அமெரிக்காவில் கஞ்சா விளம்பரங்களுக்கு அனுமதி அளிக்கும் முதல் சமூக வலைத்தள நிறுவனமாக டிவிட்டர் உயர்ந்துள்ளது. முன்னதாகக் கஞ்சாவில் மாற்றங்கள் செய்யப்பட்ட அல்லது கஞ்சா கலந்த மற்ற பொருட்களுக்கான விளம்பரங்கள் டிவிட்டரில் அனுமதிக்கப்பட்டு வந்தன.
போட்டி வலைத்தளங்களான பேஸ்புக், இன்ஸ்டாகிராம் மற்றும் டிக்டாக் உள்ளிட்டவை அமெரிக்க விதிகளுக்கு உட்பட்டு கஞ்சா விளம்பரங்களை அனுமதிப்பது இல்லை. ஆனாலும் அமெரிக்காவில் சில மாநிலங்களில் மருத்துவ ரீதியிலான கஞ்சா விற்பனைக்கு அனுமதி உள்ளது.
மிகவும் சக்திவாய்ந்த இயக்கங்களின் வேறாக டிவிட்டர் வலைத்தளம் செயல்பட்டு வருகிறது என அறிவித்துக் கஞ்சா விளம்பரங்களுக்கு அனுமதி அளிப்பதை டிவிட்டர் தனது பிளாக்-ல் அறிவித்தது.
ஃபாஸ்ட் ஃபுட், காஃபி மற்றும் மதுபானம் பிரிவுகளில் கஞ்சாவை பொழுதுபோக்கிற்காகப் பயன்படுத்தப்படுவதை டிவிட்டர் அங்கீகரிக்கிறது.
டிவிட்டர்
டிவிட்டரில் கஞ்சா-வுக்கான விளம்பர இடம் மகிழ்ச்சியை அளிக்கிறது. இதன் மூலம் பயனர்கள் மருத்துவத்திற்கோ, உடல்நலன் அல்லது புத்துணர்வு கொள்ளவோ எனப் பலதரப்பட்ட கஞ்சா பயன்பாடு குறித்த அனுபவங்களை டுவிட் செய்யவோ அல்லது சில பிராண்டுகளைப் பரிந்துரை செய்யவோ முடியும்.
கஞ்சா துறை
தற்போது அமெரிக்காவில் கஞ்சா துறை சட்டம் மாற்றம், வியாபார வளர்ச்சி மற்றும் சமூகத் தாக்கம் திசையில் செல்கிறது. இதில் ஏற்படும் மாற்றங்கள் வைத்து டிவிட்டரும் தனது கொள்கைகளை மாற்றிக்கொள்ளும் என அறிவித்துள்ளது.
விளம்பரம்
முறையான உரிமம் வைத்திருப்பின், கஞ்சா நிறுவனங்கள் விளம்பரம் செய்ய அனுமதிக்கப்படுவர் என டிவிட்டர் நிறுவனம் தெரிவித்து இருக்கிறது. "டிவிட்டர் நிறுவனம் விளம்பரதாரர்கள் தங்களின் பிராண்டுக்கு முன்னுரிமை கொடுக்கும். இதில் முதல் கட்டமாக CBD, THC மற்றும் கஞ்சா சார்ந்த பொருட்கள் மற்றும் சேவைகள் குறித்த தரவுகளை விளம்பரம் செய்ய அனுமதி அளிக்கிறது எனத் தெரிவித்துள்ளது.
எலான் மஸ்க்
கடந்த ஆண்டு அக்டோபர் மாத வாக்கில் எலான் மஸ்க் டிவிட்டர் நிறுவனத்தை வாங்கியதில் இருந்து, இத்தளத்தில் விளம்பரங்கள் செய்வதைப் பல்வேறு நிறுவனங்கள் நிறுத்தின, இதன் பின்பு பல மாற்றங்கள், ஆலோசனைக்குப் பின்பு விளம்பரம் செய்ய முன்வந்தன.
வருவாய்
இந்த நிலையில், புதிய அப்டேட் மூலம் டிவிட்டர் நிறுவனம் பல்வேறு வழிகளில் தனது வருவாயை அதிகப்படுத்தும் முயற்சிகளில் ஈடுபட்டு வருவதையே இந்தக் கஞ்சா விளம்பரத்திற்கு அனுமதி அளிப்பது மூலம் வெளிப்படுத்துகிறது.
ஆப்பிள் மற்றும் அமேசான்
ஆப்பிள் மற்றும் அமேசான் நிறுவனங்கள் டிவிட்டருக்கு விளம்பர வருவாய் அளிப்பதில் முன்னணியில் உள்ளன. இரு நிறுவனங்கள் கடந்த ஆண்டில் இருந்தே விளம்பரங்களை நிறுத்தின. இந்தப் பிரச்சினையைத் தீர்க்கும் வகையில், எலான் மஸ்க் நிறுவனங்களின் மூத்த அதிகாரிகளைத் தொடர்பு கொண்டு பேசி இருந்தார்.
40 சதவீதம் வரை குறைந்து
எனினும், டிவிட்டர் நிறுவன வருவாய் தொடர்ந்து சரிவடைந்து வருகிறது. இது குறித்து வெளியான அறிக்கையில், 2022 நான்காவது காலாண்டு வாக்கில் டிவிட்டர் நிறுவன வருவாய் வருடாந்திர அடிப்படையில் 40 சதவீதம் வரை குறைந்து இருப்பதாகக் குறிப்பிடப்பட்டு இருக்கிறது. டிவிட்டர் தற்போது தனியார் நிறுவனம் என்பதால், இதுபற்றிய முழு விவரங்கள் வெளியாகவில்லை. ஆனால் கடந்த காலாண்டில் 942 மில்லியன் டாலர் அளவிலான வருமானத்தை டிவிட்டர் ஈட்டியுள்ளது.
பணிநீக்கம்
எலான் மஸ்க் தற்போது டிவிட்டர் நிறுவனத்தில் பணியாற்றி வந்த ஊழியர்களில் பாதிப் பேரை பணிநீக்கம் செய்தநிலையில், உலகளவில் பல அலுவலகங்களைப் பணிநீக்கம் செய்துள்ளது.
ட்விட்டர் நிறுவனம் இந்தியாவில் இருக்கும் மூன்று அலுவலகங்களில் இரண்டை மூடிவிட்டு, அதன் ஊழியர்களை வீட்டிலிருந்து வேலை செய்ய உத்தரவிட்டு உள்ளது.
டிவிட்டர் அலுவலகங்கள்
எலான் மஸ்க் டிவிட்டரை லாபகரமாக மாற்ற வேண்டும் என்று இலக்குடன் கடுமையான, இதேநேரம் அதிரடியான முடிவுகளை எடுத்து வரும் வேளையில் இந்நிறுவனத்தில் செலவுகளைக் குறைக்கும் விதமாக டெல்லி, மும்பை அலுவலகங்களை மூடிவிட்டு, ஊழியர்களை வீட்டில் இருந்து பணியாற்ற உத்தரவிடப்பட்டு உள்ளது.
இந்திய ஊழியர்கள்
இந்தியாவில் சுமார் 200-க்கும் மேற்பட்ட ஊழியர்களைப் பணிநீக்கம் செய்து மொத்த ஊழியர்களில் 90 சதவீதத்திற்கும் அதிகமானவர்களைப் பணிநீக்கம் செய்துள்ளது எலான் மஸ்க் தலைமையிலான டிவிட்டர். இதனால் கடந்த ஆண்டு இந்திய டிவிட்டர் கடுமையான மாற்றங்களை எதிர்கொண்டது குறிப்பிடத்தக்கது.
பெங்களூர் டிவிட்டர் ஊழியர்கள்
டெல்லி மற்றும் மும்பை அலுவலகங்களை மூடிவிட்டு பெங்களூர் அலுவலகத்தை மட்டும் இயக்க முக்கியக் காரணம், பெங்களூர் தொழில்நுட்ப மையத்தில் பெரும்பாலும் பொறியாளர்களைக் கொண்ட அலுவலகம் என்பதால் தொடர்ந்து இயக்குகிறது.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications