கம்பெனி காசில் பலான க்ளப்களில் களியாட்டம் போட்ட CEO..! கம்பெனி என்ன செய்தது..?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பொதுவாக நாம் வேலை பார்க்கும் அலுவலகத்தில், நம் பதவிக்கு தகுந்தாற் போலத் தான் நமக்கு பயணச் செலவுகளுக்கான கட்டணம், படிக் காசு, உணவு மற்றும் தங்கும் விடுதிகளுக்கான செலவுகளைக் கொடுப்பார்கள்.

அது போக, மேற் கொண்டு சில செலவுகளைச் செய்து கொள்ளவும் படிக் காசு கொடுப்பார்கள்.

இதில் ஏதாவது சொதப்பினால், கம்பெனி நமக்கு காசு கொடுக்காது. கேட்டால் உங்கள் பதவி அல்லது பே பேண்டை மீறி செலவழித்து இருக்கிறீர்கள் என மறுத்து விடுவார்கள். இங்கு ஒரு கம்பெனியின் பெரிய நபரையே இந்த காரணம் சொல்லி பத்திவிட்டார்கள் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்!

கம்பெனி

கம்பெனி

டர்வோ இன்க் (Turvo inc) தான் அந்த கம்பெனியின் பெயர். இந்த நிறுவனம் லாஜிஸ்டிக்ஸ் சொல்யூஷன் சேவைகளை வழங்கிக் கொண்டு இருக்கிறது. இந்த கம்பெனியின் முதன்மைச் செயல் அதிகாரியாக (CEO) இருந்தவர் தான் எரிக் கில்மோர் (Eric Gilmore). இவர் இந்த டர்வோ இன்க் நிறுவனத்தின் நிறுவனரும் கூட.

எரிக் கில்மோர்

எரிக் கில்மோர்

டர்வோ இன்க் நிறுவனத்தை நிறுவிய எரிக் கில்மோரும் ஒன்றும் லேசு பட்ட ஆள் கிடையாது. பில் கேட்ஸின் மைக்ரோசாஃப்ட், கூப்பன்ஸ் டாட் காம் போன்ற நிறுவனங்களில் வேலை பார்த்த பழுத்த அனுபவசாலி. இந்த அனுபவசாலியும் Mubadala Investment Co. போன்ற முதலீட்டு நிறுவனத்தின் பணமும் ஒன்று சேர்ந்து தொடங்கியது தான் அந்த டர்வோ இன்க்.

ஜாலி

ஜாலி

இந்த எரிக் கில்மோர் கொஞ்சம் ஜாலியான டைப் போல. மனிதர் தன் க்ளயிண்ட்களை குஷிப்படுத்த அவ்வப் போது பலான க்ளப்களுக்கு (ஸ்ட்ரிப் க்ளப்களுக்கு) அழைத்துச் செல்வாராம். இப்படி கடந்த மூன்று ஆண்டுகளில் சுமார் 76,120 டாலர் பலான க்ளப்களுக்கு செலவழித்து இருப்பதாகச் செய்திகள் வெளியாயின.

பஞ்சாயத்து

பஞ்சாயத்து

அப்படி டர்வோ இன்க் நிறுவனத்தின் க்ளயிண்ட்களை, குஷிப்படுத்த, பலான க்ளப்களுக்கு அழைத்துச் செல்வதோடு மட்டும் இல்லாமல், அந்த செலவுகளை தில்லாக டர்வோ இன்க் நிறுவனத்திலேயே முறையாக கணக்கு எழுதியும் கொடுத்து விடுவாராம். அந்த அளவுக்கு திறந்த புத்தகமாக இருந்திருக்கிறார் மனிதர்.

பாதிக்கு மேல்

பாதிக்கு மேல்

ஒரு கட்டத்தில் டர்வோ இன்க் நிறுவனத்தின்பொழுது போக்கு செலவுகளில் பாதிக்கு மேல், பலான க்ளப்களுக்குச் செல்லத் தொடங்கியது. இதை டர்வோ இன்க் நிறுவனத்தின் முதன்மை நிதி அதிகாரியாக (CFO) இருந்தவர் சுட்டிக் காட்டி இருக்கிறார். விஷயம் டர்வோ இன்க் நிறுவனத்தின் இயக்குநர் குழு வரை தெரிந்துவிட்டது.

நடவடிக்கை

நடவடிக்கை

கடந்த மே 2019-ல் டர்வோ இன்க் நிறுவனத்தின் இயக்குநர்கள் குழு கூடியது. எரிக் கில்மோர் செய்தது தவறு என வாதாடியது இயக்குநர்கள் குழு. அதோடு எரிக் கில்மோரை சி இ ஓ பதவியில் இருந்து விலகச் சொன்னது. எரிக் கில்மோர் மறுத்துவிட்டார். ஆனால் இயக்குநர்கள் குழு தங்கள் பலத்தைப் பயன்படுத்தி எரிக் கில்மோரை பதவியில் இருந்து இறக்கி வீட்டுக்கு அனுப்பிவிட்டார்கள்.

எரிக் தரப்பு

எரிக் தரப்பு

எரிக் கில்மோரோ, டர்வோ இன்க் நிறுவனம், தன்னை முறையற்ற ரீதியில், சி இ ஓ பதவியில் இருந்து வெளியேற்றி விட்டதாக வழக்கு தொடுத்து இருக்கிறார். இப்போது வரை எரிக் கில்மோர் டர்வோ இன்க் நிறுவனத்தின் மிகப் பெரிய பங்குதாரராகவும், இயக்குநர் குழுவில் ஒருவராகவும் இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இதுவரை பலான க்ளப்களுக்குச் சென்றதை மறுக்கவும் இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

Read more about: ceo சிஇஓ
English summary

Turvo inc CEO fired spending office money in pleasure clubs

The logistics technological solution providing company Turvo inc has fired its CEO Eric Gilmore for spending office money in pleasure clubs for their clients.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X