ஆட்டோ ஓட்டுநர் உள்பட சாமானியர்களுக்கு எம்எல்ஏ பதவி தந்த விஜய்!! முதல் 10இல் 9 இடங்கள் தவெகவுக்கு தான்!!

2026 சட்டமன்ற தேர்தல் முடிவுகள் பல்வேறு ஆச்சரியங்களை தந்திருக்கின்றன. கட்சி தொடங்கி இரண்டரை ஆண்டுகள் மட்டுமே ஆன தமிழக வெற்றி கழகத்திற்கு மக்கள் திரளாக வாக்களித்து வெற்றி பெற செய்திருக்கிறார்கள்.

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றதன் மூலம் தனிப்பெரும் கட்சியாக விஜயின் தமிழக வெற்றி கழகம் கட்சி உருவெடுத்து இருக்கிறது. கூடிய விரைவில் கூட்டணியோடு விஜய் ஆட்சி அமைத்து முதலமைச்சராக பதவி ஏற்க இருக்கிறார். இதற்கிடையே தேர்தல் முடிவுகள் தொடர்பான புள்ளி விவரங்கள் பல்வேறு சுவாரசியமான தகவல்களை தந்திருக்கின்றன.

ஆட்டோ ஓட்டுநர் உள்பட சாமானியர்களுக்கு எம்எல்ஏ பதவி தந்த விஜய்: முதல் 10இல் 9 இடங்கள் தவெகவுக்கு தான்

தமிழக சட்டமன்ற தேர்தலில் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற முதல் 10 வேட்பாளர்களில் 9 பேர் தவெகவை சேர்ந்தவர்கள் என்பது தான் சுவாரஸ்யம். தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் அதிகபட்ச வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற வேட்பாளராக எடப்பாடி பழனிச்சாமி இருக்கிறார். எடப்பாடி தொகுதியில் இவர் 98,110 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றியை பதிவு செய்தார். அடுத்ததாக சோழிங்கநல்லூரில் தவெக சார்பில் போட்டியிட்ட சரவணன் 96,780 வாக்குகள் பெற்று வெற்றியை பதிவு செய்திருக்கிறார். மாதவரம் தொகுதி வேட்பாளர் விஜய பிரபு 94 ,985 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றியை பதிவு செய்திருக்கிறார்.

பூந்தமல்லி தவெக வேட்பாளர் பிரகாசம் , சேலம் மேற்கு தொகுதி லட்சுமணன், ஆவடி தொகுதி ரமேஷ் குமார் ஆகிய மூவரும் 70,000க்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றியை பதிவு செய்திருக்கின்றனர். ஸ்ரீபெரும்புதூர் தவெக வேட்பாளர் தென்னரசு, பொன்னேரி தொகுதி வேட்பாளர் எம் எஸ் ரவி ,அம்பத்தூர் தொகுதி வேட்பாளர் பாலமுருகன், மதுரவாயல் தொகுதி வேட்பாளர் ரேவந்த் சரண் ,பூந்தமல்லி தொகுதி வேட்பாளர் பிரகாசம் ஆகியோர் 55 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றியை பதிவு செய்திருக்கிறார்கள்.

Also Read

அந்த வகையில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற முதல் 10 வேட்பாளர்களில் 9 பேர் தமிழக வெற்றிக்கழக கட்சியை சேர்ந்த வேட்பாளர்களாகவே இருக்கின்றனர்.அதே வேளையில் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற பத்து வேட்பாளர்களை பார்க்கும்போது அந்த பட்டியலில் முதலிடத்தில் இருப்பது திருப்பத்தூர் தவெக வேட்பாளர் சீனிவா சேதுபதி ஒரு வாக்கு வித்தியாசத்தில் அமைச்சர் பெரிய கருப்பனை தோல்வி அடையச் செய்திருக்கிறார்.

தமிழக வெற்றி கழகத்தின் தேர்தல் வெற்றி சாமானிய மக்களின் வெற்றியாக பார்க்கப்படுகிறது. ஏனெனில் இக்கட்சியில் தேர்தலில் நின்ற பெரும்பாலானவர்கள் புது முகங்கள் அதுவும் சாமானியர்கள். தன்னுடைய ஓட்டுநரின் மகன், ஆட்டோ ஓட்டுநர் என சாதாரண மக்களுக்கு வாய்ப்பு கொடுத்து எம்.எல்.ஏ பதவியை பெற்று தந்துள்ளார் விஜய்.

Recommended For You

தமிழக வெற்றி கழகத்தில் வென்ற வேட்பாளர்களில் 35 வயதிற்குக் குறைவான 22-க்கும் மேற்பட்ட இளம் வேட்பாளர்கள் உள்ளனர். மேலும் 26 தலித் வேட்பாளர்களும், 12 பெண் வேட்பாளர்களும் வெற்றி பெற்றிருப்பது முக்கியத்துவம் பெறுகிறது. எந்த தொகுதியிலும் தவெக வேட்பாளர்கள் டெபாசிட் இழக்கவில்லை என்பதும் முக்கியம்.

கர்ப்பிணிப் பெண் , ஆட்டோ டிரைவர், டிரைவரின் மகன், மாற்றுத்திறனாளி உள்ளிட்ட பல்வேறு சமூகத்தைச் சேர்ந்த வேட்பாளர்கள் தமிழக வெற்றிக்கழகத்தின் சார்பில் போட்டியிட்டு பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றுள்ளனர். அந்த வகையில் தமிழக சட்டமன்றம் இளைஞர் படையுடன் இயங்க போகிறது. குறிப்பாக சாமானிய மக்களில் இருந்து வந்த எம்.எல்.ஏக்களுடன் செயல்பட போகிறது என்பதால் எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+