உலகின் 2வது பெரிய பணக்காரராக இருக்கும் எலான் மஸ்க் தலைமையில் அதிரடியான மாற்றங்களை எதிர்கொண்டு வரும் ட்விட்டர் நிறுவனம் இந்தியாவில் இருக்கும் மூன்று அலுவலகங்களில் இரண்டை மூடிவிட்டு, அதன் ஊழியர்களை வீட்டிலிருந்து வேலை செய்ய உத்தரவிட்டு உள்ளது.
எலான் மஸ்க் டிவிட்டரை லாபகரமாக மாற்ற வேண்டும் என்று இலக்குடன் கடுமையான, இதேநேரம் அதிரடியான முடிவுகளை எடுத்து வரும் வேளையில் இந்நிறுவனத்தில் செலவுகளைக் குறைக்கும் விதமாக 2 அலுவலகங்களை மூடிவிட்டு, ஊழியர்களை வீட்டில் இருந்து பணியாற்ற உத்தரவிடப்பட்டு உள்ளது.
எலான் மஸ்க் முடிவுகளுக்கு டிவிட்டர் ஊழியர்கள் எவ்விதமான கருத்தும் தெரிவிக்க முடியாத அளவிற்கு கடுமையான டெட்லைன் உடன் பெரிய இலக்குகளை கொடுத்துள்ளார். ஆனால் டெக் ஊழியர்கள், தலைவர்கள் மத்தியில் கடுமையான விமர்சனம் செய்யப்பட்டு வருகிறது.
டெக் நிறுவனம்
பொதுவாக டெக் நிறுவனம் என்றால், அதிலும் குறிப்பாக உலகளாவிய டெக் நிறுவனம் என்றால் இந்தியாவில் அதிகளவிலான ஊழியர்களை கொண்டு இயங்குவது வழக்கம், ஆனால் எலான் மஸ்க் டிவிட்டரை கைப்பற்றிய நாளில் இருந்து இந்திய டிவிட்டர் ஊழியர்களை அடுத்தடுத்து பணிநீக்கம் செய்து வருகிறார்.
டிவிட்டர் இந்தியா
இந்தியாவில் சுமார் 200-க்கும் மேற்பட்ட ஊழியர்களை பணிநீக்கம் செய்து மொத்த ஊழியர்களில் 90 சதவீதத்திற்கும் அதிகமானவர்களை பணிநீக்கம் செய்துள்ளது எலான் மஸ்க் தலைமையிலான ட்விட்டர். இதனால் கடந்த ஆண்டு இந்திய டிவிட்டர் கடுமையான மாற்றங்களை எதிர்கொண்டது குறிப்பிடத்தக்கது.
எலான் மஸ்க்
எலான் மஸ்க்-ன் டிவிட்டர் நிர்வாகத்தின் முடிவுகள் படி இந்தியாவில் டெல்லி மற்றும் மும்பை நகரங்களில் அமைந்திருக்கும் இரு அலுவலகங்களையும் மூடப்பட உள்ளது. இதேபோல் பெங்களூரில் இருக்கும் அலுவலகம் தொடர்ந்து இயங்கும்.
டெல்லி, மும்பை, பெங்களூர்
டெல்லி மற்றும் மும்பை அலுவலகங்களை மூடிவிட்டு பெங்களூர் அலுவலகத்தை மட்டும் இயக்க முக்கிய காரணம், பெங்களூர் தொழில்நுட்ப மையத்தில் பெரும்பாலும் பொறியாளர்களைக் கொண்ட அலுவலகம் என்பதால் தொடர்ந்து இயக்குகிறது.
மெட்டா முதல் கூகுள் வரை
மெட்டா முதல் கூகுள் வரையில் அனைத்து முன்னணி டெக் நிறுவனங்களிலும் இந்திய வர்த்தக சந்தை மிகவும் முக்கியமானதாக இருக்கும் காரணத்தால் தொடர்ந்து அதிக ஊழியர்களையும், அலுவலகத்தையும் கொண்டு இயங்கி வருகிறது. ஆனால் எலான் மஸ்க்-ன் டிவிட்டர் தலைகீழாக இயங்கி வருகிறது, இதன் மூலம் இந்திய சந்தைக்கு அதிக முக்கியதுவம் அளிக்கப்படவில்லை என்பது உறுதியாகியுள்ளது.
வருமானம்
டிவிட்டர் நிறுவனத்தின் வருமானத்தை அதிகரிக்க விளம்பரத்தை மட்டுமே நம்பியிருக்கக் கூடாது என்பதற்காக வெரிபிகேஷன் மூலம் பெரும் தொகையைச் சம்பாதித்து வருகிறது. தனிநபர்களுக்கு ஒரு கட்டணம், நிறுவனங்களுக்கு ஒரு கட்டணம் எனப் பல வகையில் வருமானத்தை ஈட்டி வருகிறது.
ஏலம்
இதை தாண்டி ஊழியர்கள் எண்ணிக்கையைக் குறைத்தது மூலம் அதிகளவிலான செலவுகளை சேமித்ததைத் தாண்டி டிவிட்டர் அலுவலகத்தில் இருக்கும் பொருட்கள் பலவற்றை விற்பனை செய்து அதன் வாயிலாகவும் பணம் திரட்டப்பட்டு உள்ளது.
எலான் மஸ்க்
டிவிட்டரை வாங்குவதற்கு ஆர்வம் காட்டிய எலான் மஸ்க் முழுமையாகத் தெரியாமல் 44 பில்லியன் டாலருக்கு வாங்குவதாக அறிவித்துப் பின்வாங்கினார். இந்த நிலையில் டிவிட்டர் எலான் மஸ்க் மீது WLRK நிறுவனத்தின் வாயிலாக வழக்கு தொடுத்தது. இதன் வாயிலாக எலான் மஸ்க் 44 பில்லியன் டாலர் கொடுத்து மொத்த நிறுவனத்தையும் வாங்கினார்.


Click it and Unblock the Notifications