இன்போசிஸ் நாராயண மூர்த்தி 3one4 Capital என்னும் வென்சர் கேப்பிடல் நிறுவனத்தின் தி ரெக்கார்ட் என்னும் பாட்காஸ்ட் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு பேசிய போது இந்தியாவின் இளைஞர்கள் வாரத்திற்கு 70 மணிநேரம் பணியாற்ற வேண்டும் என்று பேசியது பெரும் சர்ச்சையானது. இந்த தி ரெக்கார்ட் நிகழ்ச்சியை தொகுத்தது இன்போசிஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிதியியல் அதிகாரியான டிவி மோகன்தாஸ் பாய் என்பது குறிப்பிடத்தக்கது.
நாராயண மூர்த்தி-யின் கருத்துக்கு மக்கள் மத்தியில் கடுமையான விமர்சனங்கள் எழுந்த நிலையில் மோகன்தாஸ் பாஸ் நாராயண மூர்த்தியை காப்பாற்றும் முயற்சியாக அவரின் கருத்தை விளக்கி கூறியுள்ளார். இதற்காக தனி டேட்டா-வை திரட்டி இந்தியாவின் மாநில வரைப்படத்துடன் ஒப்பிட்டு பேசியுள்ளார்.

நாராயண மூர்த்தி இந்தியாவின் இளைஞர்கள் வாரத்திற்கு 70 மணிநேரம் பணியாற்ற வேண்டும் என்ற உள் கருத்தை நிருபிக்க மோகன்தாஸ் பாஸ் 2019 பைம்யூஸ் சர்வே தரவுகளை அடிப்படையாக எடுத்துக்கொண்டார். இதில் இந்தியாவில் 15 முதல் 59 வயது வரையில் இருக்கும் நகரத்து ஆண்களின் சராசரி வார பணிநேரம் 61.6 மணிநேரமாக உள்ளது.
நாராயண மூர்த்தி கூறும் வாரத்திற்கு 70 மணிநேர பணி நேரம் என்பது 30 வயதிற்கு கீழ் உள்ளவர்களுக்கானது, செழிப்பான வளர்ச்சிக்கு கடின உழைப்பு தேவை என்பதை இந்த டேட்டா காட்டுகிறது என டிவீட் செய்துள்ளார். இதன் மூலம் நாராயண மூர்த்தி அவர்களின் கருத்தை முழுமையாக ஏற்பதாக இன்போசிஸ் முன்னாள் ஊழியர் மோகன்தாஸ் பாய் அவருக்கு ஆதரவாக நிற்கிறார்.

நாராயண மூர்த்தி கருத்துக்கு மோகன்தாஸ் பாய் செய்த டிவிட்டர் பதிவுக்கு பாதுகாப்பு ஆய்வாளரான அபிஜித் ஐயர்-மித்ரா பதில் கொடுத்திருந்தார் இதில், இது வழக்கமான இந்திய ஸ்வெட்ஷாப் அணுகுமுறை என்று விமர்சனம் செய்தது மட்டும் அல்லாமல் இந்த மனபோக்கு இருப்பதால் தான் இன்ஃபோசிஸ் குறைந்த மதிப்புள்ள ப்ராடெக்ட்-களுக்கு புகழ்பெற்ற ஐடி கூலி ஊழியர்களை வழங்கும் நிறுவனமாக உள்ளது என்றும் கூறினார்.
அபிஜித் ஐயர்-மித்ரா பதிவுக்கு பதிலளித்த மோகன்தாஸ் பாய், "அபிஜித், தயவு செய்து மதிப்பு கருத்துக்களை வழங்குவதை நிறுத்துங்கள். உங்களுக்கு இன்ஃபோசிஸ் அல்லது அவர்கள் என்ன செய்கிறார்கள் என்று தெரியவில்லை. உலகளாவிய நிறுவனங்கள் அதிநவீன டெக் பணிகளை இந்தியாவில் செய்கிறது. எப்போது 20 பில்லியன் டாலர் வருவாய் தரும் நிறுவனத்தை நீங்கள் உருவாக்குகிறீர்களோ, அதுவரை வாயை திறக்காதீர்கள்." என்று காட்டமாக பதில் அளித்தார் மோகன்தாஸ் பாய்.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications