டிவிட்டர் நிறுவனத்தை எப்படியாவது வாங்க வேண்டும் என்று எலான் மஸ்க் திட்டமிட்டு வரும் நிலையில், டிவிட்டர் நிறுவனம் எலான் மஸ் கைகளுக்குப் போகக் கூடாது என்று இந்நிறுவனத்தின் ஊழியர்களும், சில முதலீட்டாளர்களும் திட்டமிட்டு வருகின்றனர்.
எலான் மஸ்க் அதிகப்படியான டெஸ்லா பங்குகளை விற்பனை செய்து டிவிட்டர் நிறுவனத்தை வாங்கும் அளவிற்கு ரிஸ்க் எடுக்கத் தயாராக உள்ளார்.
டிவிட்டர்
டிவிட்டர் போன்ற சமுக வலைத்தளத்தில் வருமானத்தைத் தாண்டி ஆதிக்கம் செலுத்த அதிகப்படியான வாய்ப்புகள் உள்ளது என்றும், மக்களுக்கு மேம்பட்ட சேவையை டிஜிட்டல் உலகில் வழங்க முடியும் என்பதாலேயே டிவிட்டரை ரிஸ்க் எடுத்து வாங்க உள்ளார். ஆனால் டிவிட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க் வாங்குவதைத் தடுக்கத் தற்போது முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
டிவிட்டர் நிர்வாகக் குழு
டிவிட்டர் நிர்வாகக் குழு தற்போது எலான் மஸ்க் கொடுத்த 43 பில்லியன் டாலர் ஆஃபரை அதிகளவிலானோர் மறுத்தாலும், உறுதியான முடிவு எடுக்கப்படவில்லை. இதற்கு முக்கியக் காரணம் டிவிட்டர் முதலீட்டாளர்கள் மத்தியில் இருக்கும் மாறுபட்ட நிலைப்பாடு தான்.
poison pill திட்டம்
இதைச் சமாளிக்கத் தற்போது நிர்வாகக் குழுவின் ஒரு பகுதியினர் 'poison pill' என்னும் முறையைக் கையாள முடிவு செய்துள்ளது. இது ஷேர்ஹோல்டர் ரைட்ஸ் பிளான் என்றும் அழைக்கப்படும். தற்போது எலான் மஸ்க் 9.2 சதவீத பங்குகளை வைத்துள்ளார்.
முதலீடு
இத்திட்டம் மூலம் ஏற்கனவே இந்நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளவர்கள் கூடுதலான முதலீடு செய்து அதிகப்படியான பங்குகளைக் கைப்பற்றி நிறுவனத்தின் விற்பனையைத் தடுக்கும் அளவிற்கான ஆதிக்கத்தை நிர்வாகக் குழுவில் பெறுவது தான்.
வேன்கார்டு, கிங்டம்
எலான் மஸ்க் பங்கு முதலீடு அறிவித்த உடனே டிவிட்டர் நிறுவனத்தின் முக்கியமான முதலீட்டாளராக இருந்த வேன்கார்டு கூடுதலாக முதலீட்டை பெற்று நிர்வாகக் குழுவில் மஸ்க்-கை காட்டிலும் கூடுதலான ஆதிக்கத்தைப் பெற்றது. இதேபோல் ஐக்கிய அரபு நாட்டின் கிங்டம் நிறுவனமும் கூடுதலான டிவிட்டர் பங்குகளைப் பெற்றுள்ளது.
More From GoodReturns

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

அமெரிக்காவுக்கு சத்தமேயில்லாமல் செக் வைத்த ஈரான்: டாலர் ஆதிக்கத்தை முடக்க சீனா வகுத்த வியூகம்!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!

முதலிடத்தில் விஜய், இரண்டாமிடத்தில் ஸ்டாலின் – அப்போ எடப்பாடி பழனிசாமி , சீமான்?

தங்கம் விலை ஏற்ற இறக்கம் குறித்து கவலையே வேண்டாம்: இப்படி முதலீடு செஞ்சா லாபம் கொட்டும்!!

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

GPay யூஸ் பண்றீங்களா? PocketMoney ஐகான் கிளிக் பண்ணா மொத்த பணமும் போய்டுமா?வைரலாகும் வாட்ஸ்அப் ஆடியோ



Click it and Unblock the Notifications