தூத்துக்குடி: தூத்துக்குடி விமான நிலைய விரிவாக்க பணிகள் வரும் டிசம்பர் மாதத்திற்குள் முடிவடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது 381 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தூத்துக்குடி விமான நிலையத்தை விரிவாக்கம் செய்யும் பணிகள் நடைபெற்ற வருகின்றன.
குறிப்பாக ஏர் 321 ரக விமானங்கள் சென்று வரும் வகையில் ஓடுபாதைகள் கட்டமைக்கப்பட்டு வருகின்றன. அது மட்டும் இன்றி ஆண்டுக்கு 20 லட்சம் பயணிகளை கையாளும் திறன் கொள்ளும் வகையில் புதிய டெர்மினல்கள் கட்டமைக்கப்பட்டு வருகின்றன.

இந்த பணிகள் அனைத்தும் வரும் டிசம்பர் மாதத்திற்குள் முடிவடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியா விமான நிலைய ஆணையம் இந்த தகவலை வெளியிட்டுள்ளது. கடந்த சனிக்கிழமை அன்று இந்திய விமான நிலைய ஆணைய குழு தலைவர் சுரேஷ் தூத்துக்குடி விமான நிலையத்தில் நடைபெற்று வரும் பணிகளை நேரில் சென்று ஆய்வு செய்தார்.
இதனை அடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அவர் தூத்துக்குடி விமான நிலைய விரிவாக்க பணிகள் 80 சதவீதத்திற்கும் மேல் முடிவடைந்து விட்டதாகவும் வரும் டிசம்பர் மாதத்திற்குள் இந்த பணிகள் அனைத்தும் முழுமை அடைந்து விடும் என்றும் தெரிவித்துள்ளார்.
வரும் காலங்களில் இந்த விமான நிலையத்திலிருந்து சர்வதேச விமானங்களை இயக்குவதற்கான முயற்சிகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார். தற்போது தூத்துக்குடி விமான நிலையம் 17500 சதுர மீட்டர் பரப்பளவில் அமைந்திருக்கிறது. இங்கே புதிதாக ஒரு முனையம் கட்டப்பட்டு வருகிறது.
பீக் அவர்களில் 1440 பயணிகளை கையாளும் வகையிலும் ஆண்டுக்கு 20 லட்சம் பயணிகளை கையாளும் திறன் கொண்டதாகவும் இந்த விமான நிலையம் கட்டப்பட்டு வருகிறது. இந்த புதிய டெர்மினல் அனைத்து நவீன வசதிகளும், பயணிகளுக்கு தேவையான அனைத்து சேவைகளையும் வழங்கக் கூடியதாக இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது இருக்கக்கூடிய தூத்துக்குடி விமான நிலைய ஓடுபாதை 1350 மீட்டராகும். இதனை 3115 மீட்டர் என விரிவாக்கம் செய்கின்றனர். எனவே பெரிய ரக விமானங்கள் கூட இங்கே எளிதாக தரை இறங்கி செல்ல முடியும்.
தற்போது தூத்துக்குடி விமான நிலையம் சென்னை மற்றும் பெங்களூர் விமான நிலையங்களுடன் இணைக்கப்பட்டுள்ளது. நாள்தோறும் இங்கே ஆறு விமானங்கள் இயக்கப்படுகின்றன. பீக் அவர்களில் 156 பயணிகளை கையாளும் திறன் கொண்டதாக இந்த விமான நிலையம் இருக்கிறது.
அதுமட்டுமின்றி ஆண்டுக்கு மூன்று லட்சம் பயணிகளை இது கையாளுகிறது. புதிய முனையம் செயல்பாட்டுக்கு வந்துவிட்டால் சிங்கப்பூர், மலேசியா உள்ளிட்ட நாடுகளுக்கு எல்லாம் முதல் கட்டமாக விமானங்கள் இயங்கப்படும் என தெரிகிறது.
Story written by: Devika


Click it and Unblock the Notifications