திவாலாகும் டிவிட்டர்.. எலான் மஸ்க் பேச்சால் ஊழியர்கள் அதிர்ச்சி..!

உலகின் மிகப்பெரிய பணக்காரராக இருக்கும் எலான் மஸ்க் தனது சொத்து மதிப்பு 200 பில்லியன் டாலருக்குக் கீழ் 14 மாதங்களுக்குப் பின்பு சரிந்தது முக்கிய விஷயமாகப் பார்க்கப்பட்டது.

இந்த நிலையில் எலான் மஸ்க் தலைமையிலான டிவிட்டரின் எதிர்காலம் என்ன..? எப்போது எலான் மஸ்க் சொத்து மதிப்பு டிவிட்டர் மூலம் உயர துவங்கும்..? என்பது போன்ற எதிர்பார்ப்புகள், கேள்விகள் தொடர்ந்து எழுந்து வருகிறது.

இப்படிப்பட்ட சூழ்நிலையில் எலான் மஸ்க்-ன் சமீபத்திய பேச்சு டிவிட்டர் ஊழியர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

எலான் மஸ்க்

எலான் மஸ்க்

அமெரிக்கச் சந்தைக்கு மிகவும் சிறப்பான வர்த்தக நாளாக அமைந்த நிலையில், எலான் மஸ்க் 44 பில்லியன் டாலருக்கு டிவிட்டரை வாங்கிய பின்பு முதல் முறையாக டிவிட்டர் ஊழியர்களிடம் பேசிய எலான் மஸ்க் அனைவரையும் பயமுறுத்தும் நிலையில் பேசியுள்ளார்.

புதிய முயற்சிகள்

புதிய முயற்சிகள்

எலான் மஸ்க் டிவிட்டரை வைத்துப் பல புதிய முயற்சிகளைச் செய்யத் திட்டமிட்டு வரும் நிலையில், இதற்கு ஏற்கனவே கடுமையான எதிர்ப்பு நிலவி வரும் நிலையில் வேறு வழியே இல்லாமல் தான் செய்வது தான் சரி என்ற பாணியில் எலான் மஸ்க் தொடர்ந்து மாற்றங்களைச் செய்து வருகிறார், இந்த நிலையில் தான் டிவிட்டர் ஊழியர்கள் மத்தியில் எலான் மஸ்க் பேசியுள்ளார்.

முதல் சந்திப்பு

முதல் சந்திப்பு

டிவிட்டர் ஊழியர்கள் உடனான முதல் சந்திப்பில் எலான் மஸ்க், டிவிட்டர் விரைவில் புதிய மற்றும் அதிகப்படியான வருவாய் ஈட்ட துவங்கவில்லை என்றால் திவாலாகும் வாய்ப்பு உள்ளது எனக் கூறியுள்ளார். இது டிவிட்டர் ஊழியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

2 வாரம் மட்டுமே

2 வாரம் மட்டுமே

டிவிட்டர் நிறுவனத்தைக் கைப்பற்றி 2 வாரத்திற்குள் 50 சதவீத ஊழியர்கள் பணிநீக்கம், உயர் அதிகாரிகள் அடுத்தடுத்து வெளியேற்றம், புதிய டார்கெட், புதிய திட்டம், இதை விட முக்கியமாக அனைத்து ஊழியர்களுக்கும் வொர்க் ப்ரம் ஹோம் சலுகை நீக்கம் போன்ற முக்கியமான மாற்றங்களைச் செய்த பின்பு திவால் ஆகும் வாய்ப்பு இருப்பதாக எலான் மஸ் கூறுகிறார்.

ப்ளூ டிக்

ப்ளூ டிக்

டிவிட்டர் தளத்தில் உடனடியாக வருமானத்தைப் பெற வேண்டும் என்பதற்காகவே ப்ளூ டிக் வெரிபிபேகஷன்-க்கு 8 டாலர் கட்டணத்தை அறிவித்துள்ளார், இதேபோல் புதிய வருவாய் ஈட்டும் பணிகளை வீடியோ மற்றும் லாங் போஸ்ட் பிரிவில் கொண்டு வர முயற்சி செய்து வருகிறார் எலான் மஸ்க்.

13 பில்லியன் டாலர் கடன்

13 பில்லியன் டாலர் கடன்

டிவிட்டரை வாங்கும் போது எலான் மஸ்க் சுமார் 7 முக்கிய வால் ஸ்ட்ரீட் வங்கிகளிடம் இருந்து சுமார் 13 பில்லியன் டாலர் அளவிலான தொகையைக் கடனாகப் பெற்றுள்ளார். இதேபோல் எலான் மஸ்க் 100 சதவீத பங்குகளையும் வாங்கியதால் பங்குச்சந்தையில் இருந்து வெளியேற்றப்பட்டதால் பங்குச்சந்தையின் மூலம் எவ்விதமான இல்லை.

முதலீட்டாளர்கள்

முதலீட்டாளர்கள்

இதேபோல் மொத்த நிர்வாகக் குழு, முதலீட்டாளர்களை வெளியேற்றப்பட்டதால் இந்த 13 பில்லியன் டாலர் கடனை பகிர முடியவில்லை, இதுவும் டிவிட்டருக்கு பெரும் சுமையாக விளங்குகிறது. சமீபத்தில் எலான் மஸ்க் 4 பில்லியன் டாலர் மதிப்பிலான டெஸ்லாகப் பங்குகளை விற்பனை செய்தது குறிப்பிடத்தக்கது.

செலவுகள் குறைப்பு

செலவுகள் குறைப்பு

இதேபோல் எலான் மஸ்க் டிவிட்டர் நிறுவனத்தில் செலவுகளைக் கடுமையாகக் குறைக்க வேண்டும் எனத் தெரிவித்து உள்ளார். இதனால் 50 சதவீத ஊழியர்களைப் பணிநீக்கம் செய்யப்பட்டது மட்டும் அல்லாமல் தற்போது டிவிட்டர் ஊழியர்களுக்கு அலுவலகத்தில் அளிக்கப்படும் செலவுகளை அதிகளவில் குறைந்துள்ளார்.இதுமட்டும் அல்லாமல் ஒரு வாரத்திற்கு 80 மணிநேரம் பணியாற்ற வேண்டும் என்ற கட்டாயத்தை உருவாக்கியுள்ளார் எலான் மஸ்க்.

 கடன் அளவு

கடன் அளவு

பொதுவாக மோசமான நிதிநிலையில் இருக்கும் நிறுவனங்களுக்கு ஒரு டாலருக்கு 60 சென்ட் அடிப்படையில் அளிக்கப்படும் கடன்களைத் தற்போது டிவிட்டருக்கு பல நிதி நிறுவனங்களுக்கு வழங்க தயாராகியுள்ளது, அந்த அளவிற்கு டிவிட்டர் மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டு உள்லது என ப்ளூம்ரபெர்க் பத்திரிக்கை கூறுகிறது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+