எலான் மஸ்க் பெரிய அளவில் வளர்ச்சி அடைந்த பின்னர்ப் பெரிய அளவில் ரிஸ்க் எடுத்துச் செய்த காரியம் என்றால் 46.5 பில்லியன் டாலர் செலவில் டிவிட்டரை கைப்பற்றியது தான்.
எலான் மஸ்க் டிவிட்டருக்காகப் பெரும் தொகையை வங்கியில் கடனாக வாங்கியது மட்டும் அல்லாமல் தன்னுடைய நண்பர்கள், முதலீட்டு நிறுவனங்கள் ஆகியோரிடமும் கடன் வாங்கியுள்ளார்.
அனைத்திற்கும் மேலாக எலான் மஸ்க் தனது கட்டுப்பாட்டில் இருந்த டெஸ்லா பங்குகளில் பெரும் பகுதியை விற்பனை செய்தார்.
டிவிட்டர்
இப்படிப் போராடி கைப்பற்றிய நிறுவனத்தைக் குறுகிய காலகட்டத்தில் மிகப்பெரிய லாபத்தையும், வருமானத்தையும் ஈட்டும் நிறுவனமாக மாற்ற வேண்டும் என்ற ஒற்றை இலக்குடன் டிவிட்டர் நிறுவனத்தை முழுமையாக மறுசீரமைப்புச் செய்யச் சிறப்புக் குழு-வை தேர்வு செய்துள்ளார்.
50 ஸ்பெஷல் ஊழியர்கள்
இதேபோல் டிவிட்டர் நிறுவனத்தின் அனைத்து மட்டத்திலும் மாற்றங்களையும் மறுசீரமைப்பும் செய்ய 50க்கும் அதிகமான ஊழியர்களை டெஸ்லா, ஸ்பேஸ்எக்ஸ், போரிங் கம்பெனி ஆகியவற்றில் இருந்து அழைத்துள்ளார்.
எலான் மஸ்க்
டிவிட்டர் நிறுவனத்தில் எத்தகைய மாற்றத்தைச் செய்ய வேண்டும் என்பதை ஏற்கனவே முடிவு செய்த எலான் மஸ்க் தலைமையிலான குழு முதல் இரண்டு நாளிலேயே அனைத்துப் பிரிவு ஊழியர்களுக்கும் அடுத்த சில நாட்களிலேயே செய்து முடிக்க வேண்டிய முக்கியமான பணிகளுக்கு டெட்லைன் கொடுக்கப்பட்டு உள்ளது.
கடுமையான டெட்லைன்
இந்த டெட்லைன் அனைத்தும் டிவிட்டர் ஊழியர்கள் இதுவரையில் பார்த்திடாத ஒரு கடுமையான டெட்லைன் ஆகும். அதாவது ஒரு மாதத்தில் முடிக்க வேண்டிய பணிகளை ஒரு சில நாட்களில் முடிக்க வேண்டும் என்ற தீவிரமான இலக்கு கொடுக்கப்பட்டு உள்ளது.
தினமும் 12 மணி நேரமும், வாரம் 7 நாள் பணி
இதை அடைய வேண்டும் என்றால் டிவிட்டர் ஊழியர்கள் தினமும் 12 மணி நேரமும், வாரத்தில் 7 நாளும் பணியாற்ற வேண்டிய கட்டாயம் உருவாகியுள்ளது. இதனால் பெரும்பாலான ஊழியர்கள், குறிப்பாக மேனேஜர் பிரிவில் இருக்கும் ஊழியர்கள் பாய், தலைகாணி உடன் ஆபீஸ் செல்லும் நிலை உருவாகியுள்ளது.
எஸ்தர் க்ராஃபோர்டு
இந்த நிலையில் எஸ்தர் க்ராஃபோர்டு என்பவர் டிவிட்டர் அலுவலகத்திலேயே தூங்கும் புகைப்படத்தை, Twitter Spaces பிரிவின் ப்ராடெக்ட் மேனேஜர் எவன் ஜோன்ஸ் டிவிட்டரில் 'எலான் மஸ்க் தலைமையிலான ட்விட்டரில் உங்கள் மேனேஜரிடம் இருந்து உங்களுக்கு ஏதேனும் தேவைப்பட்டால்' என்று கூறி போட்டோ-வை பகிர்ந்துள்ளனர்.
டிவிட்டர் புகைப்படம்
இதைத் தொடர்ந்து இந்தப் புகைப்படத்தைப் பார்த்த எஸ்தர் க்ராஃபோர்டு எப்போது உங்கள் அணி டெட்லைனில் பணியை முடிக்க விடிய விடிய பணியாற்றும் போது நீங்கள் அலுவலகத்திலேயே துவங்கலாம் எனத் தெரிவித்துள்ளார்.
தியாகம்
டிவிட்டரில் நிலவும் இந்தக் கடுமையான பணி சூழ்நிலையில் சிலர் தங்கள் நம்பிக்கையை இழக்கிறனர்.நான் விளக்குகிறேன்: கடினமான காரியங்களைச் செய்யும் போது சில தியாகம் தேவைப்படுகிறது (நேரம், ஆற்றல் போன்றவை).
ஆதரவு
என்னுடைய அணியில் உலகம் முழுவதிலும் இருந்து உறுப்பினர்கள் உள்ளனர், புதிதாக ஒன்றை உருவாக்குவதற்குக் கடுமையாக முயற்சி செய்கிறார்கள். அவர்களுக்கு ஆதரவாக இருப்பது என்னுடைய முக்கியமான கடமை எனத் தெரிவித்துள்ளார் எஸ்தர் க்ராஃபோர்டு.
எஸ்தர் க்ராஃபோர்டு கணவர்
எஸ்தர் க்ராஃபோர்டு-ன் இந்தப் பதிவுக்குப் பலர் உங்கள் குடும்பம், பிள்ளைகள் பணியை விட முக்கியம் என மெசேஜ் செய்து வந்த நிலையில் எஸ்தர் க்ராஃபோர்டு-வின் கணவர் பாப் க்ராஃபோர்டு எங்கள் 3 பிள்ளைகளும் எஸ்தர்-ஐ ரோல் மாடலாகப் பார்க்கிறார்கள், என்னை எப்படி மனைவிக்காக ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்பதைப் பார்த்துக் கற்றுக்கொள்கிறார்கள் என அதே பதிவில் டிவீட் செய்தார்
ஸ்ரீராம் கிருஷ்ணன் கவனிப்பு
அனைத்தையும் விட முக்கியமானது தற்போது எலான் மஸ்க் உடன் டிவிட்டரை மறுசீரமைப்பு செய்யும் தமிழரான ஸ்ரீராம் கிருஷ்ணன், எஸ்தர் க்ராஃபோர்டு செய்யும் பணியைப் பாராட்டியுள்ளார், மேலும் இந்தப் பதிவில் டிவிட்டர் NLP பிரிவில் பணியாற்றும் ஆஜித் கெர்வால் என்பவரை ஸ்ரீராம் டேக் செய்துள்ளார்.


Click it and Unblock the Notifications