எலான் மஸ்க் கட்டுப்பாட்டுக்குள் வந்த டிவிட்டர் நிறுவனத்தில் நிர்வாகக் குழுவை மொத்தமாக நீக்கப்பட்டு உள்ள நிலையில், ஒவ்வொரு பிரிவுகளையும் தனித்தனியாகக் கவனிக்கவும், மறுசீரமைப்பு செய்யவும் புதிய குழுவை நியமித்துள்ளார்.
இந்தப் புதிய குழுவில் தமிழரான ஸ்ரீராம் கிருஷ்ணன் முக்கியப் பங்கு வகிக்கிறார், எலான் மஸ்க் முதல் நாளில் இருந்த டிவிட்டரை தனது பிற நிறுவனத்தின் நிர்வாக ஸ்டைல்-க்கு மாற்ற வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார்.
இதற்காக ஆரம்பம் முதல் கடுமையான கட்டுப்பாடுகள் உடன் இயங்க துவங்கியுள்ளார் எலான் மஸ்க், இது அனைத்தும் நிறுவனத்தின் வளர்ச்சிக்குச் சிறப்பானதாக இருந்தாலும் ஊழியர்களுக்குப் பெரும் நெருக்கடியாக மாறியுள்ளது.
டிவிட்டர்
டிவிட்டர் நிறுவனத்தை 46.5 பில்லியன் டாலர் தொகைக்கு மொத்தமாகக் கைப்பற்றியுள்ள காரணத்தால் எலான் மஸ்க்-ஐ கேள்வி கேட்க யாரும் இல்லாத நிலை உருவாகியுள்ளது, இதனால் அல்டிமேட் அத்தாரிட்டி மஸ்க் கையில் வந்துள்ளது.
விளம்பர வருவாய் மற்றும் வர்த்தகம்
இதேவேளையில் டிவிட்டர் நிறுவனத்தை வாங்கும் போது பலரிடம் கடன் பெற்று வாங்கியுள்ளார், இதேபோல் விளம்பர வருவாய் மற்றும் வர்த்தகதத்தைக் குறையாமல் பார்த்துக்கொள்ள வேண்டிய கட்டாயம் உள்ளது.
எலான் மஸ்க்
இதேபோல் புதிய வருவாய் ஈட்டும் வழிகளைக் கண்டறிந்தால் மட்டுமே டிவிட்டரை காப்பாற்ற முடியும் என்ற நெருக்கடி எலான் மஸ்க்கிற்கு உள்ளது. இந்த நிலையில் எலான் மஸ்க் டிவிட்டரை விரைவாக வளர்ச்சிப் பாதைக்குக் கொண்டு வர வேண்டும் என்பதற்காக மிகவும் குறைந்த அளவிலான டெட்லைன் கொடுத்து உள்ளார்.
12 மணிநேரம், வாரத்தில் 7 நாள் வேலை
இதனால் டிவிட்டர் நிறுவனத்தில் இருக்கும் மேனேஜர்கள் தங்களது ஊழியர்களைத் தினமும் குறைந்தது 12 மணிநேரம் மற்றும் வாரத்தில் 7 நாளும் பணியாற்ற வேண்டும் என்று உத்தரவிடப்பட்டு உள்ளது. இந்தக் கடுமையான வேலை நேரம் இல்லையென்றால் எலான் மஸ்க்-ன் டெட்லைன்-யை கட்டாயம் எட்ட முடியாது. இதனால் அனைத்து ஊழியர்களுக்கும் நீண்ட நேரம் பணியாற்ற வேண்டிய கட்டாயம் உருவாகியுள்ளது என CNBC தெரிவித்துள்ளது.
கண்டிஷன்
இதேபோல் ஊழியர் ஓவர்டைம் சம்பளம், comp-off அல்லது வேலைக்கு உத்தரவாதம் போன்ற எவ்விதமான கேள்வியும் கேட்காமல் பணியாற்றவும் டிவிட்டர் ஊழியர்களுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது. மேலும் பெரும்பாலான டிவிட்டர் இன்ஜினியர்களுக்கு நவம்பர் மாத துவக்கத்தில் டெட்லைன் கொடுக்கப்பட்டு உள்ளது, இதை எட்டாத பட்சத்தில் ஊழியர்கள் தங்களது பணியை இலக்க நேரிடம் நிலை உருவாகியுள்ளது.
50 சதவீத ஊழியர்களைப் பணிநீக்கம்
மேலும் எலான் மஸ்க் நேரடியாகவும், தனது முக்கிய நிர்வாகக் குழு உறுப்பினர்கள் வாயிலாக நவம்பர் மாத டெட்லைன்-ஐ எட்டவில்லை என்றால் ஒவ்வொரு அணியிலும் குறைந்தபட்சம் சுமார் 50 சதவீத ஊழியர்களைப் பணிநீக்கம் செய்யப்படும் என்ற எச்சரிக்கையும் விடுக்கப்பட்டு உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
உயர் அதிகாரிகள் ராஜினாமா
இந்தக் கடுமையான நெருக்கடியை ஏற்க முடியாமல் வெள்ளிக்கிழமைக்குப் பின்பு டிவிட்டர் நிறுவனத்தின் தலைமை மக்கள் மற்றும் பன்முகத்தன்மை அதிகாரி தலானா பிராண்ட், கோர் டெக்னாலஜிஸ் பிரிவின் பொது மேலாளர் நிக் கால்டுவெல், தலைமை மார்க்கெட்டிங் அதிகாரி லெஸ்லி பெர்லாண்ட், டிவிட்டரின் ப்ராடெக்ட் தலைவர் ஜே சல்லிவன் மற்றும் உலகளாவிய விற்பனை பிரிவின் துணைத் தலைவர் ஜீன்-பிலிப் மஹூ ஆகியோரும் தங்களது பதவியை ராஜினாமா செய்துள்ளனர்.
More From GoodReturns

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?



Click it and Unblock the Notifications