டிவிஎஸ் அசத்தல்.. விற்பனையில் புதிய சாதனை..!

தமிழ்நாட்டின் முன்னணி இருசக்கர வாகன விற்பனை நிறுவனமான டிவிஎஸ் இந்திய வர்த்தகத்தைத் தாண்டி வெளிநாட்டிலும் தனது வர்த்தகத்தை விரிவாக்கம் செய்யத் தொடர்ந்து முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இதன் வாயிலாக வெளிநாடு வர்த்தகத்தில் டிவிஎஸ் முதல் முறையாக விற்பனையில் புதிய மைல்கல்லை அடைந்துள்ளது.

கொரோனா தொற்றால் இந்தியச் சந்தை வர்த்தகம் பாதிக்கப்பட்டு உள்ள நிலையில், வெளிநாட்டின் அதிகளவிலான வர்த்தகத்தைப் பெற்றுள்ளது டிவிஎஸ் நிறுவன முதலீட்டாளர்களுக்கு இந்நிறுவனத்தின் மீதான நம்பிக்கையை அதிகரித்துள்ளது.

 டிவிஎஸ் நிறுவனம்

டிவிஎஸ் நிறுவனம்

டிவிஎஸ் நிறுவனம் 2018ல் முதல் முறையாக ப்ளூடூத் தொழில்நுட்பத்துடன் இணைக்கும் NTORQ 125 ஸ்கூட்டர்-ஐ அறிமுகம் செய்தது. NTORQ 125 அறிமுகத்திற்குப் பின் இந்திய ஸ்கூட்டர் பிரிவில் அதிகளவில் வர்த்தகத்தைப் பெறத் துவங்கியது.

 டிவிஎஸ் NTORQ 125 ஸ்கூட்டர்

டிவிஎஸ் NTORQ 125 ஸ்கூட்டர்

இதன் காரணமாக NTORQ 125 ஸ்கூட்டர்-ஐ வெளிநாடுகளிலும் விற்பனை செய்யத் திட்டமிட்ட டிவிஎஸ் நிர்வாகம், இந்தியாவைத் தாண்டி தென் ஆசிய பகுதிகள், லத்தின் அமெரிக்கா, மத்திய கிழக்கு நாடுகள், ASEAN நாடுகளிலும் விற்பனை செய்யத் துவங்கியது.

 வெளிநாட்டு விற்பனையில் சாதனை

வெளிநாட்டு விற்பனையில் சாதனை

இதன் மூலம் முதல் முறையாக NTORQ 125 பிராண்ட் ஸ்கூட்டர் வெளிநாட்டில் மட்டும் சுமார் 1 லட்சம் வாகனங்களை விற்பனை செய்து புதிய உச்சத்தையும் மைல்கல்லையும் அடைந்துள்ளது. டிவிஎஸ் NTORQ 125 டிவிஎஸ் ரேசிங் பெடிகிரி தலைமையில் உருவாக்கப்பட்டு உள்ளது.

 நவீனத் தொழில்நுட்பங்கள்

நவீனத் தொழில்நுட்பங்கள்

மேலும் முதல் முறையாக இந்த ஸ்கூட்டரில் தான் Race-Tuned Fuel Injection (RT-Fi) தொழில்நுட்பத்தையும், டிவிஎஸ் ஸ்மார்ட்கனெக்ட் தொழில்நுட்பம் கொண்டும் தயாரிக்கப்பட்டு உள்ளது. இதனால் NTORQ 125 ஸ்கூட்டரின் செயல் திறனும், சேவையும் சிறப்பாக உள்ளது இதன் வாயிலாகவே விற்பனையில் சாதனை படைத்துள்ளது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+