தூத்துக்குடி மக்களுக்கு ஒரு குட் நியூஸ்.. சின்னதா இருந்தாலும் பயன் அதிகம்..!

தூத்துக்குடி: தமிழ்நாட்டில் பெரும்பாலான பகுதிகளில் புதிய முதலீடுகள் குவிந்து வரும் வேளையில் தூத்துக்குடி மாநிலத்தின் முக்கிய உற்பத்தி தளமாக மாறியிருக்கிறது. சென்னைக்கு இணையாக தூத்துக்குடி துறைமுகத்தை மேம்படுத்த வேண்டும் என்ற முக்கிய இலக்குடன் பல வளர்ச்சி பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதில் முக்கியமாக தூத்துக்குடி வ. உ. சிதம்பரனார் துறைமுகத்தை விரிவாக்கம் செய்யவும், புதிய சேவைகளை கொண்டு வரவும் JSW குழுமத்துடன் ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளது. கடந்த 5 வருடத்தில் வின்பாஸ்ட் முதல் பல நிறுவனங்கள் முதலீடு செய்து தொழிற்சாலையை அமைத்து வருகிறது. இதேபோல் பெரும்பாலான நிறுவனங்கள் வெளிநாட்டு ஏற்றுமதிக்காக முதலீடு செய்ய ஆர்வம் காட்டி வருகிறது.

தூத்துக்குடி மக்களுக்கு ஒரு குட் நியூஸ்.. சின்னதா இருந்தாலும் பயன் அதிகம்..!

இந்த நிலையில் தூத்துக்குடி வ. உ. சிதம்பரனார் துறைமுகத்தில் பெரிய கப்பல்களைக் கையாளும் வகையில் விஓசி போர்ட் அத்தாரிட்டி மற்றும் JSW Tuticorin Multipurpose Terminal Private Limited நிறுவனத்துடன் இணைந்து ரூ.265 கோடி மதிப்பில் வடக்கு சரக்கு தளம்-III (NCB-III) சிறப்பான முறையில் பயன்படுத்தும் வகையில் மேம்படுத்த ஒப்பந்தம் கையெழுத்திட்டுள்ளது.

இந்த ஒப்பந்தம் மூலம் வடக்கு சரக்கு தளம்-III, வடிவமைப்பு, கட்டுமானம், நிதி, இயக்கம் மற்றும் பரிமாற்றம் (DBFOT) முறையில் 30 ஆண்டுகளுக்கு உலர் சரக்குகளை கையாளும் வகையில் மேம்படுத்தப்பட உள்ளது.

வஓசி சிதம்பரனார் துறைமுகத்தின் தலைவர் சுசான்டா குமார் பேசுகையில், 306 மீட்டர் நீளமும், 14.20 மீட்டர் ஆழமும் கொண்ட இந்த புதிய முனையம், 80,000 டன் எடையுள்ள போஸ்ட்-பனாமக்ஸ் (Post-Panamax) கப்பல்களைக் கையாளும் திறன் கொண்டது. இதன் மூலம் இறக்குமதியாளர்கள் பெருமளவிலான சரக்குகளை குறைந்த செலவில் இறக்குமதி செய்ய முடியும் என்று இந்த முதலீட்டையும் அதன் பயனையும் விளக்கினார்.

தூத்துக்குடி மக்களுக்கு ஒரு குட் நியூஸ்.. சின்னதா இருந்தாலும் பயன் அதிகம்..!

இந்த திட்டத்தின் மூலம் நிலக்கரி, சுண்ணாம்புக்கல், ஜிப்சம் மற்றும் ராக் பாஸ்பேட் போன்ற உலர் சரக்குகளை கையாள முடியும். மேலும், இந்த திட்டம் பொருளாதார வளர்ச்சிக்கு வழிவகுத்து, சுமார் 500 பேருக்கு நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்புகளை உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சமீபத்திய தூத்துக்குடி முதலீடுகளும், தொழிற்சாலைகளும்:

தூத்துக்குடியில் கிரீன் ஹைட்ரஜன் தயாரிக்க ACME நிறுவனம் 52,000 கோடி ரூபாயும், Petronas நிறுவனம் 34,000 கோடி ரூபாயும், Sembicorp நிறுவனம் 36,238 கோடி ரூபாயும், Leap Green Energy நிறுவனம் 22,842 கோடி ரூபாயும், NTPC கிரீன் ஹைட்ரஜன்-க்காக மாபெரும் கட்டமைப்பை உருவாக்கி வருகிறது.

தூத்துக்குடியில் வியட்நாம் நாட்டின் வின்பாஸ்ட் நிறுவனம் தூத்துக்குடியில் சுமார் 2 பில்லியன் டாலர் முதலீட்டில் அதாவது 16000 கோடி ரூபாய் முதலீட்டில் மெகா எலக்ட்ரிக் வாகன தொழிற்சாலையும், பேட்டரி தொழிற்சாலையும் அமைக்கும் பணியில் தீவிரமாக செயல்பட்டு வருகிறது.

இந்தியாவில் 2வது பெரிய சிமெண்ட் உற்பத்தி நிறுவனமாக இருக்கும் அதானி சிமெண்ட்-க்கு தென்னிந்தியாவில் தனது வர்த்தகத்தை பலப்படுத்த தூத்துக்குடியில் அமைந்துள்ள 1.5 மில்லியன் டன் திறன் கொண்ட சிமெண்ட் உற்பத்திக்கு முக்கியமான கிரைண்டிங் ஆலையை ரூ.414 கோடிக்கு மை ஹோம் குழுமத்திடம் இருந்து கையகப்படுத்தியுள்ளது அம்புஜா சிமெண்ட்ஸ்.

தூத்துக்குடியில் உலகத் தரம் வாய்ந்த பெட்ரோ கெமிக்கல் தொழிற்சாலையை அமைப்பதற்கான பணிகள் நடைப்பெற்று வருகிறது. 2020 ஆம் ஆண்டில், குவைத் நாட்டின் Al-Mutawa & Sons Co அமைப்பின் கிளை நிறுவனமான Southern Pearl Refinery and Petrochemicals (SPRPPL) மற்றும் இங்கிலாந்து Lamant நிறுவனத்துடன் உடன் கைகோர்த்துத் தூத்துக்குடியில் முதல் கட்டத்தில் சுத்திகரிப்பு நிலையத்தையும், இரண்டாம் கட்டத்தில் பெட்ரோ கெமிக்கல் ஆலையை நிறுவ திட்டமிட்டது. இதற்கான பணிகள் சமீபத்தில் துவக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+