இந்தியாவின் முன்னணி இருசக்கர வாகன தயாரிப்பு மற்றும் விற்பனை நிறுவனமான டிவிஎஸ், கொரோனா தாக்கத்தால் உற்பத்தியும், விற்பனையும் முடங்கியிருக்கும் இந்த வேளையில் தனது எதிர்கால வர்த்தக விரிவாக்கத்திற்கும் புதிய சந்தை வர்த்தகத்திற்கும் முக்கியமான ஒரு முடிவை எடுத்து அசத்தியுள்ளது.
நாட்டின் அனைத்து ஆட்டோமொபைல் நிறுவனங்களும் வர்த்தகம் இல்லாமல் தவித்து வரும் நிலையில் டிவிஎஸ் பிரிட்டன் நாட்டின் வேகமாக வளர்ந்து வரும் Norton நிறுவனத்தை முழுமையாக வாங்கியுள்ளது.
Norton
ஸ்போர்ட்ஸ் மற்றும் ஆடம்பர இருசக்கர வாகன பிரிவில் மிகவும் பிரபலமான பிரிட்டன் நிறுவனம் தான் இந்த நார்டன் மோட்டர்சைக்கிள்ஸ். இந்நிறுவனம் 1898ஆம் ஆண்டு ஜேம்ஸ் லேன்ஸக்டவுன் நார்டன் என்பவரால் உருவாக்கப்பட்டது. தற்போது இந்நிறுவனம் தனது பழைய மாடல் பைக்குகளை மறுவடிவமைப்புச் செய்து சந்தையில் அறிமுகம் செய்து வருகிறது.
இந்நிறுவனம் தற்போது மக்கள் மத்தியிலும் அதிகளவிலான வரவேற்பை பெற்றுள்ள நிலையின் டிவிஎஸ் இந்நிறுவனத்தை வாங்க முடிவு செய்துள்ளது.
16 மில்லியன் பிரிட்டன் பவுண்டு
டிவிஎஸ் நிறுவனத்தின் வெளிநாட்டுக் கிளை நிறுவனம், பிரிட்டன் நாட்டின் நார்டன் மோட்டர்சைக்கிள்ஸ் லிமிடெட் நிறுவனத்தைச் சுமார் 16 மில்லியன் பிரிட்டன் பவுண்டு கொடுத்து முழுமையாக வாங்கியுள்ளது. இந்தத் தொகையை மொத்தமாகப் பங்குகளாகக் கொடுக்காமல் பணமாகக் கொடுத்து வாங்கியுள்ளது.
தற்போது நார்டன் மோட்டர்சைக்கிள்ஸ் லிமிடெட் நிறுவனம் எலக்ட்ரிக் பைக்குகளையும் தயாரித்து அறிமுகம் செய்து வருவது குறிப்பிடத்தக்கது.
உலகளாவிய விரிவாக்கம்
நார்டன் மோட்டர்சைக்கிள்ஸ் பிரிட்டன் நாட்டு நிறுவனமாக இருந்தாலும் இந்நிறுவனம் உலகளவில் மிகவும் பிரபலம். மேலும் இந்நிறுவனத்தைத் தற்போது பிரிட்டனை தாண்டி உலக நாடுகளில் வர்த்தகம் செய்யும் அளவிற்குத் திறன் கொண்டு உள்ளது. மேலும் நார்டன் நிறுவனத்தை உலகம் போற்றும் இருசக்கர வாகன நிறுவனமாக வளர்க்க அனைத்து விதமான முயற்சிகளையும், முதலீடுகளையும்
டிவிஎஸ் நிறுவனம் செய்யும் என இந்நிறுவனத்தின் துணை நிர்வாக இயக்குனர் சுதர்ஷன் வேணு தெரிவித்துள்ளார்.
புதிய மாடல்கள்
டிவிஎஸ் மோட்டார்ஸ் இந்தியாவில் அடுத்தச் சில மாதத்தில் நார்டன் நிறுவனத்தின் Commando, Dominator மற்றும் V4 RR என அடத்தடுத்து பைக்குகளை அறிமுகம் செய்யத் திட்டமிட்டுள்ளது. டிவிஎஸ் நிறுவனத்தின் இந்தத் தொடர் அறிமுகத்தால் இருசக்கர வாகன விற்பனையில் அதிகளவிலான வர்த்தகத்சதை டிவிஎஸ் பெறும் என நம்புகிறது.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications