உலகிலேயே 2வது மிகப்பெரிய வையிட் கூட்ஸ் வர்த்தகச் சந்தை கொண்ட இந்தியாவில் டிவி, பிரிட்ஜ், ஏசி, வாசிங் மெஷின், மைக்ரோவேவ் ஓவன் ஆகிய பொருட்களின் விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இதனால் இந்தியாவில் அடுத்த சில மாதங்களுக்கு டிவி, பிரிட்ஜ், ஏசி, வாசிங் மெஷின், மைக்ரோவேவ் ஓவன் ஆகிய வையிட் கூட்ஸ் பொருட்களின் வர்த்தகம் பெரிய அளவில் குறையும் எனக் கணிப்புகள் வெளியாகி வரும் நிலையில், இந்த நிலைக்கு என்ன காரணம் தெரியுமா..?
டிவி, பிரிட்ஜ், ஏசி, வாசிங் மெஷின்
வையிட் கூட்ஸ் தயாரிப்பில் இன்புட் காஸ்ட் அதாவது உற்பத்தி பொருட்கள் மற்றும் அதைச் சார்ந்த செலவுகள் 15 முதல் 40 சதவீதம் வரையில் அதிகரித்துள்ள காரணத்தால் டிவி, பிரிட்ஜ், ஏசி, வாசிங் மெஷின், மைக்ரோவேவ் ஓவன் ஆகிய
பொருட்களின் ரீடைல் சந்தை விலை 20 சதவீதம் வரையில் உயரும் எனச் சந்தை ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
போக்குவரத்து மற்றும் உற்பத்தி பொருட்கள்
மேலும் தாமிரம், துத்தநாகம், அலுமினியம், எஃகு, பிளாஸ்டிக் மற்றும் போர்மிங் பொருட்களின் விலையும் இக்காலகட்டத்தில் அதிகரித்துள்ளது. இதேவேளையில் கடல் வழி போக்குவரத்துக் கட்டணம் சுமார் 40 முதல் 40 சதவீதம் வரையில் அதிகரித்துள்ளது.
இந்தப் போக்குவரத்து மற்றும் உற்பத்தி பொருட்களின் விலை மீது ஏற்பட்டுள்ள உயர்வு, உற்பத்தி பொருட்களின் மீது விழும் காரணத்தால் வையிட் கூட்ஸ் பொருட்களை விலை அதிகரித்துள்ளது.
டிவி விலையில் அதிரடி உயர்வு
இதுமட்டும் அல்லாமல் இந்தியாவில் தற்போது அதிகளவில் விற்பனை செய்யப்பட்டு வரும் எல்ஈடி மற்றும் ஸ்மார்ட்டிவி-களின் டிவி பேனல் விலை 30 முதல் 100 சதவீதம் அதிகரித்துள்ளது. இதற்கு முக்கியக் காரணம் டிவி பேனல்களைத் தயாரிக்கும் அளவுகள் குறைந்து தேவை அதிகமாகியுள்ளது.
இதன் காரணமாக உலகம் முழுவதிலும் தற்போது டிவி பேனல் பற்றாக்குறை ஏற்பட்டு விலை அதிகரித்துள்ளது.
இந்திய சந்தையில் பாதிப்பு
வையிட் கூட்ஸ் மீதான விலை ஏற்றம் இந்தியா போன்று கொரோனா தாக்கத்தில் இருந்து மீண்டு வரும் நாடுகளுக்குப் பெரிய வர்த்தகப் பாதிப்பை ஏற்படுத்தக் கூடிய ஒன்றாக மாறியுள்ளது. தீபாவளி பண்டிகை கால ஆர்டர்கள் மூலம் சந்தையில் வையிட் கூட்ஸ் விற்பனை அதிகரித்துள்ள நிலையில் இந்த நேரத்தில் பொருட்களின் விலையை அதிகரித்தால் கண்டிப்பாகப் பெரிய அளவிலான வர்த்தகப் பாதிப்பை ஏற்படுத்தும். இதனால் நிறுவனங்கள் விலை உயர்த்தும் முடிவைத் தள்ளிவைக்கலாம் எனச் சந்தை வல்லுனர்கள் பரிந்துரை செய்து வருகின்றனர்.
உற்பத்தி பொருட்களின் விலை
கடந்த 5 மாதத்தில் தாமிரம் மற்றும் துத்தநாகம் ஆகியவற்றின் விலை 15 முதல் 20 சதவீதம் வரையில் உயர்ந்துள்ளது. இதேபோல் அலுமினியம் 40-50% வரையிலும், பிளாஸ்டிக் 30-40% வரையிலும், பிரிட்ஜ் மற்றும் ப்ரீசர் ஆகியவற்றில் பயன்படுத்தும் போர்மிங் பொருட்களின் விலை 200% வரையில் உயர்ந்துள்ளது.
விலை உயர்வு கணிப்புகள்
இதனால் தற்போது உற்பத்தி சந்தை விலை அடிப்படையில் வாசிங் மெஷின் மற்றும் ஏசி ஆகியவற்றின் விலை 8 முதல் 10 சதவீதம் வரையிலும், பிரிட்ஜ் மற்றும் ப்ரீசர் ஆகியவற்றின் விலை 12 முதல் 15 சதவீதம் வரையிலும், டிவி விலை வடிவத்திற்கு ஏற்றார் போல் 7 முதல் 20 சதவீதம் வரையில் உயரும் எனக் கணிக்கப்பட்டு உள்ளது.


Click it and Unblock the Notifications