்கியம். மேலும் சமூக ஊடகங்களை பயன்படுத்தி மார்க்கெட்டிங் செய்யலாம்.
உங்கள் டிபன் தொழிலை வளர்ச்சி பாதையை நோக்கி கொண்டு செல்ல வைக்க ஒரு இணையதளத்தை உருவாக்கலாம் அல்லது இன்ஸ்டாகிராம் மற்றும் பேஸ்புக்கில், நீங்கள் சமைத்த உணவுகளின் படங்களை போஸ்ட் செய்யலாம். உங்களுடைய பாலோவர்ஸ் அதிகரிக்கும் போது, நீங்கள் எதிர்பார்த்ததை விட அதிகமான வாடிக்கையாளர்களை நீங்கள் பெறலாம்.
முதலீடு: உங்களுடைய செலவைக் கணக்கிடுவதற்கு முன், உணவை சமைக்க பருப்பு, அரிசி, மாவு, எண்ணெய் போன்ற பொருட்கள் தேவைப்படும். ஆரம்பத்தில் ஒருமுறை முதலீடு செய்வீர்கள், அதன் பின்பு தொடர்ந்து முதலீடு செய்ய வேண்டி இருக்கும். மேலும் சமையல் உபகரணங்கள், அடுப்பு மற்றும் பிற பொருட்களுக்கு ரூ.20,000 முதல் ரூ.30,000 வரை செலவழிக்க வேண்டும். மேலும், ஒரு டிபன் வியாபாரத்தை பராமரிக்க பல தொடர்ச்சியான செலவுகள் உள்ளன.
உரிமம்: உங்கள் டிபன் தொழிலைத் தொடங்கிய பிறகு, இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தரநிலை ஆணையம் (FSSAI) உங்களுக்கு உணவு மற்றும் பாதுகாப்பு உரிமத்தை வழங்கும். ஆனால் இது, ஒரு வருடத்திற்கு ரூ. 12 லட்சம் அல்லது அதற்கு மேல் வருமானம் ஈட்டும் நிறுவனங்களுக்கு மட்டுமே இது தேவைப்படும்.
சிறு தொழிலாக செய்ய வேண்டும் என்று நினைத்தால், நீங்கள் தள்ளுவண்டி கடையை கூட நடத்தலாம். தற்போது ஒரு இட்லி 3 ரூபாய் முதல் 5 ரூபாய் வரை விற்கப்படுகிறது. நீங்கள் இருக்கும் இடத்திற்கு தகுந்தாற் போல், உங்களுடைய வியாபாரத்தில் விலையை நிர்ணயிக்கலாம். ஆனால் தொழில் தொடங்கும் போது சற்று குறைவான விலையில் கொடுப்பது, அதிக வாடிக்கையாளர்களின் பக்கம் உங்கள் கடையை பதிய வைக்க உதவும்.
More From GoodReturns

ரூ.666 இருந்தால் போதும் ரூ.1 கோடி இலக்கை எட்டலாம்…!! அட இவ்வளவு ஈஸியான வழி இருக்கா?

முகேஷ் அம்பானிக்கு ரூ.1 லட்சம் கோடி நஷ்டம்; 2 நாட்களில் 6% சரிவடைந்த ரிலையன்ஸ் பங்கு மதிப்பு!!

வங்கி கடனை விட ஈஸி! உங்கள் PPF பணத்தை வைத்தே கடன் பெறலாம் - புதிய விதிமுறைகள் என்ன?

5 ஆண்டுகளில் ரூ.1 லட்சத்தை ரூ.25 லட்சமாக மாற்றிய பென்னி ஸ்டாக்: உங்க போர்ட்போலியோவுல இருக்கா?

பங்குச்சந்தை ஏறினாலும், இறங்கினாலும் கண்டுக்காதீங்க: சென்செக்ஸ் சொல்லி தரும் பாடம் இது தான்!!

EMI-யும் கட்டியாச்சு,லாபமும் பார்த்தாச்சு! ரூ8 கோடியை வைத்து ரூ10 கோடி வீட்டை வாங்கிய சாதுர்ய நபர்!

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

PF கணக்கில் வரும் 5 மேஜர் மாற்றங்கள்!! EPFO 3.0இல் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் என்னென்ன?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!



Click it and Unblock the Notifications