விஜய்யின் அரசியல் வருகையால் அவர் இழக்கப்போவது என்ன..? சினிமா வாழ்க்கை என்னவாகும்..?

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தனது அரசியல் வாழ்க்கையை தற்போது முழுவீச்சில் தொடங்கியுள்ளார். 2026ஆம் ஆண்டிற்கான சட்டசபை தேர்தலுக்கான அவரது வியூகத்தை இப்போதிருந்தே ஆரம்பித்துள்ளார். கடந்த செப்டம்பர் 27 ஆம் தேதி கட்சியின் முதல் மாநாட்டை தொடங்கினார். அந்த மாநாட்டில் அவரது ரசிகர்கள் உட்பட, கட்சி தொண்டர்கள் கலந்து கொண்டனர். அந்த மாநாடு பல்வேறு விமர்சனங்களையும், வரவேற்பையும் பெற்றது.

தமிழ்திரையுலகில், நடிகராக விஜய் இன் சிறந்த நடிப்பினால் ஏகப்பட்ட ரசிகர் பட்டாளம் அவருக்கு உள்ளது. ஆனால், இப்போது அவர் அரசியல் தலைவராக மாறியுள்ளார். அவருடைய ரசிகர் பட்டாளம் அவரது அரசியல் பயணத்திற்கு கைகொடுத்து விஜய்-யை ஆட்சி கட்டிலில் அமரவைப்பார்களா என்பதுதான் இப்போதைய கேள்வியாக உள்ளது.

விஜய்யின் அரசியல் வருகையால் அவர் இழக்கப்போவது என்ன..? சினிமா வாழ்க்கை என்னவாகும்..?

இதற்கிடையில், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரையில் அதிக ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ள விஜய் தனது அரசியல் வாழ்க்கையை தொடங்குவதால் அவர் இழக்கப்போவது என்ன என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.

விஜய் தற்போது திரைப்படங்கள் மற்றும் பிராண்ட் ஒப்பந்தங்கள் மூலம் ஆண்டு வருமானம் ரூ.100-120 கோடிளை சம்பாதித்து வருகிறார். கடைசியாக கடைசி மாதத்தில் வெளியான கோட் படத்திற்கு மட்டும் அவர் ரூ.100 கோடி வசூல் செய்துள்ளார். இது நடிகர் ரஜினியின் தர்பார் படத்தின் ரூ.90 கோடிகளை விட அதிகமாகும்.

ரசிகர்கள், தமிழ் சினிமா மட்டுமின்றி பிற மொழி ஹீரோக்கள், ஹீரோயின்களுக்கும் பிடித்த தமிழ் ஹீரோவாக விஜய் தான் இருக்கிறார். இப்படி அனைவரின் மனம் கவர்ந்த விஜய் படங்களில் பிஸியாக நடித்து வந்த நிலையில், முழுவீச்சில் அரசியலில் குதித்துள்ளார். இனி சினிமாவில் நடிப்பது கஷ்டம் தான்.

பீஸ்ட் படத்தில் திரைக்கதை சொதப்பலாக இருந்ததாக கூறினாலும் விஜய் என்ற தனி மனிதனுக்காகவே அந்த படம் தொடர்ந்து ஓடி, 200 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளதாக சொல்கிறார்கள். தற்போது விஜய் ஒரு படத்திற்கு 80 முதல் 90 கோடிகளை சம்பளமாக பெற்று வருகிறார்.

இன்று 100 கோடிக்கும் அதிகமாக சம்பளம் வாங்கும் விஜய், முதன் முதலில் அறிமகமான படம் 1984ல் ரிலீசான வெற்றி என்ற படம். பி.எஸ்.வீரப்பா இந்த படத்தை தயாரித்திருந்தார். அவரும் இந்த படத்தில் நடித்திருந்தார். தனது முதல் படமான வெற்றி படத்திற்காக விஜய்க்கு கொடுக்கப்பட்ட சம்பளம் 500 ரூபாய். அதற்கு பிறகு ரஜினியின் நான் சிகப்பு மனிதன் உள்ளிட்ட சில படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்த விஜய் 1992 ம் ஆண்டு தனது 18 வது வயதில் நாளைய தீர்ப்பு படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார்.

ஃபோர்ப்ஸ் அறிக்கையின்படி, இந்தியாவின் பிரபலங்கள் 100 பட்டியலில் விஜய் இடம்பெற்றுள்ளார். அவரது குறிப்பிடத்தக்க ரசிகர்களின் உலகளாவிய பின்தொடர்தல் அவரை இந்தியாவின் மிகவும் பணக்கார நடிகர்களில் ஒருவராக ஆக்கியது. அதேபோல், கோலிவுட் சினிமாவில் அதிக லாபம் ஈட்டுபவராகவும் உள்ளார். அதேபோல், தொழில்துறையில் அதிக சம்பளம் வாங்கும் நடிகர்களில் ஒருவராகவும் இருக்கிறார்.

அவரது மாத வருமானம் ரூ.3 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது. பொதுவாக ரூ.150 கோடி ஒரு படத்திற்கு வாங்குகிறார். அவர் லியோ படத்திற்கு மட்டும் ரூ.200 கோடி வாங்கியுள்ளார்.

தற்போது அரசியலில் முழு வீச்சில் இறங்கியுள்ளதால் விஜய் தனது மாத வருமானம், பிளாக்பஸ்டர் படங்கள், பெரிய ரசிகர் பட்டாளம் மற்றும் அதிக சம்பளம் வாங்கும் நடிகர் என்ற அனைத்தையும் இழக்கப்போகிறார் என்பதுதான் உண்மை.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+