இந்தியாவின் எரிபொருள் பயன்பாட்டில் பெரிய மாற்றத்தைக் கொண்டு வரும் இலக்கில் மத்திய மாநில அரசுகள் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. குறிப்பாக இந்தியாவில் உற்பத்தித் துறை வளர்ச்சி அடைய துவங்கிய வேளையில் அதிகப்படியான மின்சாரம், எரிபொருள் தேவை உருவாகியுள்ளது. இதேவேளையில் சுற்றுச் சூழல் கடுமையாகப் பாதிக்கப்பட்டு வருகிறது.
இந்த இரண்டையும் ஈடு செய்ய வந்தது தான் கிளீன் எனர்ஜி. சோலார், காற்றாலை, முதல் கிரீன் ஹைட்ரஜன் வரையில் பல புதுப்பிக்கத்தக்க எரிசக்திக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வரும் வேளையில் தற்போது தென்மாவட்டமான தூத்துக்குடி இந்தியாவின் ஹைட்ரஜன் ஹைப் ஆக மாறி வருகிறது.

தூத்துக்குடியில் கிரீன் ஹைட்ரஜென் தயாரிக்க ACME நிறுவனம் 52,000 கோடி ரூபாயும், Petronas நிறுவனம் 34,000 கோடி ரூபாயும், Sembicorp நிறுவனம் 36,238 கோடி ரூபாயும், Leap Green Energy நிறுவனம் 22,842 கோடி ரூபாயும், NTPC கிரீன் ஹைட்ரஜன்-க்காக மாபெரும் கட்டமைப்பை உருவாக்கி வருகிறது. இதில் Sembicorp மற்றும் Leap Green Energy ஆகியவை தமிழ்நாடு சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாட்டில் வந்துள்ளது.
இதில் லீப் கிரீன் எனர்ஜி நிறுவனம் (Leap Green Energy) தூத்துக்குடி மாவட்டத்தில் ஒருங்கிணைந்த கிரீன் ஹைட்ரஜன் மின் சேமிப்பு ஆலையை அமைக்க ரூ.17,000 கோடி முதலீடு செய்ய உள்ளது. இந்த முதலீட்டின் மூலம் 3,300 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.
சிங்கப்பூரைச் சேர்ந்த செம்கார்ப் (Sembicorp) 36,238 கோடி முதலீட்டில் தூத்துக்குடி மாவட்டத்தில் கிரீன் ஹைட்ரஜன் ஆலையை அமைக்கத் தமிழ்நாடு சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாட்டில் தமிழ்நாடு அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது. இந்த முதலீட்டின் மூலம் 1511 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.
கிரீன் ஹைட்ரஜன் தயாரிப்புக்கு உதவி செய்யவே பல சோலார், காற்றாலை போன்ற புதுப்பிக்கத்தக்க மின்சார உற்பத்தி நிறுவனங்கள் தூத்துக்குடியில் அதிகப்படியான முதலீடுகளைக் குவித்து வருகிறது. தண்ணீரில் இருந்து தான் கிரீன் ஹைட்ரஜன் உருவாக்கப்படுகிறது, தண்ணீர் மூலக்கூறில் இருக்கும் H20-வை தனியாகப் பிரிப்பது மூலம் ஹைட்ஜன் வாயு உருவாக்க முடியும்.
இதை electrolysis மூலம் உருவாக்க முடியும், ஆனால் இந்த electrolysis இயக்க மின்சாரம் வேண்டும். இதில் பயன்படுத்தும் மின்சாரம் புதுப்பிக்கத்தக்க மின்சாரமாக இருந்தால் இதுதான் கிரீன் ஹைட்ரஜன். இதை வாகனங்கள் எரிபொருளாகப் பயன்படுத்துவதில் துவங்கி கெமிக்கல் துறை, விவசாய உரம் தயாரிப்பு, பெட்ரோகெமிக்கல் துறை, ஸ்டீல் தயாரிப்பு, வீட்டில் இயற்கை எரிவாயுவுக்கு பதிலாக ஹைட்ரஜன் பயன்படுத்த முடியும்.
இதற்காகத் தூத்துக்குடியில் உள்ள விஏஓ சிதம்பரனார் துறைமுகத்தில் கிரீன் ஹைட்ரஜன் மையத்தை அமைப்பதற்காக 500 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டு உள்ளது. இது கிரீன் ஹைட்ரஜன் அல்லது அதன் உப பொருட்கள் உற்பத்தி வசதியை நிறுவுவதற்காக NTPC இன் துணை நிறுவனமான NGEL உடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கடந்த ஆண்டு கையெழுத்திட்டுள்ளது.
இதன் மூலம் தூத்துக்குடியில் உற்பத்தி செய்யப்படும் கிரீன் ஹைட்ரஜென்-ஐ தூத்துக்குடியில் உள்ள விஏஓ சிதம்பரனார் துறைமுகத்தில் சேமிக்கப்பட்டு வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட உள்ளது.
More From GoodReturns

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

டிரம்ப்-ன் அந்த ஒரு வார்த்தை.. ஈரான் அரசு கடும் கோபம்.. வெளியான உச்சக்கட்ட எச்சரிக்கை..!!



Click it and Unblock the Notifications