திமுக செய்யாததை தவெக கண்டிப்பா செய்யும்.. கீர்த்தனா சொன்ன 100% சக்சஸ் ரேட்!

தென்னிந்திய மாநிலங்கள் மத்தியில் முதலீட்டை ஈர்க்கும் போட்டி மிகப்பெரிய அளவில் இருக்கும் வேளையில், தமிழ்நாட்டின் தொழிற்துறை அமைச்சர் முக்கியமான விஷயத்தை சமீபத்தில் தெரிவித்துள்ளார்.

முதல்வர் விஜய் தலைமையிலான தமிழ்நாடு அரசு செய்யும் அனைத்து புரிந்துணர்வு ஒப்பந்தமும் முதலீடாக மாறுவதை உறுதி செய்யும் என அமைச்சர் கீர்த்தனா கோயம்புத்தூரில் நடந்த சிஐஐ கூட்டத்தில் தெரிவித்துள்ளார்.

திமுக செய்யாததை தவெக கண்டிப்பா செய்யும்.. கீர்த்தனா சொன்ன 100% சக்சஸ் ரேட்!

மேலும் அவர், முந்தைய திமுக அரசு செய்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் சுமார் 25 சதவீத ஒப்பந்தங்கள் உண்மையான முதலீடாக மாறவில்லை, நாங்கள் வாய்ப்பு கிடைக்கும் அனைத்து இடத்திலும் ஒப்பந்தம் செய்யமாட்டோம், இதேபோல் ஒவ்வொரு ஒப்பந்தமும் முதலீடாக மாறுவதை எங்களுடைய அரசு உறுதி செய்யும் என தெரிவித்தார்.

தவெக அரசு ஒவ்வொரு மாவட்டத்திலும் இருக்கும் பல்வேறு துறை சார்ந்த வாய்ப்புகளையும் முழுமையாக ஆய்வு செய்ய உள்ளது, இதுமட்டும் அல்லாமல் கல்லூரிகளுடன் இணைந்து மாணவர்களுக்கு அத்துறை சார்ந்த திறன்களை பயிற்சி அளிக்க இணைய உள்ளோம், இதன் அடிப்படையில் முதலீடுகளை ஈர்க்க திட்டமிட்டு உள்ளோம் என தெரிவித்தார் அமைச்சர் கீர்த்தனா தெரிவித்தார்.

இதன் மூலம் ஒவ்வொரு துறைக்கும் தேவையான திறன்வாய்ந்த ஊழியர்களை முறையாக உருவாக்கி புதியாக வரும் நிறுவனங்களுக்கு அளிக்க முடியும் என தெரிவித்தார். விஜய் தலைமையிலான அரசு உயர் தர தொழில்நுட்ப துறையில் அதிகம் கவனம் செலுத்துகிறது, இதில் முக்கியமாக எலக்ட்ரிக் மொபிலிட்டி, கிளீன் எனர்ஜி, செயற்கை நுண்ணறிவு மற்றும் மேம்பட்ட உற்பத்தி துறை சார்ந்த பிரிவுகளில் அதிகளவில் முதலீடு செய்ய திட்டமிட்டு உள்ளதாக அமைச்சர் கீர்த்தனா தெரிவித்தார்.

முக.ஸ்டாலின் தலைமையிலான அரசு கடந்த ஆட்சி காலத்தில் சுமார் 1179 ஒப்பந்தங்கள் செய்துள்ளது, இதில் 73.53 சதவீத ஒப்பந்தங்கள் உண்மையான முதலீடாக மாறியுள்ளது, இந்திய அளவில் ஒப்பிடும் போது இது அதிகப்படியான கன்வெர்சன் ரேட் ஆக உள்ளது.

இந்த அளவீட்டை விஜய் தலைமையிலான அரசு தாண்டுமா என்பது முக்கியமான கேள்வியாக உள்ளது. இந்தியாவில் பல மாநிலங்கள் பல லட்சம் கோடி முதலீடுகள் பெறுவதாக புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யும், இது செய்திகளில் மிகப்பெரியாக இடம்பெறும், ஆனால் இது முதலீடாக மாறும் அளவீடு என்பது 25 சதவீதமாக மட்டுமே இருக்கும், ஆயினும் தமிழ்நாடு 73 சதவீதம் வெற்றி அளவை கொண்டு இருக்கம் போது கீர்த்தானவின் 100 சதவீத சக்சஸ் ரேட் அளவீடு என்பது பெரும் மாபெரும் இலக்கு. இதை எப்படி சாத்தியப்படுத்த முடியும் என்பதை தாண்டி, புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்வது குறைக்கப்படுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+