வேலைநீக்கத்திற்கு முன்பே ராஜினாமா.. ட்விட்டருக்கு குட்பை சொல்லும் ஊழியர்கள்!

உலகின் முன்னணி சமூக வலைதளமான ட்விட்டர் நிறுவனத்தை சமீபத்தில் உலகின் நம்பர் ஒன் கோடீஸ்வரர் எலான் மஸ்க் வாங்கினார் என்பதை பார்த்தோம்.
எலான் மஸ்க் அவர்கள் ட்விட்டரை வாங்கிய பிறகு அந்நிறுவனத்தின் சி.இ.ஓ உள்பட முக்கிய நிர்வாகிகளை அதிரடியாக பணி நீக்கம் செய்தார்.

இந்த நிலையில் தற்போது பெரும்பாலான ட்விட்டர் ஊழியர்களை பணி நீக்கம் செய்ய எலான் மஸ்க் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

 ட்விட்டர் நிறுவனம்

ட்விட்டர் நிறுவனம்

உலகின் முன்னணி சமூக வலைத்தளமான ட்விட்டர் நிறுவனத்தை 44 பில்லியன் கொடுத்து எலான் மஸ்க் வாங்கினார் என்பதும் அதன் பிறகு ஊழியர்கள் தங்கள் எதிர்காலம் குறித்து நிச்சயமற்ற நிலையில் இருக்கிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. சி.இ.ஓ உள்பட முக்கிய அதிகாரிகளை அதிரடியாக நீக்கிய எலான் மஸ்க் அவர்கள் ட்விட்டரில் பணிபுரியும் ஊழியர்களை நீக்குவதற்கு வெகுநாட்களாக ஆகாது என்று கூறப்பட்டது.

வேலைநீக்கம்

வேலைநீக்கம்

இந்த நிலையில் தற்போது சுமார் 50% ஊழியர்களை வீட்டுக்கு அனுப்ப எலான் மஸ்க் திட்டமிட்டுள்ளதாகவும் இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது. இந்த நிலையில் டுவிட்டர் ஊழியர்கள் தங்கள் வேலை நிச்சயமற்றதாக இருப்பதால் இதில் தொடர்ந்து வேலை செய்ய தாங்கள் விரும்பவில்லை என்றும் எங்களுக்கு பணிநீக்க உத்தரவு வரும் முன்பே ராஜினாமா செய்ய திட்டமிட்டுள்ளோம் என்றும் கூறியுள்ளனர்.

உழைப்பு

உழைப்பு

ட்விட்டரை நாங்கள் மிகவும் நேசித்தோம் என்றும் உலகின் நம்பர் ஒன் சமூக வலைத்தளமாக ஆக்குவதற்கு நாங்கள் செய்த உழைப்புதான் காரணம் என்றும் ஆனால் அதே நேரத்தில் தற்போது அதிலிருந்து வெளியேற விரும்புகிறோம் என்றும் முன்னாள் ஊழியர் ஒருவர் தனது ட்விட்டர் பக்கத்தில் டுவிட் செய்துள்ளார். ட்விட்டர் நிறுவனத்தில் இருந்து வெளியேறுவது தங்களுக்கு மிகவும் மன கஷ்டமாக இருந்தாலும் ஒருவித நிச்சயமற்ற தன்மையுடன் வேலை பார்க்க முடியாது என்று பல ஊழியர்கள் கருத்து கூறியுள்ளனர்.

மின்னஞ்சல்

மின்னஞ்சல்

இந்த நிலையில் ட்விட்டர் நிறுவனத்தின் ஊழியர்களை வேலை நீக்கம் செய்வது குறித்த அறிவிப்பு இன்று வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஊழியர்களின் மின்னஞ்சலில் நீங்கள் அலுவலகத்தில் இருந்தால் அல்லது அலுவலகத்திற்கு வந்து கொண்டிருந்தால் தயவு செய்து வீட்டுக்கு திரும்புங்கள் என்ற செய்தி மின்னஞ்சலில் ஒரு சிலருக்கு வந்துள்ளதாக கூறப்படுகிறது.

செலவு குறைப்பு

செலவு குறைப்பு

பணிநீக்கம் செய்யப்பட்டவர்களுக்கு தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் தகவல் அனுப்பப்படும் என்று கூறப்படுவதால் இந்த வேலை நீக்க நடவடிக்கை ஊழியர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. செலவு குறைப்பு நடவடிக்கைக்காக ஊழியர்களை பணி நீக்கம் செய்வது அனைத்து நிறுவனங்களும் செய்யும் நடவடிக்கை தான் என்றாலும் ட்விட்டர் நிறுவனம் செய்யும் வேலை நீக்கம் மனிதாபிமானம் அற்றது என்று பல சமூக ஆர்வலர்கள் தெரிவித்து வருகின்றனர்.

தவிர்க்க முடியாது

தவிர்க்க முடியாது


ஆனால் எலான் மஸ்க், 'ட்விட்டரை லாபகரமாக கொண்டு செல்ல வேண்டுமென்றால் அதிகப்படியான செலவுகளை குறைக்க வேண்டும் என்றும் அதனால் பணிநீக்க நடவடிக்கையை தவிர்க்க முடியாது என்றும் கூறியுள்ளார்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+