எலான் மஸ்க் டிவிட்டரைக் கைப்பற்றிய நாளில் இருந்து பல பிரச்சனைகளைச் சந்தித்து வருகிறார்.
குறிப்பாக உயர் மட்ட நிர்வாகத்திடம் இருந்து அதிகப்படியான நெருக்கடி வரும் என்று முன்பே கணித்த நிலையில் முதல் நாளிலேயே சிஇஓ பராக் அகர்வால் முதல் பலரை பணிநீக்கம் செய்தார்.
இந்த நிலையில் டிவிட்டர் செயல்பாடுகள் பிடிக்காத காரணத்தால் டிவிட்டர் நிறுவனத்தின் இணை நிறுவனர்களில் ஒருவரான பிஸ் ஸ்டோன், எலான் மஸ்க் நிறுவனத்தைக் கையகப்படுத்தியதிலிருந்து மஸ்டோடன் என்னும் டிவிட்டரின் சக போட்டி நிறுவனத்திற்குச் செல்லும் யோசனையுடன் இருந்து வருவதாகக் கூறினார்.
டிவிட்டர்
டிவிட்டர் நிறுவனம் மார்ச் 2006 இல் ஜாக் டோர்சி, நோவா கிளாஸ், பிஸ் ஸ்டோன் மற்றும் இவான் வில்லியம்ஸ் ஆகியோரால் நிறுவப்பட்டது. நீண்ட காலமாக டிவிட்டர் லாபம் பெறாமல் தொடர்ந்து நஷ்டத்தை மட்டுமே பதிவு செய்து வந்த நிலையிலும், டிவிட்டர் தளத்தில் பெரும் மாற்றம் உருவாக்க வேண்டும் என அறிவித்து டிவிட்டர் நிர்வாகத்திற்குள் நுழையத் திட்டமிட்டார் எலான் மஸ்க்.
44 பில்லியன் டாலர்
ஆனால் பெரும் போராட்டத்திற்குப் பின்பு டிவிட்டரை மொத்தமாக எலான் மஸ்க் சுமார் 44 பில்லியன் டாலருக்கு வாங்கினார். இதனால் மொத்த நிர்வாகம், பங்குகள், அதிகாரம் எனச் சகலமும் எலான் மஸ் கட்டுப்பாட்டிற்கு வந்தது. எலான் மஸ்க் நிர்வாகத்தின் கீழ் பெரும் மாற்றங்கள் நடந்து வருகிறது.
பிஸ் ஸ்டோன்
இந்த நிலையில் டிவிட்டர் நிறுவனத்தின் சக நிறுவனர்களில் ஒருவரான பிஸ் ஸ்டோன் ஒரு பேட்டியில், டிவிட்டர் முன்பு போல் தற்போது இல்லை, தனக்கு விருப்பம் இல்லாத வகையில் இருப்பதாகத் தெரிவித்தார்.
பேட்டி
நான் டிவிட்டரை சரியாகப் பயன்படுத்துகிறேனா இல்லையா என்பது தெரியவில்லை, டிவிட்டர் தளத்தின் மீதான அனுபவம் எனக்கு மிகவும் மோசமாகவே உள்ளது. நான் பாலோ செய்யும் நபர்களின் பதிவுகள் வருவது இல்லை, இல்லையெனில் நான் பாலோ செய்பவர்கள் டிவீட் செய்வது இல்லையா என்பதும் தெரியவில்லை என இந்தப் பேட்டியில் தெரிவித்தார்.
Mastodon செல்ல முடிவு
இந்த நிலையில் பிஸ் ஸ்டோன் டிவிட்டரை விட்டு அதன் சக போட்டி நிறுவனமான Mastodon-க்கு பயன்படுத்தவும், செக் செய்தும் வருவதாகத் தெரிவித்தார். இதேபோல் அவ்வப்போது அதிர்ச்சி அளிக்கும் Twitter Files குறித்து எலான் மஸ்க்-ஐ கடுமையாக விமர்சனம் செய்தார்.
மாற்றங்கள்
எலான் மஸ்க் டிவிட்டரை கைப்பற்றிய நாளில் இருந்து பல மாற்றங்கள் நடந்து வருகிறது, ஆனால் இந்த ஒரு மாற்றம் மட்டும் எலான் மஸ்க்-கிற்குக் கடுப்பு ஏற்றி வருகிறது என்றால் மிகையில்லை.
Mastodon செயல்
எலான் மஸ்க டிவிட்டர் மூலம் பேஸ்புக், இன்ஸ்டா, ஸ்னாப்சாட், யூடியூப், டிக்டாக் வர்த்தகம், வாடிக்கையாளர்களைப் பெற மாஸ்டர் பிளான் போட்டு வரும் நிலையில், Mastodon மட்டும் டிவிட்டர் நிறுவனத்தில் இருந்தே அதிகப்படியான வாடிக்கையாளர்களை ஈர்த்து வருகிறது.
புதிய தளம்
எலான் மஸ் கைப்பற்றிய பின் டிவிட்டரில் இருந்து குறிப்பிடத்தக்க அளவிலான யூசர்கள் Mastodon தளத்திற்குச் சென்றுள்ளதாகக் கூறப்படுகிறது. Mastodon நிறுவனம் தன்னை federated social network என அடையாளப்படுத்திக் கொள்கிறது.
Open Source தளம்
Mastodon தளம் முற்றிலும் டிவிட்டர் போலவே இருப்பதால் முதல் முறை பார்க்கும் போது இரண்டும் பெரிய அளவில் வித்தியாசம் இல்லாதது வெளிப்படையாகத் தெரிகிறது. இதேபோல் Mastodon மொத்தமாக Open Source மூலம் இயங்குகிறது.
தரவுகள் சேமிப்பு
ஆனால் Mastodon தளத்தில் ஒரு ஸ்பெஷலான விஷயம் உள்ளது லாக்இன் செய்யும் போதே உங்கள் தரவுகளைச் சேமிக்கும் சர்வர்களைத் தேர்வு செய்யும் வாய்ப்புக் கிடைக்கிறது, ஒவ்வொரு யூசரும் தனக்கான விதிகளைத் தானே உருவாக்கிக்கொள்ள முடியும் moderation விதிகள் உட்பட.


Click it and Unblock the Notifications