சமுக வலைத்தள நிறுவனங்கள் கடுமையான தடுமாற்றத்தை எதிர்கொண்டு வரும் நிலையில் மாபெரும் கனவு திட்டத்துடன் 44 பில்லியன் டாலர் தொகையை முதலீடு செய்து டிவிட்டர் நிறுவனத்தைப் பெரும் மன மாற்றத்திற்குப் பின்பு எலான் மஸ்க் வாங்கியுள்ளார்.
இதுவரை வெளியான தகவல்கள் படி டிவிட்டர் நிறுவனத்தை வாங்கிய பின்பு எலான் மஸ்க் 5 உயர் அதிகாரிகளைப் பணிநீக்கம் செய்துள்ளார், சொல்லப்போனால் இந்த 5 அதிகாரிகளும் எலான் மஸ்க் வர வேண்டும், வந்த பணிநீக்கம் செய்ய வேண்டும் எனக் காத்திருந்து பணியில் இருந்து வெளியேற்றப்பட்டு உள்ளனர்.
இதற்கு என்ன காரணம் தெரியுமா..?
எலான் மஸ்க் திட்டம்
எலான் மஸ்க் X Everything App என்ற தனது கனவு செயலியை உருவாக்க வேண்டும் என்பதற்காக 44 பில்லியன் டாலர் என்ற மிகப்பெரிய தொகையை முதலீடு செய்து வாங்கியுள்ளதால் முதல் நாளில் இருந்தே தீவிரமாகவும், கடுமையாகவும் பணியாற்ற வேண்டும் என எலான் மஸ்க் முடிவு செய்துள்ளார்.
உயர் அதிகாரிகள் பணிநீக்கம்
இந்நிலையில், தனது பாதையில் தடையாக இருக்கும் அதிகாரிகளைப் பணிநீக்கம் முடிவு செய்து, வியாழக்கிழமை டிவிட்டரைக் கைப்பற்றிய அடுத்த சில நிமிடத்தில் அடுத்தடுத்து உயர் அதிகாரிகள் பணியில் இருந்து வெளியேறிய செய்தி காட்டுத்தீ போலப் பரவி வருகிறது.
டிஸ்மிஸ்
ஒரு பக்கம் டிவிட்டர் ஊழியர்கள் தானாக முன்வந்து பணியை ராஜினாமா செய்துள்ளதாகக் கூறப்படும் நிலையில், மறுபுறம் இந்த 5 ஊழியர்களும் திட்டமிட்டு எலான் மஸ்க் கையால் டிஸ்மிஸ் செய்யப்பட வேண்டும் என்று திட்டமிட்டே டிவிட்டரை எலான் மஸ்க் வாங்குவது உறுதியாகியும் தொடர்ந்து பணியில் இருந்தனர் எனக் கூறப்படுகிறுத.
உயர் அதிகாரிகள்
இன்று காலையில் வெளியான தகவல் படி டிவிட்டர் நிறுவனத்தின் சிஇஓ பராக் அகர்வால், தலைமை நிதியியல் அதிகாரி Ned Sega, சட்டக் கொள்கை, நம்பிக்கை மற்றும் பாதுகாப்பு பிரிவின் தலைவர் விஜயா காடே, பொது ஆலோசகர் சீன் எட்ஜெட், தலைமை வாடிக்கையாளர் அதிகாரி சாரா பெர்சோனெட் ஆகியோர் பணிநீக்கம் செய்யப்பட்டு உள்ளதாகத் தெரிகிறது.
CXO பிரிவு அதிகாரிகள்
பொதுவாக CXO பிரிவில் இருக்கும் அதிகாரிகள் திடீரெனப் பணிநீக்கம் செய்யப்பட்டாலோ அல்லது நிர்வாக மாற்றத்தாலோ பணிநீக்கம் செய்யப்பட்டாலோ வேலை நீக்க ஊதியம், பகிரப்படாத பங்குகள், போனஸ் எனப் பலவற்றை அளிக்க வேண்டும்.
ஸ்மார்ட் திட்டம்
ஆனால் இது அனைத்தும் CXO பிரிவில் இருக்கும் அதிகாரிகள் தானாக முன்வந்து பதவியை ராஜினாமா செய்தால் எதுவும் கிடைக்காது. இதனாலேயே தற்போது எலான் மஸ்க் டிவிட்டரை கைப்பற்றி அவர் கையாலே டிஸ்மிஸ் செய்யப்பட வேண்டும் என முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது.
லாபம்.. சுபம்..
இதன் மூலம் இன்று டிவிட்டர் நிறுவனத்தில் இருந்து பணிநீக்கம் செய்யப்பட்ட பராக் அகர்வால் அதிகப்படியாக 38.7 மில்லியன் டாலர் தொகையைப் பெற்ற உள்ளார். இதைத் தொடர்ந்து Ned Segal 25.4 மில்லியன் டாலரும், விஜயா காடே 12.5 மில்லியன் டாலரும், தலைமை வாடிக்கையாளர் அதிகாரியான சாரா பெர்சோனெட் 11.2 மில்லியன் டாலர் தொகையைப் பெற்ற உள்ளனர்.
அடிப்படை சம்பளம்
இந்த 4 பேரின் அடிப்படை சம்பளம் 1 மில்லியன் டாலர் மற்றும் அதற்குக் குறைவாக இருந்தாலும், பங்கு கையிருப்பும், பங்கு விதிப்புகளும் அதிகமாக உள்ளது. இந்தப் பங்கிற்குத் தான் இவ்வளவு பெரிய தொகை.
100 சதவீத பங்குகள்
தற்போது எலான் மஸ்க் 100 சதவீத பங்குகளையும் பெற உள்ள நிலையில் இவர்களின் பங்குகளுக்கும் பணத்தைக் கொடுத்தாக வேண்டும். இதேபோல் எலான் மஸ்க்-ன் 44 பில்லியன் டாலர் தொகையில் டிஸ்மிஸ் செய்யப்பட்ட 5 அதிகாரிகளுக்குப் பெற உள்ள தொகையும் அடக்கம் என்பதால் கூடுதல் சுமையும் எதுவும் இல்லை.
More From GoodReturns

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

ரூ.10 கோடியை ரூ.100 கோடியாக மாற்றிய நடிகை மீனா..!! செம ஐடியாவா இருக்கே..!!

அமெரிக்காவுக்கு சத்தமேயில்லாமல் செக் வைத்த ஈரான்: டாலர் ஆதிக்கத்தை முடக்க சீனா வகுத்த வியூகம்!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!

GPay யூஸ் பண்றீங்களா? PocketMoney ஐகான் கிளிக் பண்ணா மொத்த பணமும் போய்டுமா?வைரலாகும் வாட்ஸ்அப் ஆடியோ



Click it and Unblock the Notifications