அனில் அகர்வால் தலைமையிலான வேதாந்தா குழுமம் தமிழ்நாட்டில் இருக்கும் தங்களுடைய ஸ்டெர்லைட் காப்பர் தொழிற்சாலையை மீட்டு எடுக்க நீண்ட காலமாக முயற்சி செய்து வந்த நிலையில், இந்த தொழிற்சாலையை சுமார் 4500 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்வதற்கான பணிகளை ஜூன் மாதம் துவங்கியது. ஆனால் இப்போது ஒரு ட்விஸ்ட்
ஜூன் மாத துவக்கத்தில் ஸ்டெர்லைட் காப்பர் தொழிற்சாலையை விற்பனை செய்ய விருப்ப விண்ணப்பம் கோரிய நிலையில் ஜூலை 4 ஆம் தேதி கடைசி நாளாக அறிவிக்கப்பட்டது.

இந்த அறிவிப்பு வெளியாகி அடுத்த ஒரு வாரத்தில் தற்போது இத்தொழிற்சாலையை இயக்க கான்டிராக்டர்-க்கான விருப்ப விண்ணப்பம், தொழிற்சாலை மீண்டும் இயக்க தேவையான உற்பத்தி பொருட்களை சப்ளை செய்வதற்கான விருப்ப விண்ணப்பத்தையும் வேதாந்தா குழுமம் கோரியுள்ளது என பைனான்சியல் எக்ஸ்பிரஸ் தெரிவித்துள்ளது.
இதனால் வேதாந்தா குழுமம் ஸ்டெர்லைட் காப்பர் தொழிற்சாலையை விற்பனை செய்யும் திட்டத்தை கைவிட்டு உள்ளதா என்ற கேள்வி எழுத்துள்ளது. வேதாந்தா குழுமம் தப்போது கோரியுள்ள உற்பத்தி பொருட்கள் பட்டியலில் தாமிரம், இறக்குமதி செய்யப்பட்ட நிலக்கரி, பாஸ்பேட் கட்டிகள், பெட்ரோலியம் பொருட்கள் ஆகியவை அடங்கும்.
மேலும் வேதாந்தா குழுமம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கான்டிராக்டர் மற்றும் உற்பத்தி பொருட்களுக்கான விருப்ப விண்ணப்ப தேர்வில் உள்ளூர் மற்றும் தமிழ்நாட்டு நிறுவனங்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என அறிவித்துள்ளதாக FE தெரிவித்துள்ளது.
தூத்துக்குடியில் இருக்கும் ஸ்டெர்லைட் ஆலை கடந்த ஐந்து ஆண்டுகளாக மூடப்பட்டு உள்ள காரணத்தால், வேதாந்தா குழுமம் ஜூன் 2022 இல் இந்த தொழிற்சாலையை விற்பனை செய்வதற்காக விருப்ப விண்ணப்பத்தை பெற முடிவு செய்த போது, இத்தொழிற்சாலையை வாங்க யாரும் விருப்பம் தெரிவிக்கவில்லை.
இந்த நிலையில் அனில் அகர்வால் தலைமையிலான வேதாந்தா குழுமம் மீண்டும் தொழிற்சாலையை விற்பனை செய்வதற்கான பணிகளை வங்கிகளிடம் ஜூன் மாத தொடக்கத்தில் துவங்கியது. அனில் அகர்வால் பெரிய நிதி நெருக்கடியான நிலையில் இருக்கும் வேளையில் ஸ்டெர்லைட் தொழிற்சாலையை விற்பனை செய்ய வேண்டியது முக்கியமானதாக உள்ளது.
உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டுதலைத் தொடர்ந்து ஸ்டெர்லைட் ஆலையின் செயல்பாடுகளை மீண்டும் தொடங்க தேவையான நடவடிக்கைகளை தீர்ப்புக்கு முன்பு எடுக்க அனுமதி அளித்துள்ள நிலையில், தற்போது ஆகஸ்ட் மாதம் வெளியாகும் இறுதி தீர்ப்பை எதிர்பார்த்து தொழிற்சாலையை மீண்டும் இயக்கத்திற்கு கொண்டு வர முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.
எது எப்படியிருந்தாலும் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையின் செயல்பாடுகள், எதிர்காலம் அனைத்தும் ஆகஸ்ட் மாதம் வெளியாகும் சுப்ரீம் கோர்ட் இறுதி தீர்ப்பு அடிப்படையில் தான் உள்ளது.


Click it and Unblock the Notifications