இந்தியாவின் இரண்டாவது பெரிய இரு சக்கர வாகன தயாரிப்பு நிறுவனமான டிவிஎஸ் நடப்பு நிதியாண்டில் பெரிய திட்டங்களை செயல்படுத்த இலக்காக கொண்டுள்ளது. ஓசூரை தளமாகக் கொண்டு இயங்கி வரும் டிவிஎஸ் மோட்டார் தொழிற்சாலையில் 2024 நிதியாண்டில் 1,800 கோடி ரூபாய் அளவிலான முதலீடுகளை செய்ய உள்ளது.
இந்த தொகையில் ரூ.900-1,000 கோடி கேபெக்ஸுக்கு ஒதுக்கப்படும் மற்றும் முதலீடுகள் பிரிவுக்கு ரூ.800 கோடி ஒதுக்கப்பட உள்ளது.
டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் தனது புதிய எலக்ட்ரிக் 3 சக்கர வாகனங்களை வரும் காலாண்டில் அறிமுகப்படுத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளது.

டிவிஎஸ் மோட்டார்ஸ் நிறுவனத்தின் இயக்குநரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான கே என் ராதாகிருஷ்ணன், இப்புதிய முதலீட்டில் மின்சார வாகனம் (EV) மற்றும் IC இன்ஜின் வாகனங்கள் தயாரிப்புக்கும் பொருந்தும் என்று அறிவித்தார்.
2023 ஆம் நிதியாண்டில் இந்தியாவில் உள்நாட்டு எலக்ட்ரிக் இருசக்கர வாகனத் தொழில் கிட்டத்தட்ட மூன்று மடங்கு வளர்ச்சியடைந்துள்ளது. இந்த பிரிவிற்கு மானியம் மற்றும் ஊக்கமளிப்பதற்கான பல்வேறு அரசாங்க முயற்சிகள் உட்பட தேவை அதிகரிப்பதற்கு காரணமாக உள்ளது.
ஜூன் காலாண்டில் டிவிஎஸ் மோட்டார் கம்பெனி நிறுவனத்தின் ஒருங்கிணைந்த நிகர லாபம் வருடாந்திர அடிப்படையில் 42.2 சதவீதம் உயர்ந்து 434.30 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜூன் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டில் டிவிஎஸ் நிறுவனத்தின் ஒருங்கிணைந்த மொத்த வருவாய் 23.8% உயர்ந்து 9,055.51 கோடியாக உள்ளது. கடந்த ஆண்டின் இதே காலாண்டில் மொத்த வருமானம் ₹7,347.83 கோடியாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

கடந்த ஆண்டின் இதே காலாண்டில் டிவிஎஸ் மோட்டார்ஸ் 305.37 கோடி லாபம் ஈட்டியிருந்தது. இதுவே மார்ச் காலாண்டை ஒப்பிடுகையில் 336.10 கோடி ரூபாய் பெற்றிருந்த நிலையில் ஜூன் காலாண்யில் 29.2% அதிகரித்துள்ளது.
ஜூன் 2022 காலாண்டை ஒப்பிடுகையில் ஜூன் 2023 காலாண்டில் டிவிஎஸ் மோட்டார்ஸ் நிறுவனத்தின் இரு சக்கர மற்றும் 3 சக்கர வாகன விற்பனை மற்றும் வெளிநாட்டு ஏற்றுமதி ஆகியவை 5 சதவீதம் அதிகரித்து 3 மாதத்தில் 9.07 லட்சம் வாகனங்களை விற்பனை செய்துள்ளது.
மோட்டார் சைக்கிள் விற்பனை 7 சதவீதம் அதிகரித்து 4.63 லட்சம் வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டு உள்ளது. ஸ்கூட்டர் விற்பனை 11 சதவீதம் அதிகரித்து 3.50 லட்சம் வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டு உள்ளது. 3 சக்கர வாகனங்களின் விற்பனை 46,000 இருந்து 35000 ஆக குறைந்துள்ளது.


Click it and Unblock the Notifications