துபாய்: தமிழ்நாட்டை பூர்வீகமாக கொண்ட டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் இருசக்கர மற்றும் மூன்று சக்கர வாகனங்களை தயாரித்து விற்பனை செய்து வருகிறது. இந்த நிறுவனம் மத்திய கிழக்கு நாடுகள் ,ஆப்பிரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் தங்களுடைய செயல்பாடுகளை விரிவாக்கம் செய்வதை நோக்கி புதிதாக ஒரு துணை நிறுவனத்தை அமைத்திருக்கிறது.
டிவிஎஸ் மோட்டார் நிறுவனத்தின் இயக்குனரும் தலைமை செயல் அதிகாரியுமான கே என் ராதாகிருஷ்ணன் தங்களுடைய சர்வதேச தொழிலை விரிவாக்கம் செய்யும் நோக்கில் துபாயில் புதிதாக ஒரு மையத்தை நிறுவ இருப்பதாக தெரிவித்துள்ளார். தற்பொழுது மத்திய கிழக்கு நாடுகள் மற்றும் ஐரோப்பிய நாடுகளில் தங்கள் நிறுவனத்திற்கு மிகப்பெரிய வாய்ப்புகள் இருப்பதை கண்டறிந்தே இப்படி ஒரு முடிவினை எடுத்திருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

துபாயில் அமைக்கப்படக்கூடிய இந்த அலுவலகமானது டிவிஎஸ் மோட்டார் நிறுவனத்தின் விற்பனை மற்றும் மார்க்கெட்டிங் செயல்பாடுகளுக்கும், விற்பனைக்கு பிந்தைய சர்வீஸ் உள்ளிட்டவற்றுக்கும் வாகனங்களின் உதிரி பாகங்களை விநியோகம் செய்வதற்கும் பயன்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2024 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் தான் டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் டிவிஎஸ் மோட்டார் கம்பெனி டிஎன்சிசி என்று நிறுவனத்தை துபாயில் தொடங்கியது. மத்திய கிழக்கு நாடுகள் மற்றும் ஆப்பிரிக்க சந்தையில் தங்களுடைய தொழிலை விரிவாக்கம் செய்வதற்கான அனைத்து பணிகளையும் இந்த துணை நிறுவனம் மேற்கொள்ளும் என டிவிஎஸ் மோட்டார் கம்பெனி அப்போது அறிவித்தது.
அதன் ஒரு பகுதியாக தான் தற்போது துபாயில் இந்த நிறுவனம் தன்னுடைய அலுவலகத்தை நிறுவுகிறது. ஐரோப்பிய சந்தையில் கடந்த ஆண்டு முதல்முறையாக கால் பதித்தது. அங்கே செயல்பட்டு வரக்கூடிய எமில் பிரே என்ற நிறுவனத்தோடு கூட்டு ஒப்பந்தம் செய்துள்ள டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் பிரான்ஸ் மற்றும் இத்தாலி ஆகிய நாடுகளில் தங்களுடைய இருசக்கர வாகனங்களை விற்பனை செய்ய தொடங்கியுள்ளது. டிவிஎஸ் நிறுவனத்தின் ஜுபிடர், டிவிஎஸ் எக்ஸ், அப்பாச்சி உள்ளிட்ட வாகனங்கள் தற்போது ஐரோப்பிய சந்தைகளில் கிடைக்கின்றன.
டிவிஎஸ் நிறுவனம் தற்போது ஆசியா, ஆப்பிரிக்கா மற்றும் லத்தீன் அமெரிக்க பிராந்தியங்களில் தங்களுடைய வாகனங்களை விற்பனை செய்து வருகிறது. இந்தியாவில் மூன்று இடங்களிலும் இந்தோனேசியாவில் ஒரு இடத்திலும் என மொத்தம் நான்கு இடங்களில் உற்பத்தி ஆலைகளை நிறுவி இருக்கிறது.
டிவிஎஸ் நிறுவனத்தின் கடந்த ஆண்டு வருமானத்தில் கிட்டத்தட்ட 25 சதவீதம் வாகன ஏற்றுமதிகள் மூலம் கிடைத்தது தெரியவந்துள்ளது. டிவிஎஸ் நிறுவனம் முதல் 9 மாத காலத்தில் 1400 கோடி ரூபாய் வரை முதலீடு செய்திருக்கிறது. இன்னும் 300 கோடி வரை அடுத்த 3 மாதங்களுக்குள் முதலீடு செய்ய இருப்பதாக டிவிஎஸ் மோட்டார் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
More From GoodReturns

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை: மதுரையில் அதிரடி சரிவு! மார்ச் 23, 2026 நிலவரம் மற்றும் எதிர்கால கணிப்புகள் வெளியானது

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

எங்க கிட்ட பேச்சே கிடையாது..!! டிரம்ப் மூக்கை உடைக்கும் அளவுக்கு பதில் கொடுத்த ஈரான்..!



Click it and Unblock the Notifications