ட்விட்டரில் மிகப்பெரிய அளவில் பணி நீக்கம் செய்து வரப்பட்டு வரும் நிலையில், அவர்களில் முக்கிய உயர் அதிகாரிகள் உள்பட பலரும் பாரபட்சமின்றி பணி நீக்கம் செய்யப்பட்டு வருகின்றனர்.
தனக்கு வேறு வழியே இல்லை. தினசரி 4 மில்லியன் டாலர் நஷ்டமாகவாதாகவும், பணி நீக்கத்திற்கு பின் ட்விட்டரின் புதிய தலைவர் எலான் மஸ்க் விளக்கம் கொடுத்துள்ளார்.
ட்விட்டரின் இந்த பணி நீக்க நடவடிக்கையில் புற்று நோயால் பாதிக்கப்பட்ட தனது மகனுக்காக விடுமுறை எடுத்து சென்ற ஊழியரையும் (ஹெர்னான் அல்வாரெஸ் லோயிசிகா) பணி நீக்கம் செய்துள்ளது ட்விட்டர் நிர்வாகம்.
பல அதிரடியான நடவடிக்கை
இது குறித்து அந்த ஊழியர் தனது லிங்க்ட் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். எலான் மஸ்க் ட்விட்டரை வாங்கியதில் இருந்தே பற்பல நடவடிக்கைகள் கடினமாக எடுக்கப்பட்டு வருகின்றார். குறிப்பாக பணி நீக்கம் உள்ளிட்ட பல்வேறு செலவு குறைப்பு நடவடிக்கையினையும் எடுத்து வருகின்றார். அதோடு அதன் வருவாயினை அதிகரிக்கும் விதமாக ப்ளூடிக்கிற்கும் மாதம் 8 டாலர் வசூலிக்கும் என்று மஸ்க் தெரிவித்துள்ளார்.
பெரும் அதிர்ச்சி
எனினும் எலான் மஸ்கின் இந்த பணி நீக்க நடவடிக்கையில் அட்லாண்டா பகுதியினை சேர்தவரான ஊழியரும், அதுவும் புற்று நோயால் பாதிக்கப்பட்ட மகனுக்காக விடுமுறை எடுத்திருந்த சமயத்தில், பணி நீக்கம் செய்திருப்பது பெரும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.
இதுவும் கடந்துபோகும்
பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியர்கள் தன்னுடன் பணிபுரிந்த நண்பர்களுக்கு, எனது நேரத்தினை விரும்பமான நேரமாக மாற்றியதற்கான காரணமே நீங்கள் தான். புதிய ட்விட்டர் என மிகவும் தேவைப்படும் நேரத்தில் இப்படி என்னை தாழ்த்தியுள்ளது. புற்று நோய்க்கு எதிராக போராடி வரும் எனது மகனுக்கு துணையாக இருக்க விடுமுறை எடுத்து சென்ற நேரத்தில் இத்தகைய நெருக்கடி வந்துள்ளது. வழக்கம்போல இதையும் கடந்து செல்வோம் என நான் உறுதியாக நம்புகிறேன், அதனை நாம் எல்லோரும் பலமுறை செய்துள்ளோம்.
அற்புதமான மனிதர்கள்
எனது நண்பர்களுக்கு மீண்டும் நன்றி கூறிக் கொள்கிறேன். நீங்கள் அனைவருமே அற்புதமான மனிதர்கள், திறமையான வல்லுனர்கள். அடுத்த வாய்ப்பினை எதிர்பார்க்கிறோம். மிக முக்கியமாக மெடிக்கல் இன்சூரன்ஸ் பெறுவோம் என நம்புகிறோம் என தெரிவித்துள்ளார்.
எப்போது இணைந்தார்
ட்விட்டரில் இருந்து இத்தகைய மோசமான காலகட்டத்தில் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ள பொறியாளர் கடந்த ஜனவரி 2021ல், ட்விட்டரில் இணைந்துள்ளதை லிங்க்ட் இன் மூலம் அறிய முடிகிறது.
ட்விட்டரில் லோயிசிகா மட்டும் அல்ல, இன்னும் பலரும் கடினமான காலகட்டத்தில் இருக்கும் நிலையில் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதை, சமூக வலைதளங்கள் வாயிலாக அறிய முடிகிறது.
50% பாதிப்பா?
ட்விட்டரில் இதுப்போன்ற ஏராளம் ஆன பணி நீக்கம் என் பது உள்ளது. ட்விட்டர் நிறுவனத்தில் பணியாற்றிய மொத்தம் 7500 பேரில், சுமார் 50% பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இதன் மூலம் 3,000 மேற்பட்ட ஊழியர்களுக்கு பணி நீக்கம் செய்யப்பட்டிருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
வெளிநாடு வாழ் இந்தியர்களும் பாதிப்பு
ட்விட்டரில் ஹெச் 1 பபி விசா, எல் 1பி விசா மூலம் பணியாற்றி வரும் ஊழியர்களும் இந்த பணி நீக்கத்தில் உண்டு. இவர்களுக்கு 60 நாட்கள் காலக்கெடு விதிக்கப்பட்டுள்ள நிலையில், 60 நாட்களுக்கு மாற்று வேலையினை தேட வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். இல்லையெனில் அவர்கள் தங்களது குடியுரிமை பறிபோகும் வாய்ப்பு உள்ளது.
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications