TVS, Ather, Ola கொடுத்த அதிர்ச்சி..! ஒரே நாளில் ரூ.17000 உயர்ந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டர் விலை..!

இந்திய ஆட்டோமொபைல் துறையின் எதிர்காலம் எலக்ட்ரிக் வாகன துறையில் தான் என்பது 98 சதவீதம் உறுதியான நிலையில், இதில் முதல் புரட்சி இரு சக்கர வாகனங்களில் 5 வருடத்திற்கு முன்பு துவங்கியது. மக்கள் மத்தியில் எலக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிக்கவும், உற்பத்தியை வேகப்படுத்தவும் மத்திய அரசு கொண்டு வந்த பலே திட்டம் தான் மானியம்.

ஜூன் 1 ஆம் தேதி அல்லது அதற்குப் பிறகு பதிவுசெய்யப்படும் எலக்ட்ரிக் இரு சக்கர வாகனங்களுக்குப் FAME-II திட்டத்தின் கீழ் வழங்கப்படும் மானியத்தை மத்திய அரசு தற்போதுள்ள 40 சதவீதத்தில் இருந்து 15 சதவீதமாக குறைக்கப்பட உள்ளதாக அறிவித்தது. இந்த விதி ஜூன் 1 ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வந்த நிலையில், அனைத்து முன்னணி இரு சக்கர வாகன தயாரிப்பு நிறுவனங்களும் அதன் விலையை பெரிய அளவில் உயர்த்தியுள்ளது.

TVS, Ather, Ola கொடுத்த அதிர்ச்சி..! எலக்ட்ரிக் ஸ்கூட்டர் வாங்கும் ஆசையே போச்சு.. மக்கள் புலம்பல்..!

இதன் மூலம் இந்தியாவின் மிகப்பெரிய இரு சக்கர வாகன தயாரிப்பு நிறுவனமான டிவிஎஸ் மோட்டார் தனது முக்கிய எலக்ட்ரிக் வாகனமான iQube விலையை 17000 முதல் 22000 ரூபாய் வரையில் மாடலுக்கு ஏற்றார்போல் உயர்த்தியுள்ளது. இந்த விலையை உடனே மக்களுக்கு அளிக்க கூடாது என்பதற்காக மே 20 வரையில் புக் செய்த அனைவருக்கும் loyalty benefit programme கீழ் பழைய விலையின் படியே வாகனங்களை டெலிவரி செய்ய உள்ளதாக டிவிஎஸ் தலைவர், CEO கே.என்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

இதேபோல் இரு சக்கர எலக்ட்ரிக் வாகன தயாரிப்பில் பல முன்னேற்றங்களையும், பல புதுமைகளை ஆரம்பக்கட்டத்திலேயே கொண்டு வந்து இந்திய இரு சக்கர வாகன பிரிவில் புரட்சி செய்த Ather நிறுவனத்தின் முக்கிய தயாரிப்பான Ather 450x விலை கிட்டதட்ட 8000 ரூபாய் அதிகரித்து 1,65,435 ரூபாய் விலைக்கு பெங்களூரில் விற்பனை செய்யப்படுகிறது. Fame II திட்டத்தின் கீழ் மானியம் குறைக்கப்பட்ட நிலையில் சுமார் 32000 ரூபாய் அளவுகான மானியம் குறைந்துள்ளது என Ather எனர்ஜி நிறுவனத்தின் தலைமை வர்த்தக அதிகாரியான ரவ்நீத் தெரிவித்துள்ளார்.

இதோடு இந்தியாவில் இரு சக்கர எலக்ட்ரிக் வாகன பிரிவில் வேகமாக வளர்ந்து வரும் ஓலா எஸ்1 ப்ரோ 1,39,999 ரூபாய்க்கும், எஸ்1 ஸ்கூட்டர் 1,29,999 ரூபாய்க்கும், எஸ்1 ஏர் ஸ்கூட்டர் 1,09,999 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. மத்திய அரசின் அறிவிப்புக்கு பின்பு சுமார் 15000 ரூபாய் சராசரியாக அதிகரித்துள்ளது.

இந்த நிலையில் ஹீரோ எலக்ட்ரிக் தனது வாகனங்களின் விலையை உயர்த்த விருப்பம் இல்லை என்று தெரிவித்துள்ளது. இதனால் ஹீரோ எலக்ட்ரிக் வாகனங்கள் பழைய விலைக்கே விற்பனை செய்யப்படுகிறது, இது எலக்ட்ரிக் வாகன சந்தையில் கட்டாயம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+