ட்விட்டர் நிறுவனத்தில் பல்வேறு அம்சங்களை எலான் மஸ்க் மாற்ற நினைக்கிறார். குறிப்பாக பயனர் தரப்பிலும், வணிக தரப்பிலும் முக்கியமான அம்சங்களையும் எலான் மாற்ற முயற்சித்து வருகின்றார். இதன் காரணமாக நீண்ட காலத்திற்கு ட்விட்டரில் ஒரு கொந்தளிப்பான நிலையே தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இது குறித்து ட்விட்டர் இந்தியாவின் முன்னாள் தலைவர் மணீஷ் மகேஸ்வரி, ட்விட்டர் இனி இருக்குமா? அதன் எதிர்காலம் என்னவாகும்? என பலவற்றை குறித்து FE-க்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.
பரபரப்பு
எலான் மஸ்க் 44 பில்லியன் டாலருக்கு ட்விட்டரை கையகப்படுத்தியதில் இருந்தே, இது குறித்து பெரும் பரபரப்பாக பேச்சுகள் வலம் வந்த வண்ணம் உள்ளன. ஆரம்பத்தில் உயர் அதிகாரிகள் பணி நீக்கம் தொடங்கி அலுவலகங்கள் மூடுவது வரையில் மிக பரபரப்பான சூழலே காணப்படுகிறது.
குழப்பத்திற்கு மேல் குழப்பம்
குறிப்பாக கடந்த வாரத்தில் ஊழியர்களுக்கு அனுப்பிய மெயிலில் , ஊழியர்கள் கூடுதலான நேரம் உழைக்க வேண்டியிருக்கும். அப்படி உழைக்க தயாராக இல்லாவிடில் தாராளமாக வெளியேறிக் கொள்ளலாம் என அனுப்பினார். இதனால் இன்னும் ட்விட்டரில் குழப்பம் அதிகரித்தது. இதன் பிறகு அடுத்த நாளே ட்விட்டர் அலுவலகங்கள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
அழிவு பாதைக்கு செல்லலாம்?
ட்விட்டர் ஒரு பெரிய பிராண்ட். எனவே அது உடனடியாக அழியாது. எனினும் காலப்போக்கில் இது நடக்கலாம். எலான் மஸ்க் பிரச்சனைகளை உணர்ந்து அதனை மீட்க வேண்டும். பின்னர் ட்விட்டரை மீட்டெடுக்க ஒரு திடமான குழுவை இணைக்க வேண்டும். இதனை அவர் செய்யத் தவறினால், அழிவின் பாதைக்கு போகலாம்.
எலான் மஸ்கின் நோக்கம் என்ன?
எனக்கு மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது. இந்தளவுக்கு மிகப்பெரிய தொகைக்கு வாங்கியுள்ளீர்கள் என்றால் என் பகுத்தறிவற்ற முறையில் செயல்படுகிறீர்கள்? ஆனால் ட்விட்டர் வாங்கியதற்கு பின்னால் ஒரு பெரிய நோக்கம் இருக்கலாம். இது வியாபார நோக்கம் அல்ல, அப்படி இருந்திருந்தால், விளம்பரதாரர்கள் மற்றும் வருமானத்தின் நலனுக்காக அவர் செயல்பட்டிருப்பார். ஆனால் இது அப்படியில்லை. இது அரசியல் காரணமாக கூட இருக்கலாம். எலான் மஸ்கின் நடவடிக்கை ஆச்சரியமாக இருக்கிறது. ஆக ட்விட்டரின் எதிர்காலம் எப்படி இருக்கும் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
மாற்றங்கள் வேண்டும்
தற்போது ட்விட்டரின் வருவாய் 90% விளம்பரத்தின் அடிப்படையிலேயே இருந்து வருகின்றது. மேலும் கன்டென்ட் கிரியேஷனில் வாடிக்கையாளர்கள் கவனம் செலுத்த வேண்டும். இது மிக எளிதான ஒரு விஷயம்.
அவரைப் பொறுத்தவரை மொத்த பயனர்களில் குறைந்தது 10% பேர் தேர்வு செய்தால் மட்டுமே, விளம்பரத்தில் இருந்து சந்தா அடிப்படையிலானதாக வெற்றிகரமாக மாற முடியும். 1% பயனர்கள் என்றால் மட்டுமே சந்தாக்களை தேர்வு செய்தால் அது கடினமானதாக இருக்கும்.
இப்படி கூட இருக்கலாம்
எலான் மஸ்க் ப்ளூ டிக்கிற்கு 8 டாலர் கட்டணத்தினை அறிமுகப்படுத்திய பிறகு பிரீமியம் அடிப்படையிலான கன்டென்டினை கொடுக்க விரும்புவதாகவும் தெரிகிறது. அதற்காக அவர் பெரிய செய்தித்தாள், ட்ஜிட்டல் கன்டென்ட் சேனல்களுடன் இணைந்திருக்க வேண்டும். அவற்றை கட்டண சேவையில் பயனர்களுக்கு வழங்கலாம். அவர்கள் நீண்ட வீடியோக்களையும் பகிரலாம் என தெரிவித்துள்ளார்.
பணி நீக்கம் பற்றி
பணி நீக்கம் பற்றி பேசிய மகேஸ்வரி, இனியும் பணி நீக்கம் தொடரலாம் எண்றும் கூறியுள்ளார். அதோடு பணியமர்த்தல் என்பது தற்போதைக்கு இந்தியாவில் இருக்க வாய்ப்பில்லை.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications