இந்தியாவின் முன்னணி மற்றும் தமிழ்நாட்டின் மிகப்பெரிய இருசக்கர வாகன தயாரிப்பு மற்றும் விற்பனை நிறுவனமான டிவிஎஸ் மோட்டார் முன்னாள் தலைவரும் தற்போதைய சேர்மன் எமரிட்டஸ் வேணு சீனிவாசன், சில வருடங்களுக்கு முன்பு தனது பொறுப்புகளை அவருடைய வாரிசுகளுக்குக் கொடுக்க முடிவு செய்தார்.
இதன் படி TVS மோட்டார்ஸ் நிர்வாகம் சுதர்சன் வேணு-வுக்கும், TAFE மோட்டார்ஸ் மற்றும் டிராக்டர்ஸ் நிர்வாகம் மகள் டாக்டர் லக்ஷ்மி வேணு ஆகியோருக்குப் பகிரப்பட்டது. இளம் தலைமுறையினர் வந்த பின்பு புதிய அறிமுகம், முக்கிய நிர்வாக மாற்றங்கள், வர்த்தக விரிவாக்கம், புதிய கூட்டணி என அடுத்தடுத்து நடந்தது.

இதன் விளைவாக TVS மோட்டார் டிசம்பர் 2023 உடன் முடிவடைந்த காலாண்டில் ரூ.593 கோடி நிகர லாபம் ஈட்டியுள்ளது, இது கடந்த ஆண்டு டிசம்பர் காலாண்டின் 352 கோடி ரூபாய் லாபத்தை ஒப்பிடுகையில் சுமார் 68 சதவீதம் அதிகமாகும்.
இதேபோல் டிவிஎஸ் நிறுவனத்தின் செயல்பாடுகள் மூலம் கிடைத்த வருவாய் டிசம்பர் காலாண்டில் 8,245 கோடி ரூபாயாக உள்ளது. இது கடந்த நிதியாண்டின் இதே டிசம்பர் காலகட்டத்தில் பதிவான ரூ.6,545 கோடியுடன் ஒப்பிடுகையில் 26 சதவீதம் அதிகமாகும்.
மேலும் வட்டி, வரி, தேய்மானம் மற்றும் கடன் ஆகியவற்றைச் செலுத்துவதற்கு முந்தைய வருவாய் (EBITDA) வருடாந்திர அடிப்படையில் 40 சதவீதம் அதிகரித்து ரூ.924 கோடியாக உள்ளது. முதலீட்டாளர்கள் கவனிக்க வேண்டிய EBITDA மார்ஜின் 10.1 சதவீதத்திலிருந்து 11.2 சதவீதமாக உயர்ந்துள்ளது.
அக்டோபர்-டிசம்பர் காலகட்டத்தில் TVS மோட்டாரின் மொத்த இரு சக்கர வாகன விற்பனை 10.63 லட்சமாக இருந்தது, முந்தைய நிதியாண்டின் இதே டிசம்பர் காலாண்டில் 8.36 லட்சமாக இருந்தது குறிப்பிடத்தக்கது. டிசம்பர் 2022 காலாண்டில் 2.07 லட்சமாக இருந்த இரு சக்கர வாகனங்கள் ஏற்றுமதி 2023 டிசம்பர் காலாண்டில் 2.16 லட்சமாக அதிகரித்துள்ளது.
இதே காலகட்டத்தில் 3 சக்கர வாகனங்களின் விற்பனை வருடாந்திர அடிப்படையில் இந்த டிசம்பர் காலாண்டில் 43000ல் இருந்து 38000 ஆகக் குறைந்துள்ளது. இதேபோல் எலக்ட்ரிக் வாகன விற்பனை 29000 ல் இருந்து 48000 ஆக அதிகரித்துள்ளது. இன்றைய வர்த்தக முடிவில் டிவிஎஸ் பங்குகள் 0.82 சதவீதம் அதிகரித்து 2003.70 ரூபாயாக உள்ளது.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!



Click it and Unblock the Notifications