டிவிட்டர் நிறுவனத்தின் 100 சதவீத பங்குகளை மொத்தமாக எலான் மஸ்க் கைப்பற்றிய பின்னர் நிர்வாகக் குழுவை மொத்தமாக நீக்கிவிட்டு ஒற்றைத் தலைமை நிர்வாகத்திற்குக் கொண்டு வந்தார்.
இதன் மூலம் டிவிட்டர் நிறுவனத்தின் முழு அதிகாரத்தையும் எலான் மஸ்க் பெற்றது மட்டும் அல்லாமல் நிறுவனத்தில் எந்த முடிவாக இருந்தாலும் யாருடைய அனுமதியும் இல்லாமல் தனிப்பட்ட முறையில் எடுக்கும் அதிகாரத்தைப் பெற்றார்.
50% ஊழியர்களைப் பணிநீக்கம்
இந்த நிலையில் தான் எலான் மஸ்க டிவிட்டர் நிறுவனத்தின் செலவுகளைக் குறைக்கவும், தேவைக்கு அதிகமாக இருக்கும் ஊழியர்களைக் குறைக்கவும் 50 சதவீத ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டனர்.
எலான் மஸ்க்
டிவிட்டர் நிறுவனத்தில் பிரம்மாண்ட பணிநீக்கத்தை எலான் மஸ்க் அரங்கேற்றும் முன்பு உலகளவில் டிவிட்டர் ஊழியரின் போட்டோ உலகளவில் டிரெண்டானது. இந்த நிலையில் பிரம்மாண்ட பணிநீக்கத்திற்குப் பின்பு இந்த ஊழியரின் நிலை என்ன என்பது தான் பலரின் கேள்வியாக இருந்தது.
50 ஸ்பெஷல் ஊழியர்கள் குழு
எலான் மஸ்க் தலைமையிலான 50 ஸ்பெஷல் ஊழியர்கள் குழு முதல் இரண்டு நாளிலேயே அனைத்துப் பிரிவு ஊழியர்களுக்கும் அடுத்தச் சில நாட்களிலேயே செய்து முடிக்க வேண்டிய முக்கியமான பணிகளுக்கு டெட்லைன் கொடுத்தது.
கடுமையான டெட்லைன்
ஒரு மாதத்தில் செய்து முடிக்க வேண்டிய வேலையை ஒரு சில நாட்களில் முடிக்க வேண்டும் என்ற கடுமையான டெட்லைன் கொடுக்கப்பட்டது. இதனால் டிவிட்டர் ஊழியர்கள் தினமும் 12 மணிநேரமும், வாரத்தில் 7 நாளும் பணியாற்ற வேண்டிய கட்டாயம் உருவானது.
ஆபீஸ்-லேயே தூக்கம்
இந்த இக்கட்டான சூழ்நிலையில் மேனேஜர் பிரிவில் இருக்கும் ஒரு டிவிட்டர் ஊழியர் தனது டீம்-க்கு உதவி செய்யவும் டெட்லைன்-க்குள் பணியை முடிக்க வேண்டும் என்பதற்காகப் பாய், தலைகாணி உடன் டிவிட்டர் ஆபீஸ்-லேயே தங்கி பணியாற்றினார்.
எஸ்தர் க்ராஃபோர்டு
எஸ்தர் க்ராஃபோர்டு என்பவர் டிவிட்டர் அலுவலகத்திலேயே தூங்கும் புகைப்படத்தை, Twitter Spaces பிரிவின் ப்ராடெக்ட் மேனேஜர் எவன் ஜோன்ஸ் டிவிட்டரில் பதிவிட்ட நிலையில் எலான் மஸ்க்- ன் கீழ் பணியாற்றுவது எந்த அளவுக்குக் கடினம் என்பது அனைவருக்கும் புரிந்தது மட்டும் அல்லாமல் இந்தப் போட்டோ உலகளவில் வைரலானது.
ஸ்ரீராம் கிருஷ்ணன்
மேலும் எலான் மஸ்க் உடன் டிவிட்டரை மறுசீரமைப்பு செய்யும் முக்கிய உறுப்பினரும் தமிழருமான ஸ்ரீராம் கிருஷ்ணன், எஸ்தர் க்ராஃபோர்டு செய்யும் பணியைப் பாராட்டினார். இந்தப் போட்டோ வெளியான அடுத்தச் சில நாட்களில் தான் டிவிட்டர் நிறுவனத்தின் 50 சதவீத ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் அறிவிப்பு வெளியானது.
தப்பித்தார்
டிவிட்டர் நிறுவனத்தின் ப்ராடெக்ட் மேனேஜ்மென்ட் பிரிவின் டைரக்டர் ஆக இருக்கிறார் எஸ்தர் க்ராஃபோர்டு, எலான் மஸ்க்-ன் பணிநீக்க சூறாவளியில் இருந்து எஸ்தர் க்ராஃபோர்டு தப்பித்துள்ளார்.
டீம் ப்ளேயர்
இவர் தப்பிக்க முக்கியமான காரணம் எலான் மஸ்க் -ன் நிர்வாகக் குழு டிவிட்டர் ஊழியர்களுக்கு அளிக்கப்பட்ட கடுமையான பணிகளைச் சவாலாக ஏற்றுத் தனது நிர்வாகத்தின் கீழ் இருக்கும் அனைத்து அணிகளையும் பணியை முடிக்க உதவியது தான்.
ஆதரவு
இது மட்டும் அல்லாமல் இவரது அணியில் இருந்து பணிநீக்கம் செய்யப்பட்டு உள்ள ஊழியர்கள் வெளியேறிய பின்பும் மிகவும் ஆதரவாகவும், பாராட்டியும் டிவிட்டரில் பதிவிட்டது அனைவரையும் கவர்ந்துள்ளது.


Click it and Unblock the Notifications