டிவிட்டர் சில மாதங்களுக்கு முன்பு தொடுத்த வழக்கின் விசாரணையில் எலான் மஸ்க் மனம் மாறி டிவிட்டர்-ஐ கைப்பற்ற விரும்புவதாக அறிவித்தார்.
இதைத் தொடர்ந்து டெலவேர் நீதிமன்றம் அக்டோபர் 28 தேதிக்குள் கைப்பற்றியாக வேண்டும் என உத்தரவிட்டது.
எலான் மஸ்க் ஏற்கனவே டிவிட்டரை கைப்பற்ற போதுமான பணத்தைத் தயாராக வைத்திருந்த நிலையில் ஒரு நாள் முன்னதாகவே டிவிட்டர் பங்குகளை மொத்தமாக 44 பில்லியன் டாலர் தொகைக்குக் கைப்பற்றியுள்ளார்.
ஜனவரி 31
ஜனவரி 31 - எலான் மஸ்க் ரகசியமாகத் தினமும் டிவிட்டர் பங்குகளை வாங்கத் துவங்கினார்
மார்ச் 26 - டிவிட்டருக்குப் போட்டியாக ஒரு தளத்தை உருவாக்க வேண்டுமா..? டிவிட்டர் ஜனநாயகத்தைச் சீரழிக்கிறது என ப்ரீ ஸ்பீச் குறித்து டிவீட் செய்தார்
மார்ச் 27 - டிவிட்டர் நிர்வாகத்திடம் எலான் மஸ்க் தன்னுடைய பங்கு இருப்பைப் பற்றித் தெரிவித்து, நிர்வாகக் குழுவில் இணைவது பற்றிப் பேச்சுவார்த்தை நடத்தினர்
ஏப்ரல் 4
ஏப்ரல் 4 - எலான் மஸ்க் டிவிட்டர் நிறுவனத்தின் 9 சதவீத பங்குகளை 3 பில்லியன் டாலருக்கு வாங்கியுள்ள செய்தி பங்குச்சந்தை அறிக்கை மூலம் வெளிச்சத்திற்கு வந்தது
ஏப்ரல் 5 - டிவிட்டர் நிர்வாகம் எலான் மஸ்க்-கிற்கு நிர்வாகக் குழுவில் இடம் கொடுத்தது, ஆனால் 14.9 சதவீத பங்குகளுக்கு மேல் வாங்கக் கூடாது எனக் கண்டிஷன் வைத்தது.
ஏப்ரல் 9 - எலான் மஸ்க்-ன் Is Twitter dying? டிவீட் மூலம் பராக் அகர்வால் - மஸ்க் மத்தியிலான நட்பு உடைந்தது
ஏப்ரல் 11
ஏப்ரல் 11 - டிவிட்டர் நிர்வாகக் குழுவில் சேர மஸ்க மறுப்பு
ஏப்ரல் 14 - எலான் மஸ்க் மொத்த நிறுவனத்தையும் 44 பில்லியன் டாலருக்கு வாங்கும் திட்டத்தை அறிவித்தார்
ஏப்ரல் 15 - டிவிட்டர் நிர்வாகக் குழு எலான் மஸ்க் வருவதைத் தடுக்க "poison pill" திட்டத்தைக் கொண்டு வந்தது
ஏப்ரல் 21
ஏப்ரல் 21 - டிவிட்டர் நிறுவனத்தை மொத்தமாக வாங்க 46.5 பில்லியன் டாலர் அளவிலான கடனும், பணமும் தயார் என அறிவித்தார்
ஏப்ரல் 29 - எலான் மஸ்க் 8.5 பில்லியன் டாலர் டெஸ்லா பங்குகளை விற்பனை செய்தார்.
மே 5 - ஆரக்கிள் லேரி எலிசன் மற்றும் பலரிடம் 7 பில்லியன் டாலர் கடனை திரட்டினார் எலான் மஸ்க்
மே 10
மே 10 - டிவிட்டரை நான் வாங்கிவிட்டால் முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் மீண்டும் டிவிட்டருக்கு வர வாய்ப்பு உள்ளது என எலான் மஸ்க் தெரிவித்தார்
மே 13 - டிவிட்டர் வாங்கும் திட்டத்தைத் தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக எலான் மஸ்க் அறிவித்தார்
ஜூம் 6 - டிவிட்டர் போலி மற்றும் Spam கணக்குகளின் விபரத்தைக் கேட்டார் எலான் மஸ்க்
ஜூலை 8
ஜூலை 8 - டிவிட்டர் போலி மற்றும் Spam கணக்குகளின் விபரத்தை அளிக்காத காரணத்தால் டிவிட்டர் நிறுவனத்தை வாங்கும் திட்டத்தைக் கைவிடுவதாக அறிவித்தார்
ஜூலை 12 - எலான் மஸ்க் எதிராக டிவிட்டர் வழக்குத் தொடுத்தது
ஆகஸ்ட் 23 - டிவிட்டர் நிறுவனத்தின் முன்னாள் பாதுகாப்பு அதிகாரி டிவிட்டர் நிர்வாகம் மோசமாகச் சைபர் செக்யூரிட்டி வைத்திருந்த காரணத்தால் போலி கணக்குகளை நீக்க முடியவில்லை நீதிமன்றத்தில் கூறப்பட்டது.
அக்டோபர் 5
அக்டோபர் 5 - எலான் மஸ்க் மனம் மாறி டிவிட்டரை 44 பில்லியன் டாலருக்கு கைப்பற்ற ஒப்புதல் அளித்தார்
அக்டோபர் 6 - டெலாவேர் நீதிமன்றம் எலான் மஸ்க்-கிற்கு அக்டோபர் 28-க்குள் டிவிட்டரை கைப்பற்றியாக வேண்டும் என உத்தரவிட்டது.
அக்டோபர் 20 - வாஷிங்டன் போஸ்ட் பத்திரிக்கையில் டிவிட்டரில் எலான் மஸ்க் 75 சதவீத ஊழியர்களை எலான் மஸ்க் பணிநீக்கம் செய்ய உள்ளார் எனச் செய்தி வெளியானது
அக்டோபர் 27
அக்டோபர் 27 - டிவிட்டர் தலைமை அலுவலகத்திற்குள் சின்க் உடன் நுழைந்த எலான் மஸ்க்
அக்டோபர் 27
அக்டோபர் 27 - டிவிட்டர் நிறுவனத்தின் கேட்டீனில் எலான் மஸ்க்
அக்டோபர் 27
அக்டோபர் 27 - டிவிட்டர் நிறுவனத்தை மொத்தமாகக் கைப்பற்றினார் எலான் மஸ்க்
அக்டோபர் 27 - பறவைக்குச் சுதந்திரம் கிடைத்தது - எலான் மஸ்க் டிவீட்
More From GoodReturns

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!



Click it and Unblock the Notifications