டிவிட்டர் நிறுவனத்தில் எலான் மஸ்க் அடுத்தடுத்துப் பணிநீக்கம் செய்து வரும் நிலையில், அமெரிக்காவில் அதிக எண்ணிக்கையிலான ஊழியர்கள் பாதிக்கப்பட்டு வரும் நிலையில் பல்வேறு அணிகளில் இருக்கும் பல இந்திய ஊழியர்களும் இந்தப் பணிநீக்கத்தில் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
அமெரிக்க டிவிட்டர் அலுவலகத்தில் பணியாற்றுவோரில் 90 சதவீதம் பேர் ஹெச்1பி விசாவில் தான் பணியாற்றி வருகிறார்கள், தற்போது இந்த 90 சதவீத இந்திய ஊழியர்களுக்கும் 60 நாள் கெடு வந்துள்ளது.
டிவிட்டர் நிறுவனம்
டிவிட்டர் நிறுவனத்தைச் சுமார் 46.5 பில்லியன் டாலர் செலவில் எலான் மஸ்க் கைப்பற்றியுள்ள நிலையில் செலவுகளைக் குறைத்து அதிகப்படியான வருமானத்தை ஈட்ட வேண்டும் என்பதில் தீவிரமாக இருக்கும் எலான் மஸ்க் ஆரம்பம் முதல் அதிரடி முடிவுகளை எடுத்து வருகிறார்.
எலான் மஸ்க் பணிநீக்கம்
இதன் படி அமெரிக்காவில் மட்டும் அல்லாமல் உலகளாவிய வர்த்தகத்தில் இருக்கும் 50 சதவீத ஊழியர்களைப் பணிநீக்கம் செய்யும் திட்டத்தைத் தற்போது எலான் மஸ்க் செயல்படுத்தி வருகிறார். இந்த நடவடிக்கையில் அமெரிக்காவில் ஹெச்1பி விசா கீழ் பணியாற்றும் இந்திய மற்றும் உலக நாடுகளைச் சேர்ந்த டிவிட்டர் ஊழியர்களுக்குக் கடுமையான நெருக்கடி உருவாகியுள்ளது.
ஹெச்1பி விசா
அமெரிக்க அரசின் விதிமுறைகள் படி ஹெச்1பி விசா-வில் பணியாற்றும் ஊழியர் ஒருவர் 60 நாட்களுக்கு மேல் வேலை இல்லாமல் அந்நாட்டில் தங்க முடியாது. இந்த 60 நாள் கட்டுப்பாடு எல்-1, ஓ-1 விசா வைத்துள்ளவர்களுக்கும் பொருந்தும்.
60 நாள் கெடு
அதாவது டிவிட்டர் நிறுவனத்தில் பணியாற்றி வரும் ஹெச்1பி விசா ஊழியர்கள் அடுத்த 60 நாட்களுக்குள் வேறு வேலையைக் கட்டாயம் பெற வேண்டும் இல்லையெனில் இந்தியாவுக்குத் திருப்பி அனுப்பப்படுவார்கள்.
பெரிய சவால்கள்
இந்த 60 நாள் விதிமுறை அனைத்து ஹெச்1பி விசா ஊழியர்களுக்குப் பொருந்தும் என்பதால் இந்தியாவைச் சேர்ந்த டிவிட்டர் ஊழியர்கள் பெரும் சவால்களுக்குப் பின்பு டிவிட்டரை விட்டு வெளியேற்றப்பட்டாலும் அடுத்த 60 நாட்களுக்கு இதைவிடப் பெரிய சவால்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது.
7500 ஊழியர்கள்
டிவிட்டர் நிறுவனத்தில் பணியாற்றும் 7500 ஊழியர்களில் 625 முதல் 670 ஊழியர்கள் வரையில் ஹெச்1பி விசாவில் பணியாற்றுபவர்கள், அதாவது மொத்த ஊழியர்கள் எண்ணிக்கையில் 8 சதவீதம் என USCIS அமைப்பின் தரவுகள் கூறுகிறது.
50 சதவீத ஊழியர்கள் பணிநீக்கம்
எலான் மஸ்க் கட்டுப்பாட்டில் இருக்கும் டிவிட்டரில் தற்போது 50 சதவீத ஊழியர்கள் பணியில் இருந்து நீக்கப்பட்டு வரும் நிலையில் எத்தனை ஹெச்1பி விசா ஊழியர்கள் இந்தப் பணிநீக்கத்தால் பாதிக்கப்பட்டு உள்ளனர் என்ற விபரம் முழுமையாகக் கிடைக்கவில்லை.
ஹெச்1பி, எல் 1, ஓ 1 விசா
இந்த நிலையில் 60 நாட்களுக்குள் ஹெச்1பி, எல் 1, ஓ 1 விசா பெற்றவர்கள் வேலை பெறாமல் அமெரிக்காவை விட்டு வெளியேற்றப்பட்டால் திரும்பவும் லாட்டரி முறையில் தான் விசா பெற முடியும். இதனால் விசா காலம் இருந்தாலும் தாய் நாட்டிற்கு அனுப்பப்படுவார்கள்.
டிவிட்டர் ஊழியர்களுக்கு டிமாண்ட்
இதனால் பல ஊழியர்கள் பாதிக்கப்படும் நிலை இருந்தாலும், உலகம் முழுவதும் டிவிட்டரில் இருந்து வெளியேறும் ஊழியர்களுக்கு அதிகப்படியான டிமாண்ட் உள்ளது. டெக் நிறுவன சிஇஓ-க்கள் வேலைவாய்ப்பை இழந்த டிவிட்டர் ஊழியர்களை அழைத்து வருகின்றனர். இதனால் இந்திய ஹெச்1பி விசா ஊழியர்கள் இந்தியா திரும்பும் அளவுக்கு நிலை இருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது.
More From GoodReturns

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!



Click it and Unblock the Notifications