சிங்கப்பூரில் கடையை விரித்த தமிழ்நாட்டு நிறுவனம்.. TVS செம அப்டேட்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தமிழ் நாட்டின் பிரபல இருசக்கர வாகன நிறுவனமான டிவிஎஸ் நிறுவனம் சிங்கப்பூரில் தனது முதல் ஷோரூமை தொடங்கியுள்ளது.

 

சென்னையை தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வரும் டிவிஎஸ் நிறுவனம், தற்போது பல்வேறு வகையிலும் தனது வணிகத்தினை விரிவாக்கம் செய்து வருகின்றது.

ஒரு புறம் மின்சார வாகனத்திலும் கவனம் செலுத்த தொடங்கியுள்ளது எனில், மறுபுறம் சிங்கப்பூரில் தனது முதல் ஷோரூமினை தொடங்கியுள்ளது.

பிரீமிய வாகனங்களை வழங்க திட்டம்

பிரீமிய வாகனங்களை வழங்க திட்டம்

டிவிஎஸ் நிறுவனம் இந்த ஷோரூமினை (TVS Experience centre) என கூறுகின்றது. டிவிஎஸ் நிறுவனத்தின் இந்த ஷோரூம் மூலமாக தனது வாகனங்களை விற்பனை செய்ய உள்ளதாக தெரிவித்துள்ளது.

இது குறித்து பங்கு சந்தைக்கு தாக்கல் செய்த அறிக்கையில், பிரீமியம் ரக மோட்டார் சைக்கிள், அப்பாச்சி (Apache RR310), அப்பாச்சி RTR உள்ளிட்ட பல்வேறு பிரீமியம் வாகனங்களை வழங்க திட்டமிட்டுள்ளது.

பல வகையான வசதிகள்

பல வகையான வசதிகள்

மொத்தத்தில் பல வகையான டிவிஎஸ் தயாரிப்புகளை அறிமுகப்படுத்த உள்ளதாக டிவிஎஸ் என தெரிவித்துள்ளது. இந்த மையத்தில் கூடுதலாக வாகன சேவை வசதி மற்றும் உதிரி பாகங்கள் பல சேவைளும் இருக்கும் என அறிவித்துள்ளது.

பிடி டிவிஎஸ் சேவை மையத்தின் தலைவர் இயக்குனர் ஜே தங்கராஜன் கூறுகையில், சிங்கப்பூரில் தொடங்கப்பட்ட இந்த அதி நவீன அனுபவ மையம், எங்களது இருப்பை வலுப்படுத்தும்.

அப்பாச்சி ஏற்றுமதி
 

அப்பாச்சி ஏற்றுமதி

டிவிஎஸ் மோட்டார்ஸ் நிறுவனத்திற்கு 40 ஆண்டுகள் அனுபவம் உள்ளது. இது டிவிஎஸ் நிறுவனம் 2005ம் ஆண்டில் அப்பாச்சி சீரிஸை அறிமுகப்படுத்தியது. டிவிஎஸ் நிறுவனம் தற்போது 80 நாடுகளுக்கு அப்பாச்சி சீரிஸ் ரக வாகனங்களை ஏற்றுமதி செய்து வருகின்றது. இது உலகம் முழுக்க எங்களுக்கு 4.8 மில்லியன் வாடிக்கையாளர்கள் உள்ளன.

அடுத்த கட்டம்

அடுத்த கட்டம்

சிங்கப்பூரில் எங்களது அனுபவ மையத்தினை தொடங்கியுள்ளதன் மூலம், நாங்கள் அடுத்த கட்டத்திற்குள் நுழைந்துள்ளோம் என சர்வதேச தொழில் கட்டமைப்பு வளர்ச்சியில், பல ஆண்டு அர்பணிப்புடன் உலகளவில், வாடிக்கையாளர்களின் தேவையை டிவிஎஸ் பூர்த்தி செய்து வருகிறது. சிங்கப்பூரில் சேவை வழங்குவதற்காக டிவிஎஸ் நிறுவனம் Chong Aik குழுமத்தினையும் சேர்ந்த, மோட்டார்ஸ்போர்ட் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்துடன் கூட்டணி வைத்துள்ளது. இது சிங்கப்பூரில் டிவிஎஸ் நிறுவனத்தின் விநியோகப்பாளராக இருக்கும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

Read more about: tvs டிவிஎஸ்
English summary

TVS motors expands its global footprint in singapore

TVS Motors launched a two-wheeler company from Tamil Nadu, has opened its first showroom in Singapore
Story first published: Thursday, November 24, 2022, 20:38 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X