ட்விட்டர் நிறுவனத்தினை கையகப்படுத்திய முதலே பணி நீக்கம் என்ற பெயரில் புயல், ட்விட்டர் நிறுவனத்தில் வீச தொடங்கியது. இதில் முதலாவதாக பாதிக்கப்பட்டதே ட்விட்டரின் தலைமை செயல் அதிகாரி உள்பட பல முக்கிய நபர்களும் தான். அன்று ஆரம்பித்த இந்த புயலானது இன்னும் கூட கரையை கடக்கவில்லை என்றே கூறவில்லை.
ஏனெனில் எந்த நேரத்தில் என்னென்ன சர்ச்சையை கிளப்போகிறாரே என்ற அச்சம் எழுந்தது.
பகுதி ஊழியர்களை ட்விட்டர் பணி நீக்கம் செய்தது எனில், சிலர் குழப்பத்தினாலேயே தாங்களே தங்களது வேலையை ராஜினாமா? செய்து விட்டு ஓடினர்.
கோல்டு, ப்ளூ, கிரே பேட்ஜ்
மொத்தத்தில் அவ்வப்போது இதுபோன்ற பல குளறுபடிகள் ட்விட்டரில் நடந்து கொண்டு தான் உள்ளது. . ஆரம்பத்தில் ட்விட்டரின் ப்ளூ டிக்கிற்கு கட்டணம் விதித்த ட்விட்டர், பின்னர் அது சரிவரவில்லை என இடை நிறுத்தம் செய்தது. எனினும் ஒவ்வொன்றாக ஒவ்வொரு திட்டம் குறித்தும் தீவிரமாக ட்விட்டர் நிறுவனம் ஆலோசித்து வருகின்றது எனலாம்.
மூன்று வண்ணங்களில் டிக்
முன்னதாக கடந்த ஆண்டு இறுதியிலேயே இது குறித்து அறிவித்த எலான் மஸ்க், இந்த ப்ளு டிக் கிற்கு கட்டணம் செலுத்தி பெற்றுக் கொள்ளலாம் என அறிவித்தார். அத்தோடு மூன்று கலர்களில் வெரிபைடு டிக்கினை அறிமுகப்படுத்தினார். இன்று ப்ளூ, இரண்டாவது கோல்டு கலர், மூன்றாவது கிரே கலராகும்.
கோல்டு கலருக்கு கட்டணம்?
இதில் ப்ளூ தனி நபர்களுக்கான குறிக்காட்டியாகவும், இதே கோல்டு நிறமானது வணிக ரீதியானது என்றும், கிரே அரசு ரீதியானது என்றும் வகைப்படுத்தியது.
இதில் ப்ளூ டிக்கிற்கு முன்னதாக மாதம் ஆன்ட்ராய்டு மொபைலுக்கு 8 டாலர்கள் கட்டணத்தை விதித்த ட்விட்டர், இதனை iOS-ல் 11 டாலரும் செலுத்த வேண்டியிருந்தது. இதில் கோல்டு பேட்ஜ்களுக்கு மாதம் நிறுவனங்கள் 1000 டாலர்களாக உயர்த்த திட்டமிடுவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
@Matt Navarra ட்வீட்
இது குறித்து ட்விட்டர் அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் எதனையும் வெளியிடவில்லை எனலாம். மாறாக சமூக வலைதளங்களில் இது குறித்தான தகவல்கள் பரவி வருகின்றன.
இது குறித்து @Matt Navarra தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இது குறித்து நிறுவனங்களுக்கும் மின்னஞ்சல் அனுப்புவதாகவும் தெரிகிறது. இணைக்கப்பட்ட வணிகங்களுக்கு கூடுதலாக 50 டாலர்கள் கட்டணமாக விதிக்கப்படுவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
பேட்ஜ் அகற்றப்படுமா?
தி இன்பர்மேஷன் அறிக்கையின் படி, 1000 டாலர்கள் செலுத்த விருப்பம் இல்லாத நிறுவனங்களுக்கு, இந்த பேட்ஜ் அகற்றப்படும் என தெரிகிறது. இது நிறுவனத்தின் வருவாயை அதிகரிக்கும் ஒரு முடிவாக இருக்கலாம். மேலும் போலியான பதிவுகளையும் இதன் மூலம் அகற்ற முடியும் என நம்பப்படுகின்றது.
ஒப்புக் கொள்வார்களா?
ட்விட்டர் நிறுவனத்தை 44 பில்லியன் டாலர்களுக்கு கையகப்படுத்த அந்த சமயத்தில், எலான் மஸ்க் தனது ஒவ்வொரு நாளும் 4 மில்லியன் டாலர் இழப்பு ஏற்படுவதாகவும், ஆக ட்விட்டரை நஷ்டத்தில் இருந்து மீட்க அவ்வப்போது இது போன்ற நடவடிக்கைகள் இருக்கும் என்றும் கூறியிருந்தது நினைவுகூறத்தக்கது. அதோடு இதனை செயல்படுத்தி பார்ப்போம். சரி வந்தால் அப்படியே வைத்துக் கொள்ளலாம். இல்லையெனில் வேறு திட்டத்தினை தொடங்கலாம் என கூறியிருந்தது நினைவுகூறத்தக்கது.
இது நல்ல விஷயம் தான் என்றாலும், 1000 டாலர்களுக்கு நிறுவனங்கள் ஒப்புக் கொள்ளுமா? நிறுவனங்களின் பதில் என்ன? பொறுத்திருந்து தான் பார்ப்போமே?
More From GoodReturns

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

90ஸ் கிட்ஸ்களின் Gmail பிரச்சினைக்கு தீர்வு தந்த சுந்தர் பிச்சை: பழைய ஐடி-க்கு குட்பை..!!

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!



Click it and Unblock the Notifications