TVK தலைவர் விஜய்-யின் சொத்து விவரங்கள்.. இதெல்லாம் நோட் பண்ணுங்கப்பா.. மொத்தம் ரூ.625 கோடி!!

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வேட்பு மனுத் தாக்கல் மார்ச் 30 முதல் தொடங்கியுள்ள நிலையில், சென்னை பெரம்பூர் தொகுதி அரசியல் கவனத்தின் மையமாக மாறியுள்ளது. இந்த தொகுதியில் போட்டியிடும் தவெக தலைவர் விஜய் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்துள்ளார்.

அவரது வேட்புமனுவுடன் சேர்த்து தாக்கல் செய்யப்பட்ட பிரமாண பத்திரத்தில், அவரது சொத்து விவரங்கள், நிதிநிலை மற்றும் தனிப்பட்ட தகவல்கள் விரிவாக வெளியிடப்பட்டுள்ளன. இது அரசியல் மட்டுமல்லாமல், பொதுமக்களிடையிலும் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.

TVK தலைவர் விஜய்-யின் சொத்து விவரங்கள்.. இதெல்லாம் நோட் பண்ணுங்கப்பா.. மொத்தம் ரூ.625 கோடி!!

மொத்த சொத்து மதிப்பு
விஜய் தாக்கல் செய்துள்ள தகவல்களின் படி, அவரது அசையும் சொத்து மதிப்பு சுமார் ரூ.404 கோடியைத் தாண்டியுள்ளன. அசையா சொத்துக்கள் ரூ.220.15 கோடி வரை மதிப்பிடப்பட்டுள்ளன.

மேலும், பூர்வீகச் சொத்துக்கள் ரூ.21.83 கோடி மதிப்பில் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அவரது மனைவி பெயரில் ரூ.15 கோடிக்கும் அதிகமான அசையும் சொத்துக்களும், அசையா சொத்துக்களாக 17 கோடி ரூபாய் மதிப்பில் இருப்பதும் இந்த ஆவணங்களில் தெரிவித்துள்ளார் விஜய்.

அசையா சொத்துக்கள்
கொடைக்கானல் வில்பட்டி கிராமத்தில் 2 விவசாய இடங்களை தலா 10 லட்சம் மதிப்பில் வைத்துள்ளார், இது 1997ல் வாங்கியது. விவசாயம் அல்லாத நிலங்களை 3 இடத்தில் வைத்துள்ளார் போரூர், சாலிகிராம், நீலாங்கரை இந்த 3 இடத்தில் சுமார் 46,000 சதுரடி நிலத்தை வைத்துள்ளார் விஜய். இந்த நிலத்தின் இன்றைய மதிப்பு 22 கோடி ரூபாய்.

வர்த்தக கட்டிங்கள் பட்டியலில் பாடிகிராமம், டி நகர், சோளிங்கநல்லூர், கொப்பூர் ஆகிய பகுதியில் சுமார் 82 கோடி ரூபாய் மதிப்பிலான நிலங்களை விஜை வைத்துள்ளார்.குடியிருப்பு பகுதிகளாக சுமார் 10 இடங்களை 115.13 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை வைத்துள்ளார் விஜய்.

விஜய் மனைவி பெயரில் 2.5 கோடி ரூபாய் மதிப்பிலான வீடும், வணிக கட்டமாக 2.5 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை வைத்துள்ளார்.

வங்கி சேமிப்புகள்
விஜய்யின் சொத்து விவரங்களில் குறிப்பிடத்தக்க அம்சம் அவரது வங்கி சேமிப்புகள் ஆகும். பல்வேறு வங்கிகளில் சேர்த்து அவர் வைத்திருக்கும் சேமிப்பு தொகை மட்டும் ரூ.370 கோடியை எட்டியுள்ளது.

சாலிகிராமம் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் ரூ.213.36 கோடி சேமிப்பு கணக்கில் உள்ளது. அதேபோல், இந்திராநகர் ஆக்சிஸ் வங்கி கிளையில் ரூ.5.79 கோடி நிலையான வைப்பு மற்றும் மேலும் ரூ.49 கோடி நிலையான வைப்பு உள்ளது. கோடம்பாக்கம் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் ரூ.25 கோடி சேமிப்பு உள்ளது.

இதற்கு கூடுதலாக, பெசன்ட் நகர் ஹெச்டிஎப்சி வங்கியில் ரூ.20 கோடி மற்றும் சாஸ்திரி நகர் ஸ்டேட் வங்கியில் ரூ.15 கோடி நிலையான வைப்புகள் உள்ளன.

ரொக்கம் மற்றும் குடும்ப சேமிப்புகள்
விஜய்யின் கையில் ரூ.2 லட்சம் ரொக்கம் இருப்பதாகவும், அவரது வங்கி கணக்குகளில் ரூ.220 கோடி இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அவரது மனைவி சங்கீதாவின் வங்கி கணக்கில் ரூ.10.43 கோடி இருப்பதாகவும், குழந்தைகளின் வங்கி கணக்குகளில் சுமார் ரூ.4 லட்சம் இருப்பதாகவும் வேட்புமனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தங்கம், வெள்ளி மற்றும் வைரம்
விஜய்யிடம் ரூ.1.20 கோடி மதிப்பில் 883 கிராம் தங்கம் உள்ளது. அவரது மனைவி பெயரில் ரூ.4.07 கோடி மதிப்பில் 3,132 கிராம் தங்கமும், ரூ.1 கோடி மதிப்பில் 134.91 காரட் வைரமும் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

விஜய்-க்கு சொந்தமாக 15 லட்சம் மதிப்புள்ள வெள்ளி பொருட்களும். அவரது மனைவியிடம் 2 கிலோ வெள்ளி இருப்பு

பங்குகள்
ஜெயா நகர் பிராபர்டி பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தில் 19.69 லட்சம் ரூபாய் மதிப்பிலான பங்குகளும், இந்தியன் ஓவர்சீஸ் வங்கி பங்குகளில் 9600 ரூபாய்க்கும், சன் பேப்பர்மில் லிமிடெட் 25000 ரூபாய்க்கும் பங்குகளை வைத்துள்ளார் விஜய்.

கடன் நிலை
இந்த வேட்புமனுவில் குறிப்பிடப்பட்ட முக்கியமான விஷயம், விஜய்க்கு எந்தவித கடனும் இல்லை என்பது. அதே நேரத்தில், அவர் பல்வேறு நபர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு சேர்த்து சுமார் ரூ.76 கோடி கடன் வழங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில் முக்கியமாக விஜய் தனது தாய் ஷோபனாவுக்கு ரூ. 87 லட்சமும் தந்தை சந்திரசேகரக்கு ரூ.3 கோடியும், தவெக பொதுச் செயலர் ஆனந்திற்கு ரூ. 3 கோடியும் விஜய் கடன் அளித்துள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கார்கள்
விஜய் தன்னிடம் பிஎம்டபிள்யூ 530 உள்பட சுமார் ரூ. 6 கோடியில் 5 ஆடம்பர கார்கள் வைத்துள்ளதாக வேட்புமனுவில் குறிப்பிட்டுள்ளார். விஜய்யின் பெயரில் உள்ள வாகனங்களில் அதிகபட்சமாக ரூ. 3 கோடி மதிப்புள்ள டொயோட்டா லெக்சஸ் கார் உள்ளது.

குறைந்தபட்ச மதிப்பாக ரூ.67,000 மதிப்புள்ள டிவிஎஸ் எக்ஸல் சூப்பர் வாகனம் உள்தாக தெரிவித்துள்ளார்.

வழக்குகள்
விஜய் தனது பிரமாண பத்திரத்தில் தன்னிடம் எந்த குற்றவியல் வழக்குகளும் இல்லை, தண்டனை பெற்ற வழக்குகள் ஏதும் இல்லை என்று தெரிவித்துள்ளார்.

மனைவி பெயரில் சொத்துகள்
விஜய்யின் மனைவி பெயரில் ரூ.15.51 கோடி மதிப்பில் அசையும் சொத்துகளும், ரூ.2.53 கோடி மதிப்பில் அசையா சொத்துகளும் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கவனிக்கத்தக்க விஷயம் என்னவென்றால், அவரது மனைவி பெயரில் எந்த காரும் இல்லை எனவும் இந்த ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+