TVS: ஓசூரில் சுட சுட தயாராகும் CE02.. Sci-Fi படத்தில் வரும் BMW பைக்.. வாவ்..!!

தமிழ்நாட்டில் இருந்துக்கொண்டு ஒட்டுமொத்த இந்தியாவிலும் இரு சக்கர வாகன தயாரிப்பிலும், விற்பனையிலும் அசத்தி வரும் நிறுவனமான டிவிஎஸ் மோட்டார் தனது ஓசூர் தொழிற்சாலையில் BMW இன் எலக்ட்ரிக் இருசக்கர வாகனமான CE02 தயாரிப்பை தொடங்கியுள்ளது.

டிவிஎஸ் நிறுவனம் தனது ஓசூர் தொழிற்சாலையை BMW CE02 எலக்ட்ரிக் இருசக்கர வாகனத்திற்கான உலகளாவிய உற்பத்தி தளமாக இருக்கும் என்று தெரிவித்துள்ளது. அதாவது உலக நாடுகளில் விற்கப்படும் BMW CE02 எலக்ட்ரிக் இருசக்கர வாகனங்கள் அனைத்தும் ஓசூர் தொழிற்சாலையில் தயாரிக்கப்பட உள்ளது. CE02 வாகனத்தின் ப்ரோடோடைப் மாடலை BMW Motorrad முனிச் நகரத்தில் நடந்த ஆட்டோ ஷோ-வில் முதன்முதலில் அறிமுகம் செய்தது.

TVS: ஓசூரில் சுட சுட தயாராகும் CE02.. Sci-Fi படத்தில் வரும் BMW பைக்.. வாவ்..!!

CE02 வாகனத்தை பார்க்க ஏதோ ஒரு sci-fi திரைப்படத்தில் வருவது போன்று இருந்தாலும், இது மக்களின் பயன்பாட்டுக்கு வரும் போது பல வடிவமைப்பு மாற்றங்கள் உடன் தான் வரும். BMW நிறுவனத்தின் தகவல் படி இந்த CE02 வாகனம் சுமார் 14 ஹெச்பி பவர் மற்றும் 55 மைல் ரேஞ்ச் கொண்டது, அதாவது சுமார் 88 கிலோமீட்டர் பயனம் செய்ய கூடியது. மேலும் இந்த ஸ்கூட்டர் அதிகபட்சமாக 88 kmph வேகத்தில் இயங்கும்.

டிவிஎஸ் நிறுவனம் இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் தனது கிரீன் போர்ட்ஃபோலியோவை அதிகரிக்க அடுத்த 4-5 ஆண்டுகளில் ரூ.3,900 கோடி முதலீடு செய்வதாக அறிவித்தது. டிவிஎஸ் நிறுவனம் சமீபத்தில் டிவிஎஸ் எக்ஸ் என்ற பிரிமியம் எலக்ட்ரிக் பைக்கை ரூ.2.5 லட்சத்தில் அறிமுகப்படுத்தியது குறிப்பிடத்தக்கது. மேலும் TVS iQube Electric இந்தியாவில் சுமார் 10,000 மாத விற்பனையுடன் இரண்டாவது அதிக விற்பனையாகும் எலக்ட்ரிக் ஸ்கூட்டராக உள்ளது.

TVS: ஓசூரில் சுட சுட தயாராகும் CE02.. Sci-Fi படத்தில் வரும் BMW பைக்.. வாவ்..!!

பிஎம்டபிள்யூ உடனான TVS நிறுவனத்தின் கூட்டணி இரு சக்கர வாகன உற்பத்தியில் 10 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. 2013 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் TVS - BMW உடன் இருசக்கர வாகன உற்பத்திக்காக கூட்டணி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.

இந்த நிலையில் டிவிஎஸ் நிறுவனத்தின் ஓசூர் தொழிற்சாலையில் ஏற்கனவே பிஎம்டபிள்யூ ஜி310ஆர் மற்றும் 310ஜிஎஸ் ஆகிய வாகனங்கள் தயாரிக்கப்பட்டு வருகிறது.

BMW Motorrad என்பது ஜெர்மனி நாட்டின் ஆடம்பர ஆட்டோமொபைல் நிறுவனமான BMW-ன் இரு சக்கர வாகனப் பிரிவு. இந்த நிறுவனம் தான் டிவிஎஸ் உடன் 2013 ஆம் ஆண்டில் ஒப்பந்தம் செய்தது. BMW அதன் எலக்ட்ரிக் வாகன விற்பனையில் பெரிய வளர்ச்சி இலக்கை கொண்டுள்ளது.

BMW Motorrad இன் தலைவரான Markus Schramm கூறுகையில், இந்த ஆண்டு தனது நிறுவனத்தின் உலகளாவிய விற்பனையில் எலக்ட்ரிக் வாகனங்களின் பங்கை இரட்டிப்பாக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார். கடந்த ஆண்டு, BMW Motorrad இன் மொத்த விற்பனையான 200,000 வாகனங்களில் 2.5% எலக்ட்ரிக் வாகனங்கள் தான். இந்த ஆண்டு விற்பனையில் 5% பெற இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+